கடைசி நிமிடத்தில் விமான டிக்கெட் புக் செய்யும் போது உங்களுக்கு எவ்வளவு கூடுதல் செலவாகிறது தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு வாரத்திற்குள் பயணம் செய்வதற்கு விமான டிக்கெட் புக் செய்ய 14 சதவீத இந்தியர்கள் 22 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் செலுத்தி டிக்கெட்களைப் புக் செய்கின்றனர் என்று KAYAK.co.in பயணத் தேடல் தளம் கூறியுள்ளது.

இதுவே 2018-ம் ஆண்டிற்குள் 33 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலைக்கு இந்திய விமானப் பயணிகள் தள்ளப்படுவார்கள் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டணம்

கூடுதல் கட்டணம்

இந்தியாவில் இருந்து பாங்காக், துபாய் மற்றும் பாலி போன்ற இடங்களுக்கு ஒரு வாரத்திற்கு முன் பயணம் செய்யும் போது சராசரியாக 18 சதவீதம், 22 சதவீதம் மற்றும் 33 அதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

கடைசி நிமிட புக்கிங் செய்பவர்கள் சராசரியாக 10 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணம் செய்கின்றனர். குறிப்பாகச் சிங்கப்பூர் செல்லும் போது 13 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

விடுமுறை

விடுமுறை

இந்தியர்கள் அதிகமாக விடுமுறைக்கு விமானப் பயணங்களைப் பயன்படுத்துகின்றனர். சராசரி டிக்கெட் கட்டணத்தினை விட இந்தியர்களைக் கடைசி நிமிட புக்கிங்கின் போது கூடுதலாகக் கட்டணத்தினைச் செலுத்துகின்றனர்.

முன்கூடியே திட்டமிடுங்கள்

முன்கூடியே திட்டமிடுங்கள்

டிக்கெட் கட்டணத்தினைக் குறைக்க வேண்டும் என்றால் முன்கூடியே திட்டமிட்டு புக் செய்ய வேண்டும் என்று காயாக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகி அபிஜித் மிஷ்ரா கூறினார்.

2018 பயணங்கள்

2018 பயணங்கள்

இந்தியர்கள் 2018-ம் ஆண்டு அதிகமாகப் பாங்காக், துபாய், பாலி, சிங்கப்பூர், நியூ யார்க் மற்றும் கோவா உள்ளிட்ட இடங்களில் பயணம் செய்ய விரும்பித் தேடுகின்றனர் என்று ஆய்வில் கூறியுள்ளது.

காயாக்

காயாக்

காயாக் இணையதளத்தில் விலை விழிப்புட்டள்கள், விலை கணிப்புகள் போன்றவை பெற்று எளிதாக டிக்கெட் புக் செய்யலாம். இதுபோன்ற கருவிகள் மூலம் பயனர்கள் தங்களது பயணங்களைக் குறைந்த விலையில் எளிதாகத் திட்டமிடலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Booking flight tickets on last minute will cost you more

Booking flight tickets on last minute will cost you more
Story first published: Sunday, December 3, 2017, 19:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X