காணாமல் போன 87,000 வேலைவாய்ப்புகள்.. மோடி இதற்கு என்ன சொல்லபோகிறார்..!

87,000 நபர்கள் வேலை வாய்ப்பினை இழந்துள்ள நிலையில் 64,000 பெருக்கு மட்டும் தான் வேலை கிடைத்துள்ளது: அறிக்கை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விவசாயம் அல்லாது வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்பது கடந்த சில காலாண்டுகளாக மத்திய அரசுக்குப் பெறும் தலைவலியாக மாறியுள்ள நிலையில் சென்ற ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 8 முக்கியத் துறைகளில் 64,000 நபர்களுக்கு மட்டும் தான் வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று தரவுகள் கூறுகின்றன.

முக்கியமாக இதில் கவலைப்பட வேண்டியது என்னவென்றால் அதே காலாண்டில் உற்பத்தித் துறையில் மட்டும் 87,000 நபர்கள் தங்களது வேலை வாய்ப்பினை இழந்துள்ளார்கள். மேக் இன் இந்தியா கீழ் பல நிறுவனங்கள் இந்தியாவில் துவங்கப்படுவதாகக் கூறி வரும் நிலையில் பெரிதாக யாருக்கும் வேலை வாய்ப்புக் கிடைத்ததாகத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

 அதிக வேலை வாய்ப்புக் கிடைத்த துறைகள்

அதிக வேலை வாய்ப்புக் கிடைத்த துறைகள்

தொழிலாளர் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2017-ம் ஆண்டிற்கான ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 1.3 லட்சம் வேலை வாய்ப்பினை கல்வி துறையிலும், மருத்துவத் துறையில் பெற்று இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

அதிக வேலை வாய்ப்பினை இழந்த துறைகள்

அதிக வேலை வாய்ப்பினை இழந்த துறைகள்

அதே நேரம் பிற முக்கியத் துறைகளான உற்பத்தி, கட்டுமானம், வணிகம், போக்குவரத்து, தங்கும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் ஐடி / பிபிஓ துறைகளில் 66,000 நபர்கள் வேலைவாய்ப்பினை இழந்துள்ளார்கள்.

 எவ்வளவு வேலை வாய்ப்புகள் கிடைத்தது?

எவ்வளவு வேலை வாய்ப்புகள் கிடைத்தது?

2017-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரை கல்வி துறை தான் அதிகபட்சமாக 99,000 வேலை வாய்ப்புகளை அளித்துள்ளது. மருத்துவத் துறையில் 31,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று 2016 ஏப்ரல் முதல் தொடர்ந்து நடத்தப்பட்ட சர்வே முடிவில் தெரியவந்துள்ளது.

2016

2016

2016 ஏப்ரல் வரை 4.8 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும், அதில் 1.7 லட்சம் நபர்கள் கல்வி துறையிலும், 1 லட்சம் நபர்கள் மருத்துவத் துறையிலும் பெற்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதனை வைத்துப் பார்க்கும் போது 2.3% வேலை வாய்ப்பு வளர்ச்சி கடந்த 15 மாதத்தில் கிடைத்துள்ளது. ஒரு ஆண்டுக்கு மட்டும் என்று பார்த்தால் 1.8 சதவீதம் வளர்ச்சி கிட்டியுள்ளது.

உற்பத்தித் துறை

உற்பத்தித் துறை

என்ன தான் மேக் இந்தியா மீது இந்திய அரசு அதிகக் கவனம் செலுத்தி வந்தாலும் உற்பத்தித் துறையினைப் பெருத்தவரையில் 1 சதவீத வேலை வாய்ப்பு வளர்ச்சியினைக் கூடப் பெறவில்லை என்கின்றனர்.

பெண்கள்

பெண்கள்

கல்வி மற்றும் மருத்துவத் துறையில் அதிக வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்ட நிலையில் ஆண்களை விடப் பெண்களுக்குத் தான் அதிக வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அதாவது 64,000 புதிய வேலை வாய்ப்புகளில் 51,000 பெண்களும், 13,000 ஆண்களும் பெற்று பயன்பெற்றுள்ளனர்.

 மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா கீழ் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்க முடியும் என்று மத்திய அரசு கூறி வந்த நிலையில் புதிய வேலை வாய்ப்புகளை விட வெலை இழப்பே அதிகம் உள்ளது என்று சர்வே முடிவுகள் கூறுகின்றன. இதற்கு மத்திய அரசு என்ன சொல்ல போகிறது?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

87,000 jobs lost, new addition 64,000 only. What happen to Make in India

87,000 jobs lost, new addition 64,000 only. What happen to Make in India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X