இன்றைய மருத்துவ செலவுகளுகம், மருத்துவ காப்பீடும் எப்படி இருக்கிறது தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகத்தில் நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்களைப் பார்க்கும் போது, நுகர்வோர் சேவையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் தோன்றும். நுகர்வோர் வெளிப்படையான தகவல்கள் மற்றும் தேர்வு செய்யும் சுதந்திர அதிகாரத்தைப் பெற்றிருக்கும் இந்தக் காலகட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் தக்கவைத்துக்கொள்ள, அவர்களுக்கு எளிமையான, வசதியான மற்றும் சிக்கலற்ற சேவைகளை வழங்க வழிமுறைகளைக் கண்டறிவது பெருமளவில் நிறுவனங்களிடையே அதிகரித்து வருகிறது.

 

டெலிகாம்

டெலிகாம்

தொலைத்தொடர்புத் துறை வாடிக்கையாளர்களுக்கு இலவச தொலைப்பேசி அழைப்புகள், சிறப்பான இன்டர்நெட் இணைப்பு மற்றும் நியாயமான விலையில் 4ஜி கைப்பேசிகள் ஆகிய வசதிகளைத் தந்து மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது

டாக்சி

டாக்சி

வாடகை கார் நிறுவனர்கள் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் பயணிக்கும் பயணிகளுக்கான தங்களின் அமைப்பு முறையை மாற்றி வசதிகளைச் செய்து தந்திருப்பதோடு சுய தொழிலதிபர்களான ஓட்டுநர்களுக்கான ‘உழைப்பாளிகளுக்கான மரியாதை' யையும் வழங்கி வருகிறது.

ஈகாமர்ஸ்

ஈகாமர்ஸ்

இணையத்தில் பொருட்களை வாங்குவதில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சியானது வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதியான ஒரு அனுபவத்தை வழங்குகிறது, ஷாப்பிங் செய்ய விரும்புபவர்கள் ஆயிரம் கடைகளைத் தேடி ஏறி இறங்க வேண்டியதில்லை - பொருட்களும் சேவைகளும் விரல் சொடுக்கும் தூரத்தில் கிடைக்கின்றன.

சுகாதாரத் துறை
 

சுகாதாரத் துறை

சுகாதாரத் துறையில் அதிநவீன விலையுயர்ந்த மேம்படுத்தப்பட்ட வசதி மற்றும் முன்னேறிய சிகிச்சைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குக் கிடைக்கப்பெற்றுக் கொண்டிருக்கும் புரட்சிகரமான ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் முதலில் உணரவேண்டும்.

அவசியம்

அவசியம்

உடல்நல பராமரிப்பு மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் துறையில் மகத்தான மாற்றம் ஏற்பட்டு வருகிறது. எனினும் வாடிக்கையாளர்களின் நல்லனுபவத்தை மேம்படுத்தவும் மற்றும் வளர்ந்து வாழ்க்கை முறைக்கு மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திச் செய்யவும் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு ஆகிய அம்சங்கள் உள்ளடங்கிய ஒரு முழுமையான புதிய வகைத் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

 மருத்துவக் காப்பீடு

மருத்துவக் காப்பீடு

வழக்கமாக, மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் உள்நோயாளிகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே பணம் செலுத்தி வந்தது. இருப்பினும், மருத்துவக் காப்பீட்டுத் துறையில் தாராளமயமாக்கப்பட்ட பிறகு குறிப்பிடத் தகுந்த அளவு மாற்றமும் வளர்ச்சியும் தற்போது கண்டுள்ளது. இன்று, இது இந்திய காப்பீட்டுத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

பல திட்டங்கள்.. பல தேர்வுகள்..

பல திட்டங்கள்.. பல தேர்வுகள்..

இந்தியாவில் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் வருகையால் வாழ்நாள் முழுவதற்குமான காப்பீடு, இடையில் காப்பீடு கோரவில்லை என்றால் அதனடிப்படையில் காப்பீட்டு தொகையை அதிகரித்தல், துணை கட்டணங்கள் மற்றும் துணை வரம்புகள் இல்லாத திட்டங்கள், இறுதியில் காப்பீட்டு தொகையைத் திரும்ப மீட்டல், உடல்நலத்தை அடிப்படையாகக் கொண்ட ஊக்கத்தொகைகள், ஒற்றை வியாதிக்கான காப்பீடுகள் போன்ற பல புதுமையான திட்டங்களைக் காண முடிகிறது.

