கட்டுக்கு அடங்காத காளையாக சீறும் டுகாட்டி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சில நிறுவனங்கள் வீழ்ச்சியைச் சந்தித்து, அதல பாதாளத்தில் விழுந்தாலும், அதிலிருந்து உயிர்த்தெழுந்து முன்னிருந்ததைக் காட்டிலும் சிறப்பாக, வெற்றிகரமாகச் செயல்படும். இத்தகைய நிறுவனங்கள் உலகில் சில எண்ணிக்கையில் மட்டுமே உள்ளது.

அப்படி "சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவது" என்ற சொற்றொடர் வேறு எந்த நிறுவனத்தை விடவும் இத்தாலியின் பொலோக்னாவைச் சேர்ந்த டுகாட்டி நிறுவனத்திற்குத் தான் கச்சிதமாகப் பொருந்தும்.

டுகாட்டி சகோதரர்கள் வீழ்ச்சியிலிருந்து வெற்றிப்பாதைக்குத் திரும்பியது எப்படி என்பதைப் பார்ப்போம்.

 உலகப் போர்
 

உலகப் போர்

இரண்டாவது உலகப் போரின் போது, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ரேடியோ பாகங்களை உற்பத்தி செய்து வந்த தங்களின் தொழிற்சாலை மீது நட்பு நாடுகள் குண்டு வீசி நாசப்படுத்தியதால், இச்சகோதரர்கள் மோட்டார்சைக்கிள் உற்பத்தியில் தம் கவனத்தைத் திருப்பினர்.

 சிறிய எஞ்சின்

சிறிய எஞ்சின்

எத்தகைய ஸ்டாண்டர்டு சைக்கிளுக்கும் பொருந்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்ட சிறிய எஞ்சினில் ஆரம்பித்த டுகாட்டி நிறுவனம், படிப்படியாக முன்னேறி ரேஸிங் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் மோட்டார்சைக்கிள் உற்பத்தியில் உலகின் சிறந்த நிறுவனங்களுள் ஒன்றாக உயர்ந்தது வரலாறு.

இத்தாலிய ரேடியோ அளித்த நம்பிக்கை

இத்தாலிய ரேடியோ அளித்த நம்பிக்கை

இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரான அன்டோனியோ டுகாட்டி 1800-களின் இறுதியில் இத்தாலிய தொழிற்புரட்சியினால் உருவான தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் பொலோக்னாவிற்குப் புலம் பெயர்ந்தார்.

மூன்று புதல்வர்கள்

மூன்று புதல்வர்கள்

அன்டோனியோவின் மூன்று புதல்வர்களான அட்ரியானோ, மார்ஸெல்லோ மற்றும் ப்ரூனோ கவாலியெரி ஆகியோர் தம் தந்தை சென்ற வழியைப் பின்பற்றி, வியாபாரத்தை முன்னெடுத்துச் சென்றனர்.

ஷார்ட்-வேவ் ரேடியோ
 

ஷார்ட்-வேவ் ரேடியோ

அட்ரியானோ 1924 ஆம் ஆண்டில், ஷார்ட்-வேவ் ரேடியோ ப்ராஜெக்ட் ஒன்றில் பணியாற்றி நற்பெயர் பெற்றார். அதன் பின் டுகாட்டி குடும்பத்தைச் சேர்ந்த அந்நால்வரும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ரேடியோ பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டனர். 1926 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், "சோஷியெட்டா சயின்டிஃபிக்கா ரேடியோ ப்ரெவெட்டி டுகாட்டி" (டுகாட்டி சயின்டிஃபிக் ரேடியோ பேடன்ட் நிறுவனம்) என்ற நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினர்.

ப்ராட்காஸ்ட் ரேடியோ கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபலமாகத் தொடங்கியிருந்த அச்சமயத்தில், காலத்துக்கு ஏற்றவாறு முதலீடு செய்வது பயன்தரும் என்று அவர்கள் நம்பினர்.

உற்பத்தி மையம்

உற்பத்தி மையம்

அவர்களின் உள்ளுணர்வு கூறியது உண்மை என்று நிரூபணம் ஆனது. அவர்களின் வர்த்தகம் நன்கு செழித்து 1935 ஆம் ஆண்டில் டுகாட்டியினர், நகரத்தின் போர்கோ பனிகேல் என்ற இடத்தில் குறிப்பிடத்தக்க பெரிய அளவிலான உற்பத்தி மையம் ஒன்றின் கட்டுமானத்தைத் தொடங்கும் அளவுக்கு வளர்ச்சியடைந்தனர்.

