சவுதியில் ஊழல்.. உண்மையை உடைத்த பணக்கார இளவரசர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கச்சா எண்ணெய் உற்பத்தி சந்தையில் ஆதிக்கம் நிறைந்த சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், அந்நாட்டின் ஊழலை எதிர்த்து அதிரடியாக நடவடிக்கையை எடுத்தார்.

இந்த நடவடிக்கையின் பெயரில் அரசின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது முதல் பணத்தை அபகரித்தது வரையில் அனைத்து விதிமாகக் குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்பட்டு அரசு குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர்கள், அரசு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் என 300 பேரைக் கைது செய்துள்ளது சவுதி அரேபிய அரசு.

கைது..

கைது..

இப்படிக் கைது செய்யப்பட்ட அனைவரும் உயர் பதவியிலும், அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும் காரணத்தால், 300 பேரையும் சிறையில் அடைக்காமல் அரசு காவலில் ரியாத் நகரத்தில் இருக்கும் ரிட்ஸ் கார்டன் ஹோட்டலில் நவம்பர் 2017 வரையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அல்-வலீத் பின் தலால்

அல்-வலீத் பின் தலால்

இந்நிலையில் சில முக்கியமான உண்மைகளை இந்நாட்டின் முக்கியமான தொழிலதிபர், முன்னணி பணக்காரர் மற்றும் இளவரசர் அல்-வலீத் பின் தலால்.

அல்-வலீத் பின் தலால் மற்றும் 300 பேரை கைது செய்த போது சவுதி அரசு கணக்கில் காட்டப்படாத பணத்தைக் கணக்கெடுத்து நாட்டில் இருக்கும் ஊழலை முழுமையாகக் களையும் முயற்சி என அறிவித்தது.

 

விடுதலை

விடுதலை

அல்-வலீத் பின் தலால் சமீபத்தில் கொடுத்த பேட்டியில், அரசு குடும்பத்தைச் சேர்ந்த சில முக்கிய நபர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் மீதமுள்ளவர்களையும் விடுதலை செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகள்

குற்றச்சாட்டுகள்

இவர்களின் மீது குற்றச்சாட்டுகள் இல்லை என்பதை உறுதி செய்தபின்னரே விடுதலைக்கான உத்தரவைச் சவுதி அரேபிய அரசு கொடுத்துள்ளது.

மேலும் விடுதலை செய்யப்பட்ட அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் மீது எவ்விதமான குற்றச்சாட்டுகள், வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.

 

மாறுபட்ட கருத்து

மாறுபட்ட கருத்து

நாங்கள் ஹோட்டலில் அடைக்கப்பட்டு இருந்தாலும், எங்களது தினசரி வாழ்க்கை சிறிதளவும் பாதிக்கப்படவில்லை. ஆனால் செய்தி நிறுவனங்கள் பல்வேறு மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டு அரசு குடும்பத்தையும், சவுதி அரசையும் காயப்படுத்தியுள்ளது என்று அல்-வலீத் பின் தலால் பேட்டியில் கூறினார்.

6 பில்லியன் டாலர்

6 பில்லியன் டாலர்

அல்-வலீத் பின் தலால் தலைமை வகிக்கும் கிங்டம் நிறுவனம் 6 பில்லியன் டாலர் அளவில் ஊழல் செய்யப்பட்டுள்ளதாகவும், செய்திகள் பரவின ஆனால் அது முற்றிலும் பொய் எனவும் அவர் கூறினார்.

குற்றமற்றவர்கள்

குற்றமற்றவர்கள்

கைது செய்யப்பட்ட 300 பேரில் குற்றமற்றவர்களும் அதிகமானோர் உள்ளனர், அரசு சந்தேகத்தின் பெயரிலேயே கைது செய்யப்பட்டுள்ளது. இங்குப் பலரும் குற்றமற்றவர்கள் என்று அல்-வலீத் பின் தலால் கூறினார்.

ஆய்வுகள்

ஆய்வுகள்

நான் மற்றும் என்னுடைய நிறுவனம் பல்வேறு அரசு திட்டங்களில் பணியாற்றியுள்ளோம், இதனால் சந்தேகம் எழுந்துள்ளது. "எல்லாவற்றையும் ஆய்வு செய்யுங்கள், எவ்வளவு நாட்கள் வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள், நான் குற்றமற்றவன். நீங்கள் ஆய்வை முடித்தபின்பே நான் வெளியேறுகிறேன் என்று கூறினேன். இதன் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுத் தற்போது விடுதலைக்கான உத்தரவு வந்துள்ளது" என அல்-வலீத் பின் தலால் இப்பேட்டியில் கூறினார்.

உண்மை

உண்மை

சவுதியில் ஊழல் உள்ளது அதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை, ஆனால் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் பல குற்றமற்றவர்களும் பாதிக்கப்பட்டுள்ளது நான் மறுக்கவில்லை. இத்தகைய நடவடிக்கை சவுதியின் நீண்ட கால வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் எனவும் அல்-வலீத் பின் தலால் கூறியுள்ளார்.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ஊழல் இருப்பதை அல்-வலீத் பின் தலால் உறுதி செய்யும் வகையில் பேசியுள்ளார்.

 

300 பேர் கைது..

300 பேர் கைது..

அரசின் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 300 பேரில் அதிகப்படியானோர் தற்போது விடுதலை செய்யப்பட்ட வருகின்றனர், மீதமுள்ளவர்கள் அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தைச் செலுத்தி விட்டு விடுதலை செய்யப்படுவார்கள்.

10 வருடம்

10 வருடம்

கடந்த 10 வருடத்தில் சவுதி அரேபியாவில் முடிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களில் அரசு அதிகாரிகள் ஊழல் செய்துள்ளனர். அதனை அடிப்படையாகக் கொண்டே முகமது பின் சல்மான் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆடிப்போன முகேஷ் அம்பானி..!

ஆடிப்போன முகேஷ் அம்பானி..!

<strong>ரிலையன்ஸ் ஜியோ பெயரில் மிகப்பெரிய மோசடி.. ஆடிப்போன முகேஷ் அம்பானி..!</strong>ரிலையன்ஸ் ஜியோ பெயரில் மிகப்பெரிய மோசடி.. ஆடிப்போன முகேஷ் அம்பானி..!

உஷாரா இருங்க..!

உஷாரா இருங்க..!

<strong>ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்.. உஷாரா இருங்க..!</strong>ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்.. உஷாரா இருங்க..!


 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Saudi Arabia had corruption, there's no doubt

Saudi Arabia had corruption, there's no doubt - Tamil Goodreturns | சவதியில் ஊழல்.. உண்மையை உடைத்த பணக்கார இளவரசர்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X