பஞ்சாப் நேஷனல் வங்கியை அலறவிட்ட நீராவ் மோடி யார் இவர்?

யார் இந்த நீராவ் மோடி.. இவருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கிற்கும் என்ன சமந்தம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஒரு வாரத்திற்கு முன்பு மக்காவுவில் புதியதாக ஒரு வைர நகை கடையினை நீராவ் மோடி திறந்தார். இதற்கு 3 மாதத்திற்கு முன்பு புது டெல்லியில் உள்ள டிஎல்எப் எம்போரியோ சாணக்கிய மாலில் ஒரு கடை அடுத்த ஒரு வருடத்தில் பெங்களூருவில் ஒரு கடையினை திறக்கவும் திட்டமிட்டு இருந்தார்.

 

மோடி தனது நிறுவனம் மோசடி மற்றும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளின் சிக்கலில் இயங்கி வருவதைப் பொருட்படுத்தாமல் தனது வர்த்தகத்தை கட்டியெழுப்பிக் வேகமாக வளர்ந்துக் கொண்டிருந்தார். அவருடைய நிறுவனத்தின் வலைத்தளம் காதலர் தின சலுகை விளம்பரத்தினை வெளியிட்டு இருந்தது. அதில் ஹாலிவுட் பிரபலங்கள் இவரது கடை நகைகளை அணிந்து இருக்கும் படங்கள் மற்றும் அவர் சமீபத்தில் விளம்பரப்படுத்திய பேஷன் ஷோ விவரங்களைக் கொண்டும் இருந்தது.

இலக்கு

இலக்கு

2020-ம் ஆண்டுக்கு 100 கடைகளையாவது திறக்க வேண்டும் என்பது தான் இவரது இலக்கு. இது வழக்கமாக வேகமாக வளர முயற்சி செய்யும் நிறுவனங்களுக்கு அசாதாரணமது ஒன்றும் இல்லை.

கடைகள்

கடைகள்

நியூயார்க், லாஸ் வேகாஸ், ஹொனலு, சிங்கப்பூர் மற்றும் பெய்ஜிங் உள்ளிட்ட நாடுகளில் இவருக்குச் சொந்தமான பொட்டிக்குகளும் உள்ளன. லண்டனில் இரு கடை, மெக்கவூவில் மூன்று கடைகள், ஹாங் காங்கில் 4 கடைகள் என இவரது வர்த்தகம் வேகமாக வளர்ந்து வர நிறுவனத்தின் வடிவமைப்பு பிரிவை நீராவ் மோடியின் தங்கை பூர்வி மேத்தா நிர்வகித்து வருகிறார்.

வீழ்ச்சி
 

வீழ்ச்சி

இவர் எவ்வளவே வேகமாக வளர்ந்து வந்துள்ளாரோ அவ்வளவு வேகமாகக் கீழே உள்ள இருக்கிறார் என்பது தான் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் இவர் செய்துள்ள மோசடி குறித்த அதிர்ச்சி அளிக்கும் விவரங்கள் நமக்குக் கூறுகிறது.

புகார்

புகார்

மத்திய புலனாய்வு விசாரணை பிரிவுக்கு செவ்வாய்க்கிழமை பஞ்சாப் நேஷ்னல் வங்கியிடம் இருந்து இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டது. ஒன்று நிரவ் மோடிக்கு எதிராகவும் மற்றோன்று இவரது நிறுவனம் 1.8 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகையினை மோசடி செய்தது என்பது ஆகும்.

இதுகுறித்து நீராவ் மோடி மற்றும் ஃபைர் ஸ்டார் சிஎப்ஓ விபுல் அம்பானிக்கும் மின்னஞ்சல் மூலமாகக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் ஏதும் அளிக்கவும் இல்லை. எனவே எவ்வளவு வேகமாக இவர் இந்த வளர்ச்சியினை எட்டியுள்ளார். எப்படிச் சிக்கினார் என்ற விவரங்களை முலுமையாக கீழே பார்க்கலாம்.

