இந்த பெண்ணு போட்ட ஒத்த டிவீட்டால 8,500 கோடி நஷ்டம்.. யார் இவர்..? என்ன செய்தார்? நியாபகம் இருக்கா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சினிமா, அரசியலில் இருந்தால் மட்டுமே பிரபலம் ஆக முடியும் என்பதெல்லாம் அந்தக் காலம், சமுக வலைத்தளம் ஆதிக்கம் செலுத்தும் நடைமுறை வாழ்க்கையில் கோடிக்கணக்கானோர் பிரபலமாகவும், பல கோடிப் பேர் பாலோ செய்யும் அளவிற்கும் ஒரு சக்திவாய்ந்த நபராகவும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் Kylie Jenner. இவர் டிவி தொகுப்பாளர், மாடல், சமுக வலைத்தளத்தில் பிரபலம் எனப் பல வெற்றி முகத்தைக் கொண்டுள்ளார். இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இவர் கிம் கர்தாஷியன்-இன் தங்கை.

ஸ்னாப்சேட்

ஸ்னாப்சேட்

சமுக வலைத்தள உலகில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்று புகழ்பெற்று விளங்கும் ஸ்னாப்சேட், தனது செயலியில் சில மாற்றங்களைச் சில நாட்களுக்கு முன்பும் வெளியிட்டது.

பல கோடிப்பேர் பயன்படுத்தும் இந்த ஸ்னாப்சேட் செயலியின் புதிய மாற்றங்கள் பல வாடிக்கையாளர்களுக்குப் பிடிக்கவில்லை எனக் கருத்துகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஸ்னாப்சேட் நிறுவனத்திற்குத் தெரிவிக்கப்பட்டு வந்தது.

 

வெடித்தது பூகம்பம்

வெடித்தது பூகம்பம்

இந்நிலையில் ஸ்னாப்சேட் தளத்தில் புகழ்பெற்று விளங்கும் கெய்லி ஜென்னர் தனது ஸ்னாப்சேட் கணக்கில், தான் இனி ஸ்னாப்சேட் செயலியை பயன்படுத்தப்போவதில்லை என்று தெரிவித்தார்.

காரணம் என்ன..?

காரணம் என்ன..?

கெய்லி ஜென்னர் செய்ய டிவிட்டுக்கு என்ன காரணம் என ஆய்வு செய்கையில் இரு காரணங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுது. ஒன்று சமீபத்தில் அவர் பெண் குழந்தை பெற்றுள்ளார். குழந்தையைக் கவனிக்கும் வேண்டியதால் தான் ஸ்னாப்சேட்-க்கு வரப்போவதில்லை எனக் கருதப்படுகிறது.

மற்றொன்று இந்நிறுவனம் அறிமுகம் செய்த புதிய மாற்றங்கள் பிடிக்காத காரணத்தால் இதைப் பதிவு செய்துள்ளார்.

ஆனால் 2வது காரணமே அனைத்துத் தரப்பினராலும் ஏற்கப்பட்டுள்ளது.

 

வைரல்..

வைரல்..

இது செய்தி அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பரவியது மட்டும் அல்லாமல் ஸ்னாப்சேட் நிறுவனத்தை நேரடியாகப் பாதித்தது.

பங்கு மதிப்பு

பங்கு மதிப்பு

இந்தச் செய்தியால் வியாழக்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் ஸ்னாப்சேட் நிறுவனத்தின் பங்குமதிப்பு அமெரிக்கப் பங்கு சந்தையில் 6.1 சதவீதம் வரையில் சரிந்து சுமார் 1.3 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மூலதனத்தை இழந்துள்ளது.

இது இந்திய ரூபாய் மதிப்பில் 8,436 கோடி ரூபாய்.

 

பின்தொடருபவர்கள்

பின்தொடருபவர்கள்

கெய்லி ஜென்னர்-ஐ மட்டும் ஸ்னாப்சேட்டில் சுமார் 2.45 கோடி பேர் பின் தொடர்கின்றனர்.

டிவிட்டர் கருத்து..

அவை அனைத்தையும் தாண்டி கெய்லி ஜென்னர் டிவிட்டரில், நான் மட்டும் தான் ஸ்னாப்சேட்-ஐ திறக்கவில்லையா? இல்லை என்னைப்போல் வேற யாரேனும் இருக்கிறீர்களா.. ரொம்ப வருத்தம்.. என டிவிட் செய்துள்ளார்.

இதன் மூலம் 2வது கணிப்பு தான் உண்மையான காரணம் எனத் தற்போது உறுதியாகியுள்ளது.

 

 கோவிந்தா கோவிந்தா..

கோவிந்தா கோவிந்தா..

கெய்லி ஜென்னர் செய்த ஒரு டிவீட்டால் ஸ்னாப்சேட் இழந்த 8,500 கோடி ரூபாயை எப்படி ஈடு செய்யப்போகிறது என்பது இன்னும் ஸ்னாப்சேட் முடிவு செய்யவில்லை.

மேலும் டிசைன்களை மீண்டும் பழைய வடிவத்திற்கே மாற்றப்போகிறதா இல்லை தொடர்ந்து இதே வடிவத்தில் இயங்க உள்ளதா என்பது குறித்து எதுவும் ஸ்னாப்சேட் தெரிவிக்கவில்லை.

 

மிரளவைக்கும் வருமானம்..!!

மிரளவைக்கும் வருமானம்..!!

<strong>இன்ஸ்டாகிராம்-இல் கோடிகளை அள்ளும் பிரபலங்கள்.. மிரளவைக்கும் வருமானம்..!!</strong>இன்ஸ்டாகிராம்-இல் கோடிகளை அள்ளும் பிரபலங்கள்.. மிரளவைக்கும் வருமானம்..!!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

In one tweet, Kylie Jenner wiped out $1.3 billion of Snap

In one tweet, Kylie Jenner wiped out $1.3 billion of Snap
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X