முகேஷ் அம்பானிக்கு போட்டியாக பாபா ராம்தேவின் புதிய திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, மிகப்பெரிய முதலீட்டில் டெலிகாம் துறையில் இறங்கிய பின், தற்போது கல்வி, விவசாயம் மற்றும் சுகாதாரத் துறையில் இறங்கத் திட்டமிட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

 

இந்நிலையில் நுகர்வோர் சந்தையில் மட்டும் இருந்த பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தற்போது புதிய திட்டத்துடன் புதிய வர்த்தகத்தில் கால் பதிக்க முடிவு செய்துள்ளார்.

பாபா ராம்தேவ்

பாபா ராம்தேவ்

நுகர்வோர் சந்தையில் பெரிய அளவிலான வர்த்தகச் சந்தையைப் பெற்று, முன்னணி கார்பரேட் நிறுவனங்களின் வர்த்தகத்தைத் தவிடுபொடியாக்கிய பாபா ராம்தேவ்-இன் பதஞ்சலி நிறுவனம், சமீப காலமாக இத்துறையை விட்டு மாறுபட்ட துறையில் வர்த்தகம் செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறது

செக்யூரிட்டி..

செக்யூரிட்டி..

இதன் படி பாபா ராம்தேவ் செக்யூரிட்டி பிரிவிலும், டெக்ஸ்டைல், பால் பொருட்கள் தயாரிப்பு எனப் புதிய வர்த்தகத்தில் இறங்கிய நிலையில் தற்போது தனது வர்த்தகச் சந்தை மற்றும் பிரிவுகளைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முன்வந்துள்ளார்.

சோலார்

சோலார்

இதன் படி தற்போது பாபா ராம்தேவ் அவரின் இயற்கை, ஆயுர்வேத கொள்கையைச் சார்ந்து மின்சார உற்பத்தித் துறையில் இறங்க முடிவு செய்துள்ளார். இதன் படி பதஞ்சலி நிறுவனம்ம சோலார் மின்சாரம் தயாரிப்புக்கான உபகரணங்களைத் தயாரிக்கும் பணியில் இறங்க முடிவு செய்துள்ளார்.

ஆச்சார்யா பாலகிருஷ்ணா
 

ஆச்சார்யா பாலகிருஷ்ணா

பதஞ்சலி சோலார் பிரிவில் இறங்குவதும் சுவதேசி திட்டம் தான். இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரத்தைக் கொண்டு வர முடியும், இதைக் கண்டிப்பாக நாங்கள் நிறைவேற்றுவோம் என்று பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தின் நிர்வாகத் தவைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

உள்கட்டமைப்புத் துறை..

உள்கட்டமைப்புத் துறை..

பதஞ்சலி நிறுவனம் நுகர்வோர், பாதுகாப்பு, டெக்ஸ்டைல் போன்ற துறைகளில் வர்த்தக முயற்சி செய்துள்ள நிலையில் இப்புதிய சோலார் திட்டத்தின் மூலம் முதல் முறையாக இன்பராஸ்டக்சர் துறையில் இறங்க உள்ளார்.

2006 முதல்..

2006 முதல்..

2006ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்நிறுவனம் இந்திய சந்தையில் மிகவும் குறைந்த காலகட்டத்தில் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்று அசத்தியுள்ளது.

2014-15ஆம் நிதியாண்டில் வெறும் 2,006 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்ற பதஞ்சலி நிறுவனம் மார்ச் 31, 2017இல் 10,561 கோடி ரூபாய் என்ற 5 மடங்கு அதிகமான வருவாயைப் பெற்றுள்ளது.

மேலும் மார்ச் 2018இல் இதன் அளவு 20,000 -25,000 கோடி ரூபாய் வரையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

30 சதவீத மானியம்..

30 சதவீத மானியம்..

இந்தியாவில் சோலார் உற்பத்தி திட்டத்தின் கீழ் பதஞ்சலி துவங்க இருக்கும் புதிய உற்பத்தி நிறுவனத்திற்கு 30 சதவீதம் வரையிலான மானியம் பெறும்.

நிறுவன கைப்பற்றல்..

நிறுவன கைப்பற்றல்..

2017ஆம் ஆண்டுத் துவக்கத்தில் பதஞ்சலி நிறுவனம் அட்வான்ஸ் நேவிகேஷன் அண்ட் சோலார் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தைக் கைப்பற்றி வருகிறது.

இந்நிறுவனம் தற்போது 120மெகாவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யும் உபகரணங்களைத் தயாரித்து வருகிறது.

100 கோடி ரூபாய் முதலீடு

100 கோடி ரூபாய் முதலீடு

இந்த நிறுவனத்தின் தயாரிப்பு அளவுகளை அதிகரித்து அதன் வர்த்தகத்தை இந்தியா முழுவதும் பதஞ்சலி வர்த்தக முறையிலேயே விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது பதஞ்சலி நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம்.

இதற்காகப் பதஞ்சலி இந்நிறுவனத்தில் 100 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்து நொய்டாவில் பிரத்தியேக உற்பத்தி ஆலையை அமைக்கும் பணிகள் நடத்து வருகிறது.

2 மாதம்

2 மாதம்

இப்புதிய தொழிற்சாலை அடுத்த 2 மாதங்களில் முழுமையான செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது. இந்நிலையில் அடுத்த 5 மாதத்தில் இந்தியா முழுவதும் பதஞ்சலி நிறுவனத்தின் சோலார் பேனல்கள் விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது.

மத்திய அரசு திட்டங்கள்

மத்திய அரசு திட்டங்கள்

அரசின் "rent a roof" திட்டத்தின் மூலம் 2022ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் 40 ஜிகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தனிமனிதன் ஒருவருக்கு 1,200 கிலோவாட் என்ற சராசரி அளவை ஈடும் செய்யும் அளவில் நாட்டில் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

சீன தயாரிப்புகள்

சீன தயாரிப்புகள்

சீனாவில் தயாரிக்கப்பட்ட சோலார் பேனல்களின் தரம் மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் இதனைக் கட்டுமான நிறுவனங்கள் வாங்க விருப்பம் இல்லை என் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட சோலார் பேனல்கள் தற்போது அதிக விலை தள்ளுபடியுடன் பொதுச் சந்தையில் விற்கப்பட்டு வருகிறது.

ஒரு சோலார் மின்சார உற்பத்தி தளத்தை அமைப்பதில் 60 சதவீத தொகை சோலார் பேனல்களில் செலவிடப்படுகிறது.

சீன நிறுவனங்கள்

சீன நிறுவனங்கள்

சோலார் பேனல்களைத் தயாரிக்கும் சீன நிறுவனங்கள் வருடத்திற்கு 70 ஜிகாவாட் மின்சாரத்தைத் தயாரிக்கும் அளவிற்குச் சோலார் பேனல்களை உற்பத்தி செய்து வருகிறது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Baba Ramdev’s Patanjali step into new business

Baba Ramdev’s Patanjali step into new business
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X