நாட்டின் பெரிய தலைகளை சந்தித்த ஜஸ்டின் ட்ரூடோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு வார பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடி இவரை நேரில் சென்று வரவேற்காதது இந்தியாவிலும், கனடாவில் பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பியுள்ள நிலையில், ஜஸ்டின் எவ்விதமான கருத்து வேறுபாடு இல்லாமல் தனது வேலைளை செய்து வருகிறார்.

 

திங்கட்கிழமை மாலை 7 மணிக்கு அகமதாபாத்-இல் இருந்து மும்பை வந்தார் ஜஸ்டின் ட்ரூடோ.

தாஜ் மஹால் ஹோட்டல்

தாஜ் மஹால் ஹோட்டல்

பிப்20 காலை முதல் நாட்டின் பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்தார். இதில் பெரும்பாலான சந்திப்புகள் அனைத்தும் மும்பையில் உள்ள தாஜ் மஹால் ஹோட்டலில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

சந்திரேசேகரன்

சந்திரேசேகரன்

இன்று காலையில் 9 மணிக்குத் தாஜ் மஹால் ஹோட்டலில் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் அவர்களைச் சந்தித்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

இன்போசிஸ்

இன்போசிஸ்

இதன் பின்பு இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓவாகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிலில் பாரிக்-ஐ ஜஸ்டின் 9.40 மணிக்கு சந்தித்தார்.

 ஆனந்த் மஹிந்திரா
 

ஆனந்த் மஹிந்திரா

10.20 மணிக்கு மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா கனடா பிரதமரை சந்தித்தார். சமீபத்தில் இவர் அமெரிக்காவில் பெரிய முதலீட்டில் தனது ஆட்டோமொபைல் வர்த்தகத்தை விரிவுப்படுத்தினார்.

பிற முக்கியத் தலைவர்கள்

பிற முக்கியத் தலைவர்கள்

அதேபோல் ஜூப்லியன்ட் பார்தியா குருப் நிறுவன தலைவர் ஹரி பார்தியா, ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லா, சர்பூர்ஜி பலோன்ஜி குருப்-இன் தலைவர் சைரஸ் மிஸ்திரி ஆகியோரை இன்று சந்தித்தார்.

பெண் தலைவர்கள்

பெண் தலைவர்கள்

மேலும் மதியம் பெண் வர்த்தகத் தலைவர்களுடன் வட்ட மேஜை ஆலோசனையை நடத்தினார் ஜஸ்டின் ட்ரூடோ.

முதல்வர்

முதல்வர்

மேலும் மாலையில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பண்டாவீஸ் அவர்களை ஜஸ்டின் ட்ரூடோ நேரடியாகச் சந்தித்துப் பேச உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Canada PM Justin Trudeau meets Infy, Tata heads

Canada PM Justin Trudeau meets Infy, Tata heads
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X