இந்தியாவில் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டு கடன் அளிக்கும் வங்கிகள் பட்டியல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாடகை வீட்டில் இருக்கும் பலரது முக்கியக் கனவில் ஒன்று என்றால் அது சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது ஆகும். இந்திய பிரதமர் மோடி அவர்களும் 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு அளிக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்.

 

அதே நேரம் வாடகை வீட்டில் வசிப்பதை விடக் கடனில் வீடு வாங்கிவிட்டு வாடகைக்குப் பதிலாகத் தவணையினைக் கட்டிக்கொண்டு சென்றால் என்ன என்றும் பலரும் கணக்குப் போடுவார்கள்.

இப்படிக் கடன் பெற்று வீடு வாங்கும் போது வட்டி விகிதம் எப்படிக் கணக்கிடப்படும் மற்றும் எந்த வங்கிகள் எல்லாம் குறைவான வட்டி விகிதத்தில் வீட்டு கடன் அளிக்கின்ற என்ற பட்டியலை இங்குப் பார்க்கலாம்.

பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

நிலையான வட்டி

நிலையான வட்டி

வீட்டு கடன் பெறும் போது நிலையான வட்டி விகிதத்தின் கீழ் பெறு போது 15 வருடத்திற்குக் கடன் பெறுகிறீர்கள் என்றால் முதல் தவனை முதல் கடைசித் தவனை வரை ஒரே வட்டி விகிதம் தான் வசூலிக்கப்படும்.

மிதக்கும் வட்டி விகிதம்

மிதக்கும் வட்டி விகிதம்

மிதக்கும் வட்டி விகிதமானது மத்திய வங்கி எப்போது எல்லாம் ரெப்போ விகிதத்தினை மாற்றி அமைக்கின்றதோ அதற்கு ஏற்றவாறு வீட்டு கடன் மீதான வட்டி விகிதம் மாறும். சில வங்கிகள் நிலையான வட்டி அல்லது மிதக்கும் வட்டி விகிதம் என நேரத்திற்கு ஏற்றார் போல மாற்றி அமைத்து வீட்டுக் கடனை அடைக்கும் சேவையினை வழங்கி வருகின்றன.

எஸ்பிஐ
 

எஸ்பிஐ

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ 8.30 சதவீதம் முதல் 5.60 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தின் அடிப்படையில் வீட்டுக் கடனை அளிக்கின்றது. பெண்களுக்கு அதிகச் சலுகைகள் உண்டு. ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றால் குறைந்தபட்சம் 855 முதல் 847 ரூபாய் தவணையில் கடனை அடைக்கலாம். கடன் பெறும் தொகையில் 0.35% அல்லது 10,000 ரூபாயுடன் ஜிஎஸ்டி 18 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் 2000 ரூபாய் உடன் ஜிஎஸ்டி செயல்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கும். விழாக் காலச் சலுகையாக 2018 மார்ச் 31 வரை செயல்பாட்டுக் கட்டணம் இல்லாமல் வீட்டுக் கடனை எஸ்பிஐ வங்கி அளிக்கிறது.

 ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ 8.35% முதல் 8.80% வரையிலான மிதக்கும் வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனை அளிக்கின்றது. 0.50% முதல் 1 சதவீதம் வரை கடன் தொகையினைப் பொருத்து செயல்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

 எச்டிஎப்சி வங்கி

எச்டிஎப்சி வங்கி

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் இரண்டாம் மிகப் பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி 8.35% முதல் 8.55 சதவீத வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனை அளிக்கின்றது. கடன் தொகையில் 1.25% அல்லது 3,000 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி எது அதிகமோ அதனைச் செயல்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கின்றது.

எல்ஐசி ஹவுசிங்

எல்ஐசி ஹவுசிங்

எல்ஐசி ஹவுசிங் நிறுவனம் 8.35% முதல் 8.80 சதவீதம் வரையிலான மிதக்கும் வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனை அளிக்கின்றது. 1 கோடி வரை வீட்டு கடன் வாங்கும் போது 5,000 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி என்றும், 1 கோடிக்கும் அதிகமாகக் கடன் பெறும் போது 10,000 மற்றும் ஜிஎஸ்டி செயல்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கின்றது.

டிஎச்எப்எல்

டிஎச்எப்எல்

மிதக்கும் வட்டி விகிதத்தின் கீழ் டிஎச்எப்எல் நிறுவனம் 8.35% வட்டி விகிதத்தில் கடனை அளிக்கின்றது. 5,000 முதல் 20,000 ரூபாய் + ஆவணக் கட்டணம் + ஜிஎஸ்டி உள்ளிட்டவை செயல்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பாங்க் ஆப் பரோடா

பாங்க் ஆப் பரோடா

பாங்க் ஆப் பரோடா வங்கி மிதக்கும் வட்டி விகிதத்தின் கீழ் 8.30% வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனை அளிக்கின்றது. செயல்பாட்டுக் கட்டணமாகக் கடன் தொகையில் 0.5% மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

தேனா வங்கி

தேனா வங்கி

தேனா வங்கி குறைந்தபட்சமாக 8.25% முதல் 8.35% வரையிலான மிதக்கும் வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனை அளிக்கின்றது. செயல்பாட்டுக் கட்டணம் குறித்த தெளிவான விவரங்கள் இல்லை.

 யூனியன் பாங்க் ஆப் இந்தியா

யூனியன் பாங்க் ஆப் இந்தியா

யூனியன் பாங்க் ஆப் இந்தியா 8.30 சதவீதம் முதல் 8.35 சதவீதம் வரையில் வீட்டுக் கடனை அளிக்கிறது. விழாக்காலச் சலுகையாகச் செயல்பாட்டுக் கட்டண சலுகையும் அளித்து வருகிறது.

பாங்க் ஆப் இந்தியா

பாங்க் ஆப் இந்தியா

பாங்க் ஆப் இந்தியா 8.35% முதல் 8.40% வரையிலான வட்டி விகிதத்தில் கடன் அளிக்கிறது. செயல்பாட்டுக் கட்டணமாக 0.25% கடன் தொகையினைப் பெறுகிறது.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டட்த்தின் கீழ் முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு வட்டி விகிதத்தில் இருந்து 2 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை சலுகையும் அளிக்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Home loans interest rates in India 2018

Home loans interest rates in India 2018
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X