விஜய் மல்லையா வங்கிய கடன் குறித்த விவரங்கள் ஏதும் எங்களிடம் இல்லை: நிதி அமைச்சகம்

By Tamilarasu
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விஜய் மல்லையாவின் கடன்களைப் பற்றி எந்தத் தகவலும் எங்களிடம் இல்லை என்று மத்திய அரசு கூறியதை கேட்டு மத்திய தகவல் ஆணையம் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஆர்டிஐ மூலமாக ராகுல் கரே என்பவர் கேட்ட கேள்விக்கு நிதி அமைச்சகம் இந்தப் பதிலினை அளித்துள்ளது விமர்சத்திற்குள்ளாகியுள்ளது.

முரண்பாடு

முரண்பாடு

நிதி அமைச்சகம் ஆர்டிஐ கேள்விக்கு இப்படி ஒரு மோசமான பதில் அளித்து இருந்தாலும் நாடாளுமன்றத்தில் விஜய் மல்லையா கடன் குறித்துக் கேள்விகள் எழுந்த போது பதில் அளித்துள்ளது.

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

மாநிலங்களவைக்கான நிதி அமைச்சர் சந்தோஷ் கங்கர் 2017-ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி மல்லையாவிற்குக் கடன் 2004-ம் ஆண்டு வழங்கப்பட்டதாகவும் பின்னர் அதுவே 2008-ம் ஆண்டுப் பிப்ரவரி மாதம் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

வரா கடன்

வரா கடன்

2009-ம் ஆண்டு வஜய் மல்லையா பெற்ற 8,040 கோடி ரூபாய் கடனானது வரா கடன் என்று அறிவிக்கப்பட்டது பின்னர் 2010-ம் ஆண்டு மீண்டும் சீரமைக்கப்பட்டது என்றும் அவர் கூறியிருந்தார்.

155 கோடி ரூபாய்

155 கோடி ரூபாய்

மேலும் 2017-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி ராஜ்ய சபாவில் பேசிய சந்தோஷ் கங்கர் 155 கோடி ரூபாய் மதிப்பிலான விஜய் மல்லையாவின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டு அதனை ஏலம் விட்டதன் மூலமாகப் பெற்றுள்ளதாகவும் கூறியிருந்தார்.

அருண் ஜேட்லி

அருண் ஜேட்லி

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது மேல் அவையில் நடைபெற்ற விவாதத்தின் போது 2016-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இந்த வரா கடனுக்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் அரசு தான் என்றும் விமர்சித்தது.

மத்திய தகவல் ஆணையம்

மத்திய தகவல் ஆணையம்

ஆனால் ராகுல் கரே ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்ட போது மத்திய அரசு சரியான பதில் அளிக்காததால் மத்திய தகவல் ஆணையத்தினை அணுகியுள்ளார்.

அர்டிஐ

அர்டிஐ

தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆர்டிஐ கீழ் "தகவல்" என்பது ஒரு பொது அதிகாரத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அல்லது கீழ் வைத்திருக்கும் அல்லது பொது அதிகாரம் படைத்த அனைத்திற்கும் பொருந்தும்.

நிதி அமைச்சகம்

நிதி அமைச்சகம்

மாநிலத்தின் பொருளாதார நலனுக்காகத் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் பாரபட்சமற்ற விளைவுகளுடன் தொடர்புடைய மற்றும் வழக்கு நிலுவையில் உள்ளதன் காரணமாக, மல்லையாவின் கடன்களுக்கான தகவல்கள் வழங்கப்படாது என்று ராகுல் கரேவுக்கு முதலில் நிதி அமைச்சகத்திடம் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது.

தகவல்

தகவல்

நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் அந்தத் தகவல் அமைச்சகத்திடம் இல்லை என்றும் சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திடம் தெரிவித்தார்.

தகவலைக் கொண்டிருக்கும் பொது அதிகார துறைக்கு விண்ணப்பத்தை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

No Information About Vijay Mallya’s Loans says Finance Ministry

No Information About Vijay Mallya’s Loans says Finance Ministry
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X