குறைவு

குறைவு

ஆனாலும் இந்தியாவில் இன்றளவும் முரண்பாடாக மருத்துவச் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களின் ஊடுருவல் உலகளாவிய அளவோடு ஒப்பிடும் போது சராசரியை விடக் கணிசமாகக் குறைவாக உள்ளது. எனவே, புதுமையான தனிநபர்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட மருத்துவச் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் தீர்வுகள் மூலம் மக்களுடைய ஆரோக்கியத் தேவைகளை அடையாளம் காண வேண்டியது கட்டாயமாகும்.

வெளிப்படையான மற்றும் அசாதாரண மருத்துவச் செலவுகளைக் காப்பீடு செய்ய வேண்டியதன் அவசியம்.

இந்தியாவில், 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட உடல்நலம் தொடர்பான மருத்துவச் செலவுகள் கையிருப்பு பணத்தையும் மீறி அதிகமாகச் செலவு செய்யப்படுவதால், ஒவ்வொரு வருடமும் 7 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்படுகின்றன.

கையிலிருக்கும் பணத்தை விட சக்திக்கு மீறி அதிகமாகச் செலவழிக்கும் 189 நாடுகளில் இந்தியா 183 ஆவது இடத்தைப் பிடிக்கிறது.

 

இடைவேளை

இடைவேளை

இந்த இடைவேளியை நிரப்பக் காப்பீடு எடுப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது ஆனால் உண்மையில் மருத்துவக் காப்பீடு கையிலிருக்கும் பணத்தை விட அதிகமாகத் தகுதிக்கு மீறி செலவு செய்து வறுமை நிலைக்கு வருவதைக் குறைக்கிறது. வருமானத்திற்கு அதிகமான வீட்டுச் செலவுகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான செலவுகள் மருந்துகளை வாங்க ஆகும் செலவுகளே ஆகும்.

இந்திய மக்கள்

இந்திய மக்கள்

இந்திய நுகர்வோர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை வாங்குவதற்குத் தயக்கம் காட்டக் காரணம், பெரும்பாலான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் புறநோயாளிகள் சிகிச்சை, மருந்துகள் மற்றும் பிற மருத்துவச் சாதன கட்டணங்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே காப்பீடு அளிப்பவையாக இருப்பதேயாகும்.

பெரும்பாலான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்நோயாளியாகப் பெறும் சிகிச்சைக்கான செலவினங்களை மட்டுமே உள்ளடக்குகிறது. மருத்துவத் துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் காரணமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது மிகவும் குறைந்துள்ள நிலையில், புறநோயாளிகள் சிகிச்சைக்காகச் செலவிடப்படும் மருத்துவப் பராமரிப்புத் தொகை மிக அதிகமாக உள்ளது. அத்துடன், நமது உடல் உழைப்பு அதிகமில்லாத வாழ்க்கை முறையானது நோய்களுக்கும் மருத்துவர் ஆலோசனைகளுக்கும் வழிவகுக்கிறது. இந்தப் பின்னணியில், நோயாளிகளுக்கான செலவுகள், தடுப்பூசிகள், மருந்துகள், பல் பராமரிப்புச் செலவுகள், கண்ணாடி, மற்றும் மருத்துவருக்கு ஆலோசனைக் கட்டணம் போன்ற புறநோயாளிகள் செலவுகளுக்குக் காப்புறுதி அளிக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களுக்குச் சந்தையில் பெரும் தேவை உள்ளது.

 

மூத்த குடிமக்களுக்கு இரட்டைக் கஷ்டம்.

மூத்த குடிமக்களுக்கு இரட்டைக் கஷ்டம்.

பொதுவாக வயதான காலங்களில் அவர்களின் மருத்துவத் தேவைகள் அதிகரிக்கும். மருத்துத் துறையின் பணவீக்கத்தாலும், வயதான பிறகு வருமான ஆதாரம் இல்லாததாலும் தரமான மருத்துவச் சேவைகளைப் பெறுவது அவர்களுக்குச் சவாலானதாக இருக்கிறது. வாழ்நாள் முழுவதற்குமான காப்பீடு போன்ற திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் துறையில் பொதுவானதாக இருந்த போதிலும், அவை பொதுவாகப் பணமில்லா மருத்துவமனை அனுமதி, தீவிரமான வியாதிகளிலிருந்து பாதுகாப்பு, புற்றுநோய், பக்கவாதம் போன்ற பல நோய்களுக்கான குறிப்பிட்ட பாதுகாப்பு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட மூத்த குடிமக்களுக்கான சிறப்புத் திட்டங்களை அளிக்கின்றன.

