நீரவ் மோடி வெறும் ரூ.11,300 கோடி தான் மோசடி.. ரூ.1,00,000 கோடி மோசடியான கதை தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரிகளான நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெஹூல் கோக்சி ஆகியோர் செய்த மோசடியின் அளவு மட்டும் 20,000 கோடி ரூபாய். இதில் நீரவ் மட்டும் 11,300 கோடி ரூபாய் அளவிலான மோசடியைச் செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ரோட்டோமேக், ஓரியென்டல் பாங்க் ஆப் காமர்ஸ் எனத் தொடர்ந்து வங்கி மோசடிகள் வெளிவந்துகொண்டு இருக்கும் நிலையில் சுமார் 1,00,000 கோடி ரூபாய் அளவிலான மோசடி குறித்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

நாணயமற்றவர்

நாணயமற்றவர்

சமீபத்தில் வங்கிகளால் நாணயமற்றவர், அதாவது வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாதவர்களை வங்கி நிர்வாகம் நாணயமற்றவர் என அறிவிக்கும்.

இப்படி வங்கி நிர்வாகம் அறிவித்துவிட்டால் எந்தொரு வங்கியும் இவருக்கு உதவி செய்யாது.

 

விஜய் மல்லையா

விஜய் மல்லையா

சமீபமாகக் கிங்பிஷர் நிறுவன தலைவர் விஜய் மல்லையா நாணயமற்றவர் என அறிவிக்கப்பட்டார். இப்படி 9,339 பேர் நாணயமற்றவராக அறிவிக்கப்பட்டுச் சுமார் 1,00,000 கோடி ரூபாய் அரசு வங்கிகளுக்குச் சுமையாக மாறியுள்ளது.

பொதுத்துறை வங்கிகள்

பொதுத்துறை வங்கிகள்

பொதுத்துறை வங்கி பிரிவில் செப்டம்பர் 2017 வரையிலான காலத்தில் 7,564 பேர் நாணயமற்றவராக அறிவிக்கப்பட்டுச் சுமார் 93,357 கோடி ரூபாய் அளவிலான நிதி வங்கிகளுக்குச் சுமையாக மாறியுள்ளது.

 340 சதவீத வளர்ச்சி
 

340 சதவீத வளர்ச்சி

2013ஆம் ஆண்டு 25,410 கோடி ரூபாயாக இருந்த நாணயமற்றவர்களின் நிதி 2018ஆம் ஆண்டில் 1,11,738 கோடி ரூபாயாக உள்ளது.

தனி அமைப்பு

தனி அமைப்பு

வங்கி அமைப்புகளில் வளர்ந்து வரும் மோசடிகளைக் கவனிப்பதற்காக மத்திய வங்கி அமைப்பான ரிசர்வ் வங்கி தனி அமைப்பை உருவாக்கியது.

 ரோட்டோமேக் விக்ரம் கோத்தாரி

ரோட்டோமேக் விக்ரம் கோத்தாரி

ரோட்டோமேக் நிறுவனத்தின் தலைவரான விக்ரம் கோத்தாரி 2008 முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், வெளிநாட்டில் இருக்கும் வர்த்தகர்களுக்கு (Buyers and sellers) பணம் செலுத்த வேண்டும் என்பதற்காக Foreign letters of credit (FLCs) அடிப்படையாகக் கொண்டு பல நூறு கோடி ரூபாய் பணத்தைப் பல முறை கடனாகப் பெற்றுள்ளார்.

விர்ச்சுவல் நிறுவனங்கள்

விர்ச்சுவல் நிறுவனங்கள்

ஆனால் இவர் கூறிய வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்தும் விர்ச்சுவல் நிறுவனங்கள் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. (இருக்கு ஆனா இல்லை என்பது போன்ற நிறுவனங்கள் இது.)

வைர வியாபாரிகள்

வைர வியாபாரிகள்

வைர வர்த்தகத்திற்காகப் பஞ்சாப் நேஷனல் வங்கி நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி ஆகிய இருவருக்கும் போலியான LoU கடிதம் அளிக்கப்பட்டுப் பல வங்கிகளின் வாயிலாக வெளிநாடுகளில் இருக்கும் கணக்குகளுக்குப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

17,632 கோடி ரூபாய் மோசடி

17,632 கோடி ரூபாய் மோசடி

மார்ச் 2017ஆம் ஆண்டு வரையில் 17,632 கோடி ரூபாய் நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி ஆகியோருக்குத் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுத் தற்போது இந்தப் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதை வரித்துறை கண்டுபிடித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

These people owe banks over Rs 1 lakh crore: Bigger than nirav modi

These people owe banks over Rs 1 lakh crore: Bigger than nirav modi
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X