5000 ஊழியர்கள்

5000 ஊழியர்கள்

இரண்டாம் உலகப்போர் அறிவிக்கப்பட்ட போது, டுகாட்டி தொழிற்சாலை சுமார் 5000-க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணியமர்த்தி இத்தாலியின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்ந்தது.

தரைமட்டமானது

தரைமட்டமானது

1944 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதியன்று, நட்பு நாடுகளினால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலால் டுகாட்டி உற்பத்தி மையம் தரைமட்டமானது. சுமார் ஓராண்டு காலத்திற்கு இத்தொழிற்சாலையில் எல்லாவித உற்பத்தியையும் நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர் டுகாட்டி குடும்பத்தினர்.

நாய்க்குட்டி

நாய்க்குட்டி

ஏறக்குறைய அதே காலகட்டத்தின் போது ஆல்டோ ஃபாரிநெல்லி (Farinelli) என்ற மெக்கானிக்கல் இஞ்சினியர் ஒருவர் சைக்கிளில் பொருத்தக்கூடிய ஆக்ஸில்லரி மோட்டார் ஒன்றை உருவாக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டிருந்தார். இம்மோட்டாருக்கு அவர் வைத்திருந்த பெயர், "ப்பபி" என்னும் அர்த்தம் கொடுக்கும் "குக்கியோலோ" (Cucciolo).

மிகச் சிறந்த அம்சங்கள்

மிகச் சிறந்த அம்சங்கள்

ஃபாரிநெல்லியின் வடிவமைப்பில் சவாலான மிகச் சிறந்த அம்சங்கள் பல இருந்தன. இவற்றோடு, அதன் ஃபோர்-ஸ்ட்ரோக் சைக்கிளும், டூ-ஸ்பீட் கியரிங்கும் இன்ஜினின் முழு ஆற்றலை அளித்து. இதனால் சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்கள் மத்தியில் இந்த டிசைன் தனித்து நின்றது.

டுகாட்டி சகோதரர்கள்

டுகாட்டி சகோதரர்கள்

duஇத்தயாரிப்புக்கான திடீர் மவுசை சமாளிக்கும் திறன் வாய்ந்த உற்பத்தியாளரைக் கண்டுபிடிக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த ஃபாரிநெல்லிக்குக் கை கொடுத்தனர் டுகாட்டி சகோதரர்கள். குக்கியோலோவை அவர்களே உற்பத்தி செய்யத் தொடங்கினர்.

காலப்போக்கில், தங்கள் முழு முயற்சியையும் அர்ப்பணித்து மோட்டார் சைக்கிள்களை வடிவமைப்பதிலும், உற்பத்தி செய்வதிலும் ஈடுபட்டனர்.

டுகாட்டி குடும்பத்தினரின் பின்வாங்கல்

டுகாட்டி குடும்பத்தினரின் பின்வாங்கல்

டுகாட்டி நிறுவனம் குக்கியோலோவை வெற்றிகரமாக்கியிருந்தாலும் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், வியாபாரத்தில் லாபம் ஈட்டப் பெருமளவில் போராடிக் கொண்டிருந்தது. டுகாட்டி குடும்பத்தினர் 1950 ஆண்டு வாக்கில், இத்தாலிய அரசுக்குத் தங்கள் உற்பத்தி மையத்தை விற்று விட்டனர்.

வெவ்வேறு துறை

வெவ்வேறு துறை

டுகாட்டி நிறுவனம் அதன் மோட்டார்சைக்கிள் உற்பத்தி தொடர்பான செயல்பாடுகளை விரிவாக்கம் செய்து கொண்டிருந்த அக்காலகட்டத்தில் டுகாட்டி குடும்ப உறுப்பினர்கள் தத்தம் வழியில் பிரிந்து வெவ்வேறு துறைகளில் கால் பதிக்கலாம் என்று முடிவு செய்து பிரிந்தனர்.

