சொந்த நிலம் கூட இல்லாத விவசாயி மகன் ரூ.3,300 கோடிக்கு அதிபதி.. ஆரோக்கியசாமி வேலுமணி-யின் கதை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோயம்புத்தூர் மாவட்டத்தின் குக்கிராமத்தில், நிலமில்லா ஏழை விவசாயியின் நான்கு பிள்ளைகளில் ஒருவராக 1959 ல் பிறந்தார் ஆரோக்கியசாமி வேலுமணி. அவரது தாய் தனி ஒருவராகப் பொறுப்பை ஏற்று, இரண்டு எருமைகளின் பாலை விற்று வரும் வார வருமானம் ரூ.50 ஐ கொண்டு அடுத்த 10 வருடம் குடும்பத்தைக் கவனித்து வந்தார்.

படிப்பு

படிப்பு

அடிப்படை கல்வியைப் பெறவே சிரமப்படும் கிராமத்தில் வளர்ந்த வேலுமணி , நல்ல உயர்கல்வியைத் தேடி கிராமத்தை விட்டு வெளியேறினார். அப்போதெல்லாம், கல்லூரி செல்லும் இளைஞர்களின் நோக்கமே வேறாக இருந்தது. அது நல்ல அழகான மனைவி தேடுவதற்கே!

ரெட்ஃடீப் உடன் நடத்திய உரையாடலில் அவர் கூறியதாவது, அந்த நாட்களில் எங்கள் ஊரில் பட்டம் பெற்ற ஆண்களுக்கே நல்ல மணமகளாகக் கிடைக்கும் என்றார்.

 

வேலை

வேலை

19 வயதில் பிஎஸ்சி பட்டம் பெற்ற அவரால், நல்ல வேலையைத் தேட முடியவில்லை. இறுதியில், கோவையில் உள்ள 'ஜெமினி கேப்சூல்ஸ்' என்னும் சிறிய மருந்து நிறுவனத்தில் ரூ150 மாத சம்பளத்தில் பணியில் சேர்ந்தார். அதில், ரூ50 ஐ தனது செலவுக்காக வைத்துக்கொண்டு, மீதியைப் பெற்றோருக்கு தந்தி அனுப்புவேன் என நினைவு நினைவுகூர்கிறார் வேலுமணி. 4 வருடங்கள் அங்குப் பணியாற்றிய அவர், பின்பு அந்நிறுவனத்தை விட்டு விலகி மும்பையில் உள்ள 'பாபா அணு ஆராய்ச்சி மையத்தில்' பணிக்குச் சேர்ந்தார்.

ஏழ்மை டூ மேல்தட்டு மக்களில் ஒருவன்

ஏழ்மை டூ மேல்தட்டு மக்களில் ஒருவன்

தனது பெற்றோர் அப்போது மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தனர். எனக்கு ஒரு ஜோடி செருப்பு, அரைக்கால் சட்டை கூட வாங்கித்தர இயலாத நிலைமை தான். நான் அடித்தட்டு நிலையில் பிறந்தவன். அது அவ்வளவு சுலபமல்ல. ஆனால், இன்று நான் மேல்தட்டு மக்களில் ஒருவனாக உள்ளேன்" எனக் குவார்ட்ஸ் ஊடகத்திடம் பகிர்ந்தார்.

திருமணம்

திருமணம்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணியாற்றும் சுமதி என்பவரைத் திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பிறகு, தைராய்டு பயோ கெமிஸ்ட்ரி பிரிவில் முனைவர் பட்டம் பெற்று ரூ 2 லட்சம் முதலீட்டில் தைரோகேர் நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று, அவரின் நான்கு சகோதரர்களில் ஒருவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகப் பணியாற்றுகிறார். இவரின் மனைவியும் உற்ற துணையாக இருந்து, நிறுவனத்தின் மனிதவள துறையை நிர்வகிக்கிறார்.

தைரோகேர் பங்குகள்

தைரோகேர் பங்குகள்

2016 மே மாதம், சந்தையில் பொதுமக்களுக்குக் கிடைப்பதற்குச் சரியாக 100 நாட்களுக்கு முன்பு, இந்நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் ரூ. 3377 கோடி (505 மில்லியன் டாலர்) மதிப்பில் நுழைந்தது. குவார்ட்ஸ் மீடியா அறிக்கையின் படி, தற்போது அவர் 323 மில்லியன் டாலர் மதிப்புடைய 64% தைரோகேர் பங்குகளை வைத்துள்ளார்.

சர்வதேச அளவில் கிளைகள்

சர்வதேச அளவில் கிளைகள்

தைரோகேர் உலகின் மிகப்பெரிய தைராய்டு பரிசோதனை நிறுவனமாக, இந்தியா, நேபாளம், வங்கதேசம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கிளைகளைக் கொண்டு பரந்து விரிந்து உள்ளது. மேலும் இந்நிறுவனம் வருடத்திற்கு 9 மில்லியன் மாதிரிகளைக் கையாண்டு, 30 மில்லியன் பரிசோதனைகள் செய்யும் சுகாதாரப் பரிசோதனை மையங்களை இந்தியா முழுவதும் கொண்டுள்ளது.

கடலைமிட்டாய்

கடலைமிட்டாய்

<strong>இந்தியா முழுவதும் கடலைமிட