நீராவ் மோடி போன்று கோடி கணக்கில் மோசடி செய்த கோடிஸ்வரர்கள் பட்டியல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடீஸ்வர வரை நகை வியாபாரியான நீராவ் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களுடன் சுற்றி வந்தார். ஆனால் இன்று 11,000 கோடி ரூபாய் மோசடியில் தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாலியாக உள்ளார்.

 

கடந்த 48 மணி நேரமாக அமலாக்கத் துறை நீராவ் மோடியின் ஷோரூம்கள், சொத்துக்கள் போன்றவற்றில் சோதனை நடத்தியதில் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான வைரம் மற்றும் விலை உயர்ந்த கற்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளது.

இதனால் கோடீசுவரர் ஆக வலம் வந்த நீராவ் மோடியின் ராஜ வழக்கை தலைகீழாக மாறியுள்ள நிலையில் நீராவ் மோடி போன்று இந்தியாவில் இதற்கு முன்பு மோசடியில் ஈடுபட்டவர்கள் பட்டியலை இங்குப் பார்க்கலாம்.

விஜய் மல்லையா

விஜய் மல்லையா

இங்கிலாந்தில் இருக்கும் விஜய் மல்லையாவையும் 9,000 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இந்திய அரசு அறிவித்துள்ளது. பிறக்கும் போதே கோடீசுவரனாகப் பிறந்த இவர் மதுபானம், விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் போன்றவற்றைச் செய்து வந்தார். தனது மகனின் 18வது பிறந்த நாள் பரிசாக விமானப் போக்குவரத்து நிறுவனத்தினைத் துவங்கிய இவர் அதன் மீது 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி அதனைத் திருப்பி அளிக்காமல் தலைமறைவாக இங்கிலாந்தில் பதுங்கியிருக்கும் இவர் மீது நீதிமன்றத்தில் வழக்கும் நடத்தப்பட்டு வருகிறது.

ராமலிங்க ராஜூ

ராமலிங்க ராஜூ

7000 கோடி ரூபாய் மதிப்புள்ள சத்யம் மோசடிக்குப் பின்னால் இருந்த ராமலிங்க ராஜூ பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். நீராவ் மோடி போன்ற மென்மையாகப் பேச கூடிய ராமலிங்க ராஜூ சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் செய்த ஊழலை அடுத்து 2009-ம் ஆண்டு ராஜிநாமா செய்து 6 ஆண்டுகள் சிறையில் இருந்த பிறகும் 2015-ம் ஆண்டு ஜாமின் பெற்று வெளிவந்துள்ளார்.

இவருக்கு உதவியாதாக இருந்ததாகப் பிரைஸ்வாட்டர்ஹவுஸ் நிறுவனத்தினை இரண்டு வருடங்களுக்குச் செபி பங்கு சந்தையில் இருந்து தடை செய்தது.

ஷர்சாத் மேத்தா
 

ஷர்சாத் மேத்தா

இந்திய பங்கு சந்தையின் அமிதாப் பச்சன் என்று அழைக்கப்பட்ட ஷர்சாத் மேத்தா பங்கு சந்தையில் 8,000 கோடி ரூபாய் ன்மோசடி செய்துள்ளார். பங்கு சந்தை பரிவர்த்தனையில் போலி செக்குகள் அளித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு இவர் 1992-ம் ஆண்டுக் கைது செய்யப்பட்டார்.

1992-க்கு முன்பே இவர் 26 கோடி ரூபாய் அட்வான்ஸ் டாக்ஸ் கட்டும் அளவிற்கு ஆடம்பர கார், வீடு என வாழ்ந்து வந்தார். இவர் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வரும் போதே 2001 டிசம்பர் மாதம் 31-ம் தேதி இவர் கலாமானார்.

அப்துல் கரிம் டெலிஜி

அப்துல் கரிம் டெலிஜி

ரயில்வே ஊழியர் ஒருவருக்கு மகனாகப் பிறந்து ரயிலில் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்று வந்த இவர் 1994-ல் முதல் முத்திர தாள் மோசடியில் ஈட்டுப்பட்டு வந்த இவர் 2003-ம் ஆண்டுக் கைது செய்யப்பட்டார். முத்திர தாள் முழமாக 20,000 கோடி ரூபாய் வரை இவர் ஊழல் செய்துள்ள காரணத்தினால் 30 ஆண்டுக் கடுங்காவல் தண்டனை உடன் 202 கோடி ரூபாய் அபாராதமும் விதித்து மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தது. 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ம் தேதி பெங்களூரு அரசு மருத்துவமனையில் உடல் உறுப்புகள் செயல் இழந்து காலமானார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

List of crorepatis fraudulent crores of rupees like Nirav Modi

List of crorepatis fraudulent crores of rupees like Nirav Modi
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X