வேளாண் அறிவிப்புகள் மகிழ்ச்சி: மற்றபடி எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாக்கிய பட்ஜெட்: ராமதாஸ்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய பட்ஜெட் 2018-ல் வேளாண் துறைக்கான அறிவிப்புகள் மகிழ்ச்சி என்றும் மற்றபடி இது எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாக்கிய பட்ஜெட் தான் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்ட்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் முழு விவரங்களையும் இங்குக் காணலாம்.

 

பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

ஏமாற்றம்

ஏமாற்றம்

நாடாளுமன்றத்தில் 2018-19 ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்திருக்கிறார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகத் தாக்கல் செய்யப்படும் கடைசி முழு நிதிநிலை அறிக்கை என்பதால் நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில் அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

வருமான வரி

வருமான வரி

பொருட்கள் மற்றும் சேவை வரி விகிதம் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், நேரடி வரிகளில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், வருமானவரி விலக்கு உச்சவரம்பு குறைந்தபட்சம் ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வரம்பு ரூ. 3 லட்சமாகக் கூட உயர்த்தப்படவில்லை. ஏற்கனவே இருந்த ரூ.2.50 லட்சமாகவே இது தொடரும் என அறிவிக்கப் பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.40,000 வரை நிரந்தரக் கழிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

வரவேற்பு
 

வரவேற்பு

அதேபோல், மூத்தகுடிமக்களின் வட்டி வருவாய்க்கான வரி விலக்கு வரம்பு ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருப்பதும், ரூ.50 ஆயிரம் வரையிலான மருத்துவக் காப்பீட்டுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை என்ற போதிலும் இதனால் பெரிய அளவில் எந்தப் பயனும் ஏற்படாது. அதேநேரத்தில் வருமானவரிகள் மீதான கூடுதல் தீர்வை 3 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாக உயர்த்தப்பட்டிருப்பது வரிச்சுமையை அதிகரிக்கும். மாத ஊதியதாரர்களிடமிருந்து தான் நேரடி வரி வருவாய் அதிக அளவில் கிடைக்கும் நிலையில் அவர்களுக்கு நிதிநிலை அறிக்கையில் எந்தச் சலுகையும் வழங்கப்படாதது நியாயமல்ல. நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் இது பாதிக்கும்.

விவாசாயத் துறை

விவாசாயத் துறை

விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் அதிரடியான அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால், இந்தத் துறைகளின் அறிவிப்புகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மாற்றி மாற்றிப் படித்ததைத் தவிர எந்த மாற்றமும் இல்லை. அனைத்து வேளாண் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் அறிவிக்கப்படும் என்றும், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி வேளாண் பொருட்களுக்கான உற்பத்திச் செலவில் 50% லாபம் சேர்த்து 1.5 மடங்காகக் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும். ஆனால், கொள்முதல் விலை உயர்வு எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்துத் தெளிவான அறிவிப்புகள் இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது. 22,000 கிராம வேளாண் சந்தைகள் அமைக்கப்படும் என்பது உழவர்களுக்குப் பயனளிக்கும் அறிவிப்பாகும்.

 சுகாதாரத் துறை

சுகாதாரத் துறை

சுகாதாரத்துறையிலும் சில பயனுள்ள அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 10 கோடி ஏழைக் குடும்பங்கள் பயனடையும் வகையில் உலகின் மிகப்பெரிய தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்தி அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வித்துறை வளர்ச்சி, ஆராய்ச்சிக்கான திட்டங்களும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. ஆனால், கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.1.38 லட்சம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்படவில்லை என்பதால் இந்த நிதியைக் கொண்டு புதிய அறிவிப்புகளை அரசு எவ்வாறு செயல்படுத்தும் என்பது தெரியவில்லை.

கிராமப்புற வேலைவாய்ப்பு

கிராமப்புற வேலைவாய்ப்பு

கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குக் கடந்த ஆண்டு 48,000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், அதை முழுமையாகச் செலவழித்த பிறகும் 56% பேருக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை இருப்பதால் இந்த முறை அதை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. ஆனால், அக்கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை. இதனால் கிராமப்புற வேலைவாய்ப்பும், பொருளாதார வளர்ச்சியும் கடுமையாகப் பாதிக்கப்படும்.

 சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையினருக்கு வரிச் சலுகை உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன. புதிய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும்போது அவர்களுக்கான ஊதியத்தில் 12 விழுக்காட்டை அரசே ஏற்றுக் கொள்வது உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனாலும், மருத்துவத் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட புதிய திட்டங்களாலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமானால் மகிழ்ச்சி தான்.

வேளாண் துறை

வேளாண் துறை

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வேளாண்துறை சார்ந்த சில அறிவிப்புகள் மட்டுமே, அதுவும் முறையாகச் செயல்படுத்தப்பட்டால் மக்களுக்கு மகிழ்ச்சியும், பயனும் அளிக்கும். மற்றபடி நரேந்திர மோடி அரசின் ஐந்தாவது நிதிநிலை அறிக்கை இந்திய மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை மட்டுமே அளித்திருக்கிறது என்று அறிக்கையில் டாக்ட்டர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Agricultural announcements are happy: Other then that budget 2018 disappointing expectations: Ramadoss

Agricultural announcements are happy: Other then that budget 2018 disappointing expectations: Ramadoss
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X