ஆனால் இவை அனைத்தும் மிக அதிகமான முனைமத் தொகையைக் கொண்டிருக்கின்றன. மூத்த குடிமக்களுக்கு முனைமத் தொகையின் சுமையைக் குறைப்பதைப் பற்றிக் காப்பீட்டாளர்கள் சிந்திக்க வேண்டியது முக்கியம். அவர்கள் அழகாக முதுமையடையத் தொடங்கும் போது இது எதிர்கால மருத்துவச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய செல்வ சேகரிப்புத் திட்டங்கள் மூலம் சாத்தியமாகிறது. எனவே, இந்தப் பிரிவானது ஒரு முக்கிய வாடிக்கையாளர் தளமென்று நம்புகிறோம். எனவே அவர்களைக் கவரும் வகையில் திட்டங்களைத் தயாரிக்க வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது.

 

முதலீட்டு மனப்பான்மை கொண்டவர்களுக்கு வருவாயை அடையாளம் காட்டுதல்

முதலீட்டு மனப்பான்மை கொண்டவர்களுக்கு வருவாயை அடையாளம் காட்டுதல்

மருத்துவக் காப்பீட்டுத் துறை அடுத்தப் பெரிய பாய்ச்சலை எடுத்து இந்திய சந்தையில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த தயாராக இருக்கும் போது, இன்னமும் இந்தியாவில் மருத்துவக் காப்பீட்டை விரிவுபடுத்த தடையாக இருக்கும் முக்கியத் தடைகளில் ஒன்று மருத்துவக் காப்பீட்டு முதலீட்டின் மீது திரும்பக் கிடைக்காத வருவாயாகும். இந்தியாவில், மருத்துவக் காப்பீடு இன்னமும் ஒரு செலவாகத் தான் கருதப்படுகிறது. ஏனெனில் அந்தத் தொகையைப் பெறுவதற்கு ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்க வேண்டும். மறுபுறம், ஆயுள் காப்பீட்டுக் கழகம் யூலிப்ஸ் போன்ற தேர்வுகளை வழங்குகிறது. இது காப்பீட்டுதாரர்களுக்கு முதலீட்டுடன் அபாயக் காப்புறுதியையும் அளிக்கிறது. இதன் மூலம் நுகர்வோர் தங்கள் முதலீட்டின் மீதான வருவாயைக் கண்காணிப்பதும் எளிதாகிறது.

எப்பொழுதும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நுகர்வோரின் தேவை மற்றும் முதலீட்டின் மீதான வருவாய் ஒரு சிக்கலான சவாலாக இருக்கும் நிலையில், மருத்துவக் காப்பீட்டுத் துறையும் வாடிக்கையாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கும் அதே சமயத்தில் இது போன்ற மகிழ்ச்சிகரமான சலுகைத் திட்டங்களையும் அளிக்க முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

 

 நிறைவு

நிறைவு

இந்திய வாடிக்கையாளர்கள் எப்பொழுதும் அவர்கள் செலுத்தும் பணத்திற்கு மதிப்பு, உயர் தரம், சிறந்த சேவை ஆகியவற்றை மதிப்பிட்டுப் பார்க்கக்கூடிய அதிகக் கோரிக்கைகள் கொண்டவர்கள். மேலும் பொருட்களைச் சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுப்பவர்கள். அது ஒரு பயணமாக இருந்தாலோ, அல்லது கல்வி சார்ந்த செலவாக இருந்தாலோ அல்லது மகளின் திருமணமாக இருந்தாலோ அல்லது அவர்களுடைய நிதி சார்ந்த முடிவுகளாக இருந்தாலும் சரி - எதிலும் வருங்காலத்திற்கும் சேர்த்து திட்டமிடுவது அவர்களின் மனதில் பதிந்து போன ஒரு விஷயமாகும்.

எனவே காப்பீட்டுத் துறையானது அவர்களின் தற்போதைய மற்றும் எதிர்கால உடல்நல மருத்துவம் மற்றும் நிதி தேவைகளைக் கவனித்துக் கொள்ளும் வகையில், வாடிக்கையாளர்களின் முக்கியத் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் புதுமையான தயாரிப்புகளைச் சிந்தித்து அறிமுகப்படுத்த வேண்டும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Todays medical expenses and health insurances

Todays medical expenses and health insurances
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X