2017-2018 நிதி ஆண்டில் செப்டம்பர் மாதத்துடன் முடிந்த இரண்டாம் காலாண்டு வரை பொதுத் துறை வங்கிகள் 7.34 லட்சம் கோடி ரூபாய் கடன் அளித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தரவுகள் கூறுகிறது.
அதே நேரம் இந்தக் கடனில் 77 சதவீதம் வரா கடன் என்பது தற்போது தெரியவந்துள்ளது பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கடன் அளவு
பொதுத் துறை வங்கியின் 7,33,974 கோடி ரூபாய் கடன் உடன் ஒப்பிடும் போது தனியார் வங்கி நிறுவனங்களின் வரா கடன் அளவானது 1,02,808 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுத் துறை வங்கிகள் பட்டியல்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 1.86 லட்சம் கோடியும், பஞ்சாப் நேஷ்னல் வங்கி 57,630 கோடியும், பாங்க் ஆப் இந்தியா 49,307 கோடியும், பாங்க் ஆ பரோடா 46,307 கோடி ரூபாயும், கனரா வங்கி 39,164 கோடி ரூபாயும், யூனியன் பாங்க் ஆப் இந்தியா 38,286 கோடியும் வரா கடனாக வைத்துள்ளது.

தனியார் வங்கிகள் பட்டியல்
தனியார் வங்கிகளில் அதிகபட்சமாக ஐசிஐசிஐ வங்கியில் 44,237 கோடியும், ஆக்சிஸ் வங்கியில் 22,136 கோடியும், எச்டிஎப்சி வங்கியில் 7,644 கோடியும், ஜம்மு & காஷ்மிர் வங்கியிடம் 5,983 கோடி ரூபாயும் வரா கடனாக உள்ளது.

ஏற்பாடுகள்
நிதி அமைச்சகம் வரா கடனை வசூலிக்கப் பல விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரா கடனுக்காக மட்டும் 33 ஆக இருந்த கடன் மீட்பு தீர்ப்பாயங்களை 39ஆக 2016-2017 நிதி ஆண்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரா கடன் அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெட் ஏர்வேஸ்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் புத்தாண்டு விற்பனை.. ரூ.1,001 ரூபாய்க்கு விமான பயணம்..!