ஏகப்பட்ட டார்ச்சர்களை அனுபவித்தேன்.. அனில் அம்பானி கதறல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான அனில் அம்பானி, தனது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறிய நிலையில் 43,000 கோடி ரூபாய் அளவிலான கடனை, தனது நிறுவன சொத்துகளை விற்பனை செய்து கடன் அளவை 6,000 கோடி ரூபாயாகக் குறைத்துள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில் தான் அனுபவித்த டார்ச்சர்களை விளக்குகிறார் அனில் அம்பானி.

கடன் நெருக்கடி

கடன் நெருக்கடி

ஆர்காம் நிறுவனத்தின் கடன் அளவு தலைக்கு மேல் அதிகரித்து நிறுவனம் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டபோது, அனில் அம்பானி தனது 84 வயதான தாய் கோகிலாபென் அம்பானியை சந்தித்தார்.

அப்போது கோகிலாபென் அம்பானி, அனில் அம்பானியிடம் கடன் கொடுத்தவர்களுக்கு ஒரு ரூபாய் கூட நஷ்டம் வரக்கூடாது எனத் தெரிவித்தார்.

 

அதிரடி முடிவுகள்

அதிரடி முடிவுகள்

இதன் பின்னரே ஆர்காம் நிறுவனத்தின் டவர் வர்த்தகம் மற்றும் டவர்கள், ரியல் எஸ்டேட் சொத்துக்கள் என அனைத்தையும் விற்கத் தயாராகினார் அனில் அம்பானி.

ஆர்காம் நிறுவனத்தின் 4 வையர்லெஸ் இன்பராஸ்டக்சர் சொத்துக்களை 23,000 கோடி ரூபாய்க்கு தனது அண்ணன் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவிற்கும், இதர சொத்துகளை விற்பனை செய்து கடன் அளவை 6,000 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளார்.

 

ஆசீர்வாதம்..

ஆசீர்வாதம்..

தாயின் ஆசீர்வாதம் இருந்தால் போதும், வேறு எதுவும் வேண்டாம் என அனில் அம்பானி கூறியுள்ளார்.

தொடர் பாதிப்புகள்

தொடர் பாதிப்புகள்

ஆர்காம் நிறுவனத்தின் பாதிப்புகள் 2ஜி வழக்கின் ஆரம்பம் முதல் ஜியோவின் அறிமுகம் வரையில் தொடர்ந்து நீடித்தது. இந்தப் பாதிப்புகளால் 120 மில்லியன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தற்போது 14 மில்லியனாகக் குறைந்துள்ளது.

கார்பரேட் சந்தையில், எப்போது வலிமையானவர்கள் மேலும் வலிமை ஆவார்கள், பலவீனமானவர்கள் மேலும் பலவீனமாவார்கள். இதுதான் ஆர்காம் நிறுவனத்திற்கு நடந்தது.

 

2ஜி வழக்கு

2ஜி வழக்கு

தற்போது 2ஜி வழக்கு ஊழல் இல்லை என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது, இதற்கு மிகப்பெரிய நன்றி.

இந்த வழக்கில் எவ்விதமான தொடர்பும் இல்லாத நிலையில் நிறுவனத்தின் மீதும், குழுமத்தின் மீதும், வழக்குத் தொடரப்பட்டது. இதுமட்டும் அல்லாமல் பல முக்கிய ஊழியர்கள், உடன் பணியாற்றியவர்கள் சிறை அடைக்கப்பட்டார்கள்.

 

தொடர் விசாரணை

தொடர் விசாரணை

2ஜி வழக்கில் சிபிஐ என்னிடம் சுமார் 8 மணிநேரம் விசாரணை நடத்தியது. இதை நான் எப்போது சந்தித்ததில்லை, சினிமாவில் காண்பிக்கப்படுவது போல் இருக்கும் என நினைத்த எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளித்து.

இப்போது சிபிஐ அதிகாரிகளால் என் அறைக்குள் முன்னாள் டெலிகாம் துறை அமைச்சரான ராஜா அழைத்து வரப்பட்டார், அவர் வரும் போது அவரைப் பார்த்து ஹலோ சார் எனச் சொன்னேன். இதற்குக் காரணம், அவரை அமைச்சாரவே எப்போதும் பார்த்தேன், அதன் வெளிப்பாடாகவே இந்த மரியாதை.

 

டினா அம்பானி

டினா அம்பானி

அதுமட்டும் அல்லாமல் இவ்வழக்கில் எவ்விதமான தொடர்பும் இல்லாத எனது மனைவி டினாவையும் அழைத்து விசாரணை செய்தனர். டினாவும் சிரித்த முகத்துடனே அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் என அனில் அம்பானி கூறினார்.

ஒவ்வொரு விசாரணையின் முடிவிலும் நீங்கள் நாளை கைது செய்யப்படப்போகிறீர்கள், சிறையில் அடைக்கப்போகிறார்கள் என்று அழைப்புகள் வரும்.

 

இரும்பு மனம்

இரும்பு மனம்

இப்படி 2ஜி வழக்கில் சித்திரவதை, அதிர்ச்சி, மன வேதனை, மன அழுத்தம் எனப் பலவற்றையும் சந்தித்தேன், இதன் மூலம் எனது மனம் இரும்பு போல் ஆனது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

எனது டெலிகாம் வர்த்தகத்தை மூடிவிடலாம் எனத் திட்டமிட்டபோது முகேஷ் அம்பானி, என்னிடம் "பிஸ்னஸ் என்பது எமோஷன் கிடையாது, பிஸ்னஸ் எக்னாமிக்ஸ். பங்குதாரர்களுக்கு எவ்வளவு நல்லது செய்கிறோம் என்பதே உண்மையான பிஸ்னஸ் என்று கூறினார்.

ஆர்காம் பங்குகள்

ஆர்காம் பங்குகள்

இப்படித் தொடர் தோல்விகளால் பாதிப்படைந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், நிறுவனப் பங்குகள் டிசம்பர் 22இல் 16 ரூபாய் வரையில் சரிந்தது. தற்போது எடுத்துள்ள முடிவுகளால் ஆர்காம் பங்குகள் ஜனவரி 3ஆம் தேதி 31 ரூபாய் வரையில் உயர்ந்ததுள்ளது. இது கிட்டத்தட்ட 2 மடங்கு வளர்ச்சி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

I went through torture..says Anil Ambani

I went through torture..says Anil Ambani
Story first published: Thursday, January 4, 2018, 13:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X