க்ரூயிஸர் அறிமுகம்

க்ரூயிஸர் அறிமுகம்

1952 ஆம் ஆண்டில், டுகாட்டி, ஸ்கூட்டர் மாடல்களின் முன்னோடியான க்ரூயிஸரை அறிமுகப்படுத்தியது. அச்சமயத்தில், எலக்ட்ரிக் ஸ்டார்டர் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் ஆகியவற்றுடன் வடிவமைக்கப்பட்ட 175 சிசி எஞ்சின் கொண்ட அவ்வாகனம், வாகனங்களின் டிஸைன் மற்றும் பர்ஃபார்மென்ஸ் ஆகியவற்றைப் புதிய தளத்துக்கு இட்டுச் சென்றது.

அடுத்த அதிரடி

அடுத்த அதிரடி

இரண்டு ஆண்டுகளுக்குப் பின், இஞ்சினியரான ஃபேபியோ டாக்லியோனி (Fabio Taglioni) டுகாட்டி நிறுவனத்தில் சேர்ந்தார். விரைவில் இத்துறையில் கைதேர்ந்த விற்பன்னராக வளர்ந்தார். அவரது வழிகாட்டுதலின் படி, அப்போது புழக்கத்தில் இருந்த ஸ்பீட் மற்றும் ஹேண்ட்லிங் ஸ்டாண்டர்டுகளை எல்லாம் மிஞ்சக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்ட ஃபோர்-ஸ்ட்ரோக் டூரிஸ்ட் 174 மற்றும் ஸ்பெஷலான ஸ்போர்ட்ஸ் மாடல்களை டுகாட்டி நிறுவனம் உற்பத்தி செய்தது.

ரேஸிங் உலகின் முடிசூடா மன்னன் டுகாட்டி

ரேஸிங் உலகின் முடிசூடா மன்னன் டுகாட்டி

1970 -களில், உலக ரேஸிங் ஸர்க்கியூட்டிற்குள் அடியெடுத்து வைத்த டுகாட்டி, 1978 ஆம் ஆண்டில் நடைபெற்ற டிடி ஃபார்முலா 1 உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில், மைக் ஹால்வுட் ஓட்டிச் சென்ற டுகாட்டி என்ஸிஆர் 900 எஸ்எஸ் டிடி1 என்ற அதன் மோட்டார்சைக்கிள் மூலம் தன் முதல் உலகச் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

இதே ரேஸில் 1981 முதல் 1984 வரை கலந்து கொண்ட டோனி ரட்டர் (Tony Rutter), டுகாட்டி 600 டிடி2 ரக மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்று அடுத்தடுத்த வெற்றிகளை ஈட்டித் தந்தார்.

சாம்பியன்ஷிப்கள்

சாம்பியன்ஷிப்கள்

மோட்டோஜிபி வேர்ல்டு சாம்பியன்ஷிப், சூப்பர்பைக் வேர்ல்டு சாம்பியன்ஷிப் (எஸ்பிகே), சூப்பர்ஸ்போர்ட் வேர்ல்டு சாம்பியன்ஷிப், எஃப்ஐஎம் சூப்பர்ஸ்டாக் 1000 கப், ப்ரிட்டிஷ் சூப்பர்பைக் சாம்பியன்ஷிப், ஏஎம்ஏ சூப்பர்பைக் சாம்பியன்ஷிப், மற்றும் ஆஸ்திரேலியன் சூப்பர்பைக் சாம்பியன்ஷி போன்ற பல்வேறு ரேஸ்களில் கலந்து கொண்ட டுகாட்டி பைக்குகள் வெற்றிகளைக் குவித்தன.

டுகாட்டி

டுகாட்டி

காலப்போக்கில், இந்நிறுவனம் பலமுறை பல கைகள் மாறி வந்திருந்தாலும், அதன் தனிப்பட்ட அடையாளமாக விளங்கும் சிறப்பான அதன் உற்பத்தித் திறன் மற்றும் பிராண்ட் அப்பீல் ஆகியவற்றில் எவ்வித சமரசமும் இன்றித் தக்க வைத்துக் கொண்டிருப்பது சிறப்பு.

தற்போது டுகாட்டி

தற்போது டுகாட்டி

டுகாட்டி நிறுவனம் பல்வேறு தடைகளைத் தாண்டி தற்போது ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி-யின் கீழ் உள்ளது.

ஆடி நிறுவனம் தற்போது வோக்ஸ்வாகன் கட்டுப்பாட்டில் இருக்கும் லம்போர்கினியின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The Ducati: Rise from the Ashes

The Ducati: Rise from the Ashes
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more