யார் இந்த ஓபி சைனி? 2ஜி வழக்கிற்கும் இவருக்கும் என்ன சமந்தம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முன்னால் டெலிகாம் துறை அமைச்சரான ஆ ராசா மற்றும் திமுகத் தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உட்பட வழக்கில் தொடர்புடைய அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர் என்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

 

2ஜி வழக்கில் இடம்பெற்று இருந்த பிறர் மட்டும் இல்லாமல் மூன்று முக்கிய நிறுவனங்களும் இந்த வழக்கில் தற்போது விடுதலை ஆகியுள்ளனர்.

சிபிஐ குற்றச்சாட்டு

சிபிஐ குற்றச்சாட்டு

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஒதுக்கீடு செய்ததில் ரூ.30,984 கோடி இழப்பு ஏற்பட்டதாகச் சிபிஐ குற்றஞ்சாட்டி இருந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் 2012 பிப்ரவரி 2 ம் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் இந்த வழக்கை மேல் முறையீட்டிற்குச் சென்ற போது உச்ச நீதிமன்ற ஸ்பெஷல் பெஞ்ச் ஒன்று அமைத்து விசாரிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டதை அடுத்து நீதிபதி சைனி தலைமையில் சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டுத் தற்போது தீர்ப்பு வந்துள்ளது.

டெல்லி போலீஸ் துணை இன்ஸ்பெக்டர்

டெல்லி போலீஸ் துணை இன்ஸ்பெக்டர்

1981-ம் ஆண்டு டெல்லி காவல் துறையில் துணை இன்ஸ்பெக்டராகப் பணியில் சேர்ந்தவர், செங்கோட்டைத் துப்பாக்கி சுடு வழக்கில் விசாரணையை வழங்கிய பின்னர்ச் சிறப்புப் பொடா நீதிபதியாகப் புகழ் பெற்றார்.

மாஜிஸ்ட்ரேட் தேர்வு
 

மாஜிஸ்ட்ரேட் தேர்வு

ஹரியானா காவல் துறையில் பணியில் இருந்து 57 வயதில் வெளியான சைனி 6 வருடம் போராடி நீதிபதி ஆகினார். அந்த முறை தேர்வு எழுதியவர்களில் இவர் மட்டுமே தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

2ஜி வழக்கு முன்பு

2ஜி வழக்கு முன்பு

2ஜி வழக்கிற்கு முன்பு இந்தியாவின் இன்னொரு முக்கிய ஊழல் வழக்கான காமன்வெல்த் விளையாட்டுக்கள், சுரேஷ் கல்மாடியின் உதவியாளர்களான லலித் பானோட், வி.கே. வர்மா, கு.கே. ரெட்டி, பிரவீன் பக்ஷி மற்றும் தீருகுஹர் சேகர் மீதான வழக்கை விசாரித்துள்ளார்.

 கண்டிப்பான மனிதர்

கண்டிப்பான மனிதர்

சைனி மிகவும் கண்டிப்பானவர். 2017 மார்ச் 19-ம் தேதி இவரது சிறப்பு அதிகாரமான பிரிவு 319-ஐ பயன்படுத்திச் சுனில் மிட்டல், ஆசிம் கோஷ் மற்றும் ரவி ரூபியா போன்ற 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருந்தவர்களுக்குச் சம்மன் அனுப்பி உள்ளார். கனிமொழி சிறையில் இருந்து போது முதலில் ஜாமின் அளிக்க முடியாது என்று கூறியதும் இவர் தான்.

 2ஜி வழக்கில் தீர்ப்பு

2ஜி வழக்கில் தீர்ப்பு

குற்றச்சாட்டுக்களைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கச் சிபிஐ தவறிவிட்டதாகவும் நீதிபதி சைனி தனது தீர்ப்பில் தெரிவித்து வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்துள்ளார்.

2ஜி வழக்கு

2ஜி வழக்கு

மத்திய அரசில் மட்டுமல்லாமல் தமிழக அரசியலிலும் பெரும் சூறாவளியை ஏற்படுத்திய ஊழல் இது என்று கூறப்பட்டு வந்தது. 2ஜி அலைக்கற்றை உரிமத்தை சட்டவிரோதமாகத் தனியார் நிறுவனங்களுக்கு மிகமிகக் குறைந்த விலையில் தாரை வார்த்ததாகவும் ரூ.176,000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது என்றும் அதில் முக்கியப் பங்கு ஆ ராசா அவர்களுக்கு உள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.

இந்த ஊழலில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராசா, திமுகத் தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, மனைவி ராஜாத்தி உள்படப் பலர் சிபிஐ அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டு வந்தனர். தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Who is OP Saini? 5 facts about the judge who handled 2G scam case against A Raja, Kanimozhi

Who is OP Saini? 5 facts about the judge who handled 2G scam case against A Raja, Kanimozhi
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X