முகேஷ் அம்பானியை விட 2 மடங்கு வளர்ச்சி கண்ட அமெரிக்க தொழிலதிபர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2017ஆம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், வர்த்தகச் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களைப் பிளாஷ்பேக் 2017ஆகப் பார்த்து வருகிறோம். இந்த வருடம் வர்த்தகச் சந்தையில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பாக ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பினால் ஏற்பட்ட தாக்கம் என ஒவ்வொன்றும் இந்திய பொருளாதார வளர்ச்சியைக் கூறுப்போட்டது என்றே சொல்லவேண்டும்.

ஆனால் பெரும் பணக்காரர்களுக்கு அப்படியில்லை, இந்தியாவின் முன்னணி பணக்காரர்களுக்கும் சரி, உலகப் பணக்காரர்களுக்கும் சரி 2017 அமோகமாகவே இருந்து உள்ளது.

2017ஆம் ஆண்டு அதிகம் சம்பாதித்த பணக்காரர்கள்.

பிரான்கோஸ் பினால்டு மற்றும் குடும்பம்

பிரான்கோஸ் பினால்டு மற்றும் குடும்பம்

ஓவியம், பண்டைக் காலப் பொருட்களை ஏலம் விடும் பிரான்கோஸ் பினால்டு அக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் உலகின் முன்னணி ஆடம்பர பிராண்டுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கீரிங் (Kering) நிறுவனத்தின் தலைவரான பிரான்கோஸ் பினால்டு மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு 2017ஆம் ஆண்டில் 12.5 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது.

இதன் மூலம் இவர்களது மொத்த சொத்து மதிப்பு 27.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

லேரி எலிசன்

லேரி எலிசன்

1977ஆம் ஆண்டு லேரி எலிசன் துவங்கிய ஆரக்கிள் நிறுவனம் இன்று 202 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகச் சந்தையை உருவாக்கியுள்ளது. 2017ஆம் ஆண்டின் டிசம்பர் 14 வரையிலான காலத்தில் ஆரக்கிள் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 30 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

இந்த நிறுவனத்தில் அதிகளவிலான பங்குகளை வைத்துள்ள லேரி எலிசன் அவர்களின் சொத்து மதிப்பும் இதன் மூலம் 13.3 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து மொத்த சொத்து மதிப்பு 61 பில்லியன் டாலர் அளவை அடைந்துள்ளது.

 

யாங் ஹூயான்

யாங் ஹூயான்

சீனாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் ஒன்றான கன்ட்ரி கார்டன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவரை இறந்த காரணத்தால் இவரது சொத்து மற்றும் பங்கு இருப்புகள் அனைத்தும் அவரது மகள் யாங் ஹூயான் அவர்களுக்கு வந்தது. இதனால் யாங் ஹூயான் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.

2017ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் பங்குமதிப்பு 201 சதவீதம் வரையில் உயர்ந்து. இந்நிறுவனத்தின் 57 சதவீத பங்குகளை யாங் ஹூயான் வைத்துள்ள காரணத்தால் 2017இல் இவரது சொத்து மதிப்பு 3 மடங்கு உயர்ந்தது.

இந்த ஆண்டு மட்டும் யாங் ஹூயான் சொத்து மதிப்பு 14.8 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது. இதன் மூலம் இவரது மொத்த சொத்து மதிப்பு 22.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

 

கார்லோஸ் ஸ்லிம் மற்றும் குடும்பம்

கார்லோஸ் ஸ்லிம் மற்றும் குடும்பம்

டெலிகாம், முதலீடு எனப் பல துறையில் முதலீடு செய்தும் வரும் கார்லோஸ் ஸ்லிம், மெக்சிகோவின் வாரன் பபெட் என அழைக்கப்படுகிறார்.

இவரது அமெரிக்க மோவில் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 50 சதவீதம் வரையில் உயர்ந்துள்ள காரணத்தால் இவரது சொத்து மதிப்பு 2017ஆம் ஆண்டில் 15.3 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து மொத்த சொத்து மதிப்பு 65.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

மேலும் இவர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் 17 சதவீத பங்குகளை வைத்துள்ளார்.

