சம்பளம் தர முடியாது.. வேறு வேலை பார்த்துக்கொள்ளுங்கள்.. நீராவ் மோடி கடிதம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

11,400 கோடி ரூபாய் மோசடி வழக்கில் தேடப்பட்ட வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள வைர வியாபாரி நீராவ் மோடி செவ்வாய்க்கிழமை ஊழியர்களுக்குக் கடிதம் ஒன்றை மின்னஞ்சல் மூலமாக அனுப்பியுள்ளார்.

அமலாக்கத் துறையும், வருமான வரித் துறையும் தங்களது நிறுவனத்தின் பங்குகளைப் பரிமுதல் செய்வது, வங்கி கணக்கை முடக்கியுள்ள காரணங்களாக ஊழியர்களுக்குச் சம்பளம் அளிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்து என்னவெல்லாம் குறிப்பிட்டு இருந்தார் என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

உறுதி

உறுதி

நீராவ் மோடி ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதம் குறித்து விசாரித்த போது நீராவ் மோடியின் சட்ட வல்லுநர்கள் அது உன்மை தான் என்றும் பஞ்சாப் நேஷ்னல் வங்கி மற்றும் அவரது ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதங்கள் போன்று அமலாக்கத் துறை மற்றும் வருமான வரி துறைக்கும் கடிதம் எழுதி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

விசாரணை மற்றும் சோதனை

விசாரணை மற்றும் சோதனை

பஞ்சாப் நேஷ்னல் வங்கி நீராவ் மோடி மீது 11,400 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகச் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையிடம் புகார் அளித்ததை அடுத்து இரண்டு முதல் தரவு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை மற்றும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

 முதல் நாள் சோதனை
 

முதல் நாள் சோதனை

முதல் நாள் நீராவ் மோடி மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான 13 இடங்களில் சோதனை நடத்தியது மட்டும் 5,700 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், வைர நகைகள் போன்றவை பரிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நீராவ் மோடி

நீராவ் மோடி

அமலாக்கத் துறை சோதனை நடத்தி வரும் நிலையில் ஜனவரி 1ம் தேதியே நீராவ் மோடி வெளிநாடு சென்றுவிட்டதாகவும் எங்குச் சென்றுள்ளேன் என்று தற்போதைக்குத் தெரிவிக்க முடியவில்லை என்றும் நிறுவனப் பங்குகள், ஷோரூம்கள், வங்கி கணக்குகள் போன்றவை முடக்கப்பட்டுள்ளதால் தற்போதைக்கு என்னால் உங்கள் சம்பளத்தினை அளிக்க முடியாது. எனவே வேறு வேலைக்குச் செல்லுங்கள் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களும், அரசியல்வாதிகளும் பெரிதுபடுத்துகின்றனர்

ஊடகங்களும், அரசியல்வாதிகளும் பெரிதுபடுத்துகின்றனர்

நீராவ் மோடி எழுதியுள்ள கடிதத்தில் ‘நமது அமைப்பு பாதிப்படைந்துள்ளது' என்று கூறி, என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்று நான் கவனமாகக் கண்காணித்து வருகிறேன். ஊடகங்களும், அரசியல்வாதிகளும் இதனைப் பெரிதுபடுத்தி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாப் நேஷ்னல் வங்கி

பஞ்சாப் நேஷ்னல் வங்கி

பிப்ரவரி 15-ம் தேதி பஞ்சாப் நேஷ்னல் வங்கிக்கு இவர் எழுதிய கடிதத்தில் தான் வாங்கிய கடனை திருப்பி அளிப்பதாகக் கூறியுள்ளதாகவும், வங்கி கூறுவது போன்று 11,400 கோடி ரூபாய் கடன் ஒன்றும் தான் பெறவில்லை, அதை விட மிகக் குறைவாகத் தான் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கணக்கர்

கணக்கர்

மேலும் தனது நிறுவனத்தின் கணக்கர் ஹேமந்த் பட்-க்கு 64 வயது ஆன போதிலும் அவரைக் கைது செய்து விசாரித்து வருவதாகவும் அவர் ஒரு இதய நோயாளி என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டும் இல்லாமல் நேற்று நீராவ் மோடி மற்றும் சோக்‌ஷி என இருவரின் நிறுவனத்தில் இருந்தும் 5 முக்கிய ஊழியர்களையும் கைத்துச் செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

வங்கி ஊழியர்கள்

வங்கி ஊழியர்கள்

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் இருந்தும் இந்த வழக்குடன் தொடர்புள்ளதாகத் தற்போது பணியில் உள்ள ஊழியர்கள் மட்டும் இல்லாமல் முன்னால் ஊழியர்கள் சிலரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரையும் மார்ச் 3ம் தேதி வரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சட்டப்பூர்வமாக மீண்டும் வருவேன்

சட்டப்பூர்வமாக மீண்டும் வருவேன்

ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு எல்லாம் வைர நகைகளை விற்று வந்த நீராவ் மோடி மீண்டு தனது நிறுவனம் மற்றும் ஷோரூம்களைச் சட்டப்பூர்வமான திறப்பேன் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

காலம் விரைவில் மாறும், நாம் மீண்டும் இணைந்து செயல்படும் நேரம் வரும். வங்கி கணக்குகள் மற்றும் பங்குள் மீண்டும் ஒப்படைக்கப்படும் போது இந்தச் சம்பள பாக்கியினை நான் உங்களுக்குத் திருப்பி அளிப்பேன் என்றும் நீராவ் மோடி தெரிவித்துள்ளார்.

 

மொபைல் நம்பர்

மொபைல் நம்பர்

<strong>ஜூலை1 முதல் மொபைல் நம்பர் 10 எண்களில் இருந்து 13 எண்களாக மாற்றம்..! </strong>ஜூலை1 முதல் மொபைல் நம்பர் 10 எண்களில் இருந்து 13 எண்களாக மாற்றம்..!

ஏர்செல்

ஏர்செல்

<strong>5,000 ஊழியர்களுக்கு எச்சரிக்கை.. ஒன்றும் செய்யமுடியாத நிலையில் ஏர்செல்..!</strong>5,000 ஊழியர்களுக்கு எச்சரிக்கை.. ஒன்றும் செய்யமுடியாத நிலையில் ஏர்செல்..!

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

<strong>கீதாஞ்சலி ஜெம்ஸ் விளம்பரத்தில் நடித்ததற்கு மெஹுல் சவுக்ஷி சம்பளம் பாக்கி வைத்துள்ளார்: கங்கனா ரனாவத்</strong>கீதாஞ்சலி ஜெம்ஸ் விளம்பரத்தில் நடித்ததற்கு மெஹுல் சவுக்ஷி சம்பளம் பாக்கி வைத்துள்ளார்: கங்கனா ரனாவத்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Look for other jobs, can’t pay you now: Nirav Modi’s letter to employees after PNB fraud

Look for other jobs, can’t pay you now: Nirav Modi’s letter to employees after PNB fraud
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X