இந்தியாவில் 45 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளனர்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லஞ்ச ஒழிப்பு அமைப்பான டிரான்ஸ்பிரென்சி இண்டர்நேஷ்னல், இந்தியாவின் 11 மாநிலங்களில் செய்த ஆய்வில் 45 சதவீதம் பேர் தங்களது பணிகளை முடிப்பதற்காக லஞ்சம் கொடுத்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

 

கடந்த வருடம் செய்யப்பட்ட இதே ஆய்வில் இதன் அளவீடு 43 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மக்கள் கருத்து..

மக்கள் கருத்து..

இந்த ஆய்வில் ஈடுபட்டு இருந்த 34,696 பேரில் 37 சதவீதம் பேர் முந்தைய வருடங்களை விடவும் கடந்த வருடம் ஊழல் மற்றும் லஞ்சம் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர். மேலும் 14 சதவீதம் பேர் குறைந்துள்ளது என்றும், மீதமுள்ளவர்கள் எண்ணிக்கை மற்றும் அளவில் பெரிய மாற்றமில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

முக்கிய மாநிலங்கள்

முக்கிய மாநிலங்கள்

இந்தி ஆய்வின் படி மேற்கு வங்காளம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் அதிகளவிலான ஊழல் மற்றும் லஞ்சம் இருப்பதாகவும் இந்த ஆய்வில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 18 சதவீதம் பேர் ஊழல் மற்றும் லஞ்சம் அளவீடுகள் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

டெல்லி
 

டெல்லி

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருக்கும் டெல்லியில் முற்றிலும் கலவையான பதில்கள் இந்த ஆய்வில் கிடைத்துள்ளது.

ஊழல் மற்றும் லஞ்சம் அதிகரித்துள்ளது என்ற 33 சதவீத பேரும், குறைந்துள்ளது என்று 28 சதவீத பேரும், மாற்றமில்லை என்று 38 சதவீத பேரும் பதில் அளித்துள்ளனர்.

ஊழல் மற்றும் லஞ்சம் குறைந்துள்ளது

ஊழல் மற்றும் லஞ்சம் குறைந்துள்ளது

இந்த ஆய்வு நடத்தப்பட்ட 11 மாநிலங்களில் ஊழல் மற்றும் லஞ்சம் அதிகளவில் குறைந்துள்ளதாக உத்திர பிரதேசம் மக்கள் தெரிவித்துள்ளார்.

முக்கிய இடங்கள்

முக்கிய இடங்கள்

இந்த ஆய்வின் மூலம் உள்ளூர் அரசு நிர்வாகம், நகராட்சி, போலீஸ், வரி, ரியல் எஸ்டேட், மின்சாரம் போன்ற மக்கள் அதிகளவில் தங்களுக்கான சேவையைப் பெறும் இடத்தில் இருந்து அனுபவத்தைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது என இந்த அமைப்பின் பங்கஜ் குமார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு

மத்திய அரசு

இந்த ஆய்வில் ஈடுப்பவர்களில் 9 சதவீதம் பேர் மத்திய அரசு அமைப்புகளில் லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதில் பிஎப், வருமான வரி, சேவை வரி, ரயில்வே ஆகிய துறைகள் அடக்கம்.

தனியார் அமைப்பு

தனியார் அமைப்பு

மேலும் 2 சதவீதம் பேர் தனியார் நிறுவனங்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், 5 சதவீதம் பேர் பள்ளி சேர்க்கை, என்ஜிஓ ஆகிய அமைப்புகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

45 percent Indians paid bribe in past one year

45 percent Indians paid bribe in past one year - Tamil Goodreturns | இந்தியாவில் 45 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்துள்ளனர்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X