 

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக விளங்கும் முகேஷ் அம்பானி, ஜியோவின் அறிமுகம் மற்றும் அதன் வெற்றியின் காரணமாக 2017ஆம் ஆண்டில் இவரது சொத்து மதிப்பில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

2017ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 65 சதவீதம் வரையில் உயர்ந்துள்ள காரணத்தால், இவரது சொத்து மதிப்பு இந்த ஒரு வருடத்தில் மட்டும் 18 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

இதன் மூலம் இவரது மொத்த சொத்து மதிப்பு 41.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

 

மா ஹவாடெங்

மா ஹவாடெங்

சீனாவின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான டென்சென்ட், டெக் துறையில் மட்டும் அல்லாமல் மொபைல் ஆப்ஸ், ஈகாமர்ஸ், முதலீடு எனப் பல்வேறு துறைகளில் இயங்கி வருகிறது. சீனாவின் புகழ்பெற்ற வீசேட் செயலி கூட இந்நிறுவனத்துடையது தான்.

இந்தியாவில் இந்நிறுவனம் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் 12 சதவீத பங்குகளில் முதலீடு செய்துள்ளது. 2017ஆம் ஆண்டு டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது.

2017ஆம் ஆண்டில் மட்டும் டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் மா ஹவாடெங்-இன் சொத்து மதிப்பு 21.8 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் இவரது மொத்த சொத்து மதிப்பு 44.3 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

 

மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க்

இவரைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. பேஸ்புக் நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க் அடுத்தத் தலைமுறைக்குத் தேவையான தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதுமட்டும் அல்லாமல் பேஸ்புக் மூலம் எப்படியெல்லாம் பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதிலேயே 2017ஆம் ஆண்டை செலவிட்டார் மார்க்.

இதன் பலனாக 2017ஆம் ஆண்டில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 60 சதவீதம் வரையில் உயர்ந்து மார்க் ஜூக்கர்பெர்கின் சொத்து மதிப்பு இந்த வருடம் 23.6 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது.

இதனுடன் இவரது மொத்த சொத்து மதிப்பு 72 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

 

 பெர்னார்டு அர்னால்டு

பெர்னார்டு அர்னால்டு

லூயிஸ் விட்டான் மற்றும் டியார் நிறுவனத்தின் பங்குகளை அதிகவில் வைத்திருக்கும் லூயிஸ் விட்டான் நிறுவனத்தின் தலைவரான பெர்னார்டு அர்னால்டு-இன் பங்கு இருப்பின் மதிப்பு 2017ஆம் ஆண்டில் 52 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

இதன் மூலம் இவரது மொத்த சொத்து மதிப்பு 63.9 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது.

 

ஹூயி கா யான்

ஹூயி கா யான்

உலகின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபராக விளங்கும் ஹூயி கா யான்-இன் சொத்து மதிப்பு 2017ஆம் ஆண்டில் 400 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

ஹூயி கா யான் தலைமை வகிக்கும் ஏவர்கிரான்டே குரூப் நிறுவனத்தின் ஜூலை மாத முடிவுகளில் வருவாயில் 115%, மொத்த லாபத்தில் 224% வளர்ச்சியைக் காட்டியதால் இந்நிறுவனத்தின் பங்குகள் 400 சதவீதம் வரையில் உயர்ந்தது.

இதன் காரணமாக ஹூயி கா யானின் சொத்து மதிப்பு இந்த வருடம் 27.4 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து, மொத்த சொத்து மதிப்பு 36.5 பில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்தை அடைந்தது.

 

 ஜெப் பீசோஸ்

ஜெப் பீசோஸ்

உலக நாடுகளில் அமேசான் நிறுவனத்தின் ஈகாமர்ஸ் சேவைகள் ஒருபக்கம் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், மறுபுறம் இந்நிறுவனத்தின் கிளவுட் சேவைகள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகிறது.

இதன் காரணமாக அமேசான்.காம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு தாறுமாறாக உயர்ந்து வருகிறது. 2017ஆம் ஆண்டில் பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளி முதல் முறையாக உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெயரை பெற்றுள்ளார் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பீசோஸ்.

2017ஆம் ஆண்டில் மட்டும் இவரது சொத்து மதிப்பு 33 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து மொத்த சொத்து மதிப்பு 98.6 பில்லியன் டாலர் என்ற அளவை அடைந்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Richer Got More Richer In 2017: World's Biggest Gainers

Richer Got More Richer In 2017: World's Biggest Gainers
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X