 

துவக்கம்

துவக்கம்

நீராவ் மோடியின் குடும்பம் டைமண்ட் புரோக்கர் வணிகத்தினை செய்து வந்தது. இவருக்கு அதில் விருப்பம் இல்லாமல் நிதி துறை சார்ந்த படிப்பில் சேர்ந்த ஒரே வருடத்தில் அதனைத் தொடராமல் வெளியில் வந்துவிட்டார். இவருக்கு 19 வயது ஆன போது மும்பையில் உள்ள தனது தாய் மாமாவான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன தலைவரான மெஹுல் சோக்ஸியிடம் தொழில் கற்க சென்றார்.

1999-ம் ஆண்டு அரிய வைரங்களை விற்கும் ஃபைர் ஸ்டார் வைர நிறுவனத்தினை துவங்கி பல வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கி குவித்துள்ளார். அமெரிக்க ராணுவத்திற்கு வைரம் அளிக்கும் முக்கிய நிறுவனத்தினையும் கைப்பற்றியுள்ளார்.

 

வெளிநாட்டு உற்பத்தி

வெளிநாட்டு உற்பத்தி

இந்தியா மட்டும் இல்லாமல் ரஷ்யா, ஆர்மீனியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலும் இவருக்கு உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. 2008-ம் ஆண்டு இவரது நண்பர் ஒருவர் அரிய வகை வைர நகை ஒன்றை கேட்ட போது தான் ரீடெய்ல் வணிகத்தை துவங்கும் எண்ணம் இவருக்கு வந்தது.

ரீடெய்ல்

ரீடெய்ல்

பின்னர் ரீடெய்ல் நிறுவனத்தினை துவங்கிய இவர் உலகம் முழுவதிலும் உள்ள பல முக்கிய டைம்ண்டு நிறுவனங்களை வாங்கியது மட்டும் இல்லாமல் 2010-ம் ஆண்டு முதல் மிகப் பெரிய வளர்ச்சியினை அடைந்துள்ளார்.

எப்போது முதன் முறையாக மோசடி துவங்கியது?

எப்போது முதன் முறையாக மோசடி துவங்கியது?

2011-ம் ஆண்டு காரியம் கடிதங்கள் எனப்படும் LoUs தேவைப்பட்ட போது தான் இந்த மோசடி முதன் முறையாகத் துவங்கியுள்ளது. LoU மூலமாகத் தான் வெளிநாட்டு பரிவர்த்தனைகளுக்கு வங்கி உத்தரவாதம் அளிக்கும். அதாவது வெளிநாட்டில் ஒருவர் செய்யும் வணிகத்திற்கு வங்கி உத்திரவாதம் அளிக்கும். இந்த உத்தரவாதத்தின் மூலமாக வெளிநாட்டில் இருந்து ஒரு பொருளை இறக்குமதி செய்யும் வணிகர் இந்திய வங்கிகளில் இருந்து குறைவான வட்டி விகிதத்தில் வெளிநாட்டு நாணய கடனை பெறுவார்.

 எப்படி இந்த உத்தரவாதம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது?

எப்படி இந்த உத்தரவாதம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது?

பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் துணை நிர்வாகியான கோகுல்நாத் ஷெட்டி இவருக்கு உள்ள அதிகாரிகளை தவறாக பயன்படுத்தி வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தும் ஸ்விப்ட் தகவல் அமைப்பு மூலமாக உத்தரவாதம் வழங்கியுள்ளார். இந்த உத்தரவாதத்தினால் வெளிநாட்டில் உள்ள பல இந்திய வங்கிகள் வெளிநாட்டு கரன்சியாக இவருக்குக் கடன் வழங்கியுள்ளன.

பிற வங்கிகள் பாதிப்படைந்துள்ளதா?

பிற வங்கிகள் பாதிப்படைந்துள்ளதா?

ஆம், வெளிநாட்டு வங்கி கிளைகள் வைத்துள்ள பல இந்திய வங்கிகள் பஞ்சாப் நேஷ்னல் வங்கி அளித்துள்ள உத்தரவாதத்தின் பேரில் கடன் வழங்கியுள்ளதால் மோசடியில் சிக்கியுள்ளன.

 பஞ்சாப் நேஷ்னல் வங்கி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

பஞ்சாப் நேஷ்னல் வங்கி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

பஞ்சாப் நேஷ்னல் வங்கி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக 10 ஊழியர்களைப் பணி இடைநீக்கம் செய்துள்ளது மட்டும் இல்லாமல் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையிடம் இந்த வழக்கினை ஒப்படைத்துள்ளது.

எப்படி இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது?

எப்படி இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது?

ஜனவரி மாதம் பஞ்சாப் நேஷ்னல் வங்கி அளித்துள்ள உத்தரவாதம் முடிவடைந்தும் பணம் வராததால் என்ன ஆனது என்று கேள்வி கேட்க துவங்கிய போது தான் பஞ்சாப் நேஷ்னல் வங்கி தலைமையகத்திற்கு மோசடி நடைபெற்று இருப்பது தெரியவந்துள்ளது.

 யார் மீது எல்லாம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது?

யார் மீது எல்லாம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது?

நீராவ் மோடி மற்றும் அவரது மனைவி அமி, அண்ணன் நிஷால், மாமா மேகுல் சோக்‌ஷி மற்றும் வங்கி அதிகாரிகள் கோகுல்நாத் ஷெட்ட், மனோஜ் கரத் என்ற கிளர்க் உள்ளிட்டவர்கள் மீது ஐபிசி 120பி கீழ் கிரிமினல் நடவடிக்கை, 420 கீழ் மோசடி வழக்கு மற்றும் பிற ஊழல் சட்டங்களின் கீழ் எல்லாம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊழல் குறித்த அறியத் தகவல்கள்

ஊழல் குறித்த அறியத் தகவல்கள்

கடன் மதிப்பானது 2016-2017 நிதி ஆண்டில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி பெற்ற லாபத்தினை விட 8 மடங்கு அதிகம். பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் சந்தை மதிப்பான 35,300 கோடிக்கும் இணையானது. இரண்டு நாட்களாக பஞ்சாப் நேஷ்னல் வங்கி பங்குகள் 10 சதவீதத்திற்கும் கூடுதலாக சரிந்துள்ளது.

நிதி அமைச்சகம்!

நிதி அமைச்சகம்!

பஞ்சாப் நேஷ்னல் வங்கியால் பிற வங்கிகளை வாட்டி எடுக்கும் நிதி அமைச்சகம்!பஞ்சாப் நேஷ்னல் வங்கியால் பிற வங்கிகளை வாட்டி எடுக்கும் நிதி அமைச்சகம்!

1.77 பில்லியன் டாலர் மோசடி

1.77 பில்லியன் டாலர் மோசடி

<strong>1.77 பில்லியன் டாலர் மோசடி.. முதலீட்டாளர்களுக்கு ரூ.3,000 கோடி நட்டம்! </strong>1.77 பில்லியன் டாலர் மோசடி.. முதலீட்டாளர்களுக்கு ரூ.3,000 கோடி நட்டம்!

ரூ.11,300 கொடி மோசடி

ரூ.11,300 கொடி மோசடி

<strong>பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடைபெற்ற ரூ.11,300 கொடி மோசடி பணத்திற்கு யார் தான் பொறுப்பு?</strong>பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடைபெற்ற ரூ.11,300 கொடி மோசடி பணத்திற்கு யார் தான் பொறுப்பு?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Who is Nirav Modi, the man at the centre of 1.8 billion dollar PNB fraud case

Who is Nirav Modi, the man at the centre of 1.8 billion dollar PNB fraud case
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X