என்னது ரூ.600 கோடியா.. உண்மையிலேயே ஹாட்டான ஜோடிதான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய தேதிக்கு இந்தியாவின் ஹாட்டான ஜோடி என்றால் விராட் கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் தான். இவர்களைப் பற்றிய காதல் கிசுகிசு, பிரேக் அப் செய்திகள் அதிகளவில் பரவி வந்த நிலையில், எந்தவிதமான ஆர்ப்பாட்டமும், முன் அறிவிப்பும் இல்லாமல் இத்தாலியில் சென்று இந்தக் காதல் ஜோடி திருமணம் செய்துள்ளனர்.

 

திருமணத்திற்கு பின்பும் தங்களது பணிகளை எவ்விதமான தடையுமின்று செய்து வரும் விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடியின் சொத்து மதிப்பு மற்றும் அவர்களது வருமானம் குறித்துத் தகவல் கிடைத்துள்ளது.

இந்த ஜோடியின் மொத்த சொத்து மதிப்பைக் கேட்டால் ஆடிப்போயிருவீங்க..

ஒரு திரைப்படம்

ஒரு திரைப்படம்

பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகையாக விளங்கும் அனுஷ்கா சர்மா, ஷாருக்கான், அமிர்கான், சல்மான் கான் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றிப்பெற்றள்ள நிலையில் குறைந்த காலகட்டத்திலேயே இவரின் சம்பளம் மளமளவென உயர்ந்துள்ளது.

தற்போது அனுஷ்கா சர்மா ஒரு படத்திற்கு 9 கோடி ரூபாய்ச் சம்பளமாக வாங்குகிறார். நயன்தாராவை விடவும் பல மடங்கு அதிகம்.

விளம்பரம்

விளம்பரம்

அனுஷ்கா சர்மா திரைப்படத்தில் வெற்றிபெற்றதை அடுத்து விளம்பரத்திலும் நடித்து வருகிறார். சில விளம்பரங்களில் விராட் கோஹ்லி உடனும் இணைந்து நடித்துள்ளார்.

இப்படி ஒரு பொருளின் விளம்பரத்தில் நடிக்க அனுஷ்கா சர்மா வாங்கும் தொகை 4 கோடி ரூபாய்.

அனுஷ்காவின் வீடு
 

அனுஷ்காவின் வீடு

இன்றைய மதிப்பில் அனுஷ்கா வசித்து வரும் வீட்டின் மதிப்பு மட்டும் 9 கோடி ரூபாய். இந்த வீடு 2014ஆம் ஆம் 6 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 மொத்த சொத்து மதிப்பு

மொத்த சொத்து மதிப்பு

வீடு, சம்பளம், விளம்பரத்தில் வரும் வருமானம் மற்றும் இதர சொத்துக்களுடன் அனுஷ்கா சர்மாவின் சொத்து மதிப்பு 220 கோடி ரூபாய்.

வருடத்திற்கு 121 கோடி ரூபாய்

வருடத்திற்கு 121 கோடி ரூபாய்

கிரிக்கெட் சூப்பர்ஸ்டாராக உருவெடுத்திருக்கும் விராத் கோஹ்லி விளம்பரம், கிரிக்கெட் போட்டி எனப் பல வழிகளில் வருடத்திற்கு 121 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் சம்பாதித்து வருகிறார்.

கிரிக்கெட் போட்டி

கிரிக்கெட் போட்டி

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட ஒரு நாளுக்கு 3,00,000 ரூபாய் பெறுகிறார் விராத் கோஹ்லி. அதேபோல் டெஸ்ட் போட்டியில் விளையாட 5,00,000 ரூபாய், டி20 போட்டிக்கு 2,00,000 ரூபாய் பெற்று வருகிறார்.

இந்தத் தொகை அவரது திறனுக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்

ஐபிஎல்

உலகம் முழுவதும் பெரிய அளவில் பிரபலமான ஐபிஎல் போட்டியில் விளையாட ஒரு சீசனுக்கு 11 கோடி ரூபாய் பெறுகிறார்.

விளம்பரம்

விளம்பரம்

இந்தியாவில் சினிமா நடிகை மற்றும் நடிகர்களுக்கு இணையாக விளையாட்டு வீரர்களும் விளம்பரத்தில் நடித்து வருகின்றனர். அதிலும் முக்கியமான சச்சின் நடித்த பல பொருட்களின் விளம்பரம் வெற்றி அடைந்த காரணத்தால் இந்தப் பொருட்களின் விற்பனை உச்சத்தை அடைந்தது.

அந்த வரிசையில் கோஹ்லியும் உள்ளார். ஒரு பொருளின் விளம்பரத்திற்கு இவர் வாங்கும் தொகை 16 கோடி ரூபாய்.

விராத் கோஹ்லி மொத்த சொத்து..

விராத் கோஹ்லி மொத்த சொத்து..

விளம்பரம், கிரிக்கெட் ஆகிய இரண்டு பிரிவில் இதுநாள் வரையில் விராத் கோஹ்லி சம்பாதித்த மொத்த சொத்து மதிப்பு 382 கோடி ரூபாய்.

 602 கோடி ரூபாய்

602 கோடி ரூபாய்

இந்நிலையில் விருஷ்கா தம்பதியினரின் மொத்த சொத்து மதிப்பு 602 கோடி ரூபாய்.

விருஷ்கா திறமை, புகழ், அழகு ஆகியவற்றில் மட்டும் அல்லாமல் பண விஷயத்திலும் தாறுமாறுதாங்க.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

virat kohli anushka sharma: Net Worth of India's Hottest Couple

virat kohli anushka sharma: Net Worth of India's Hottest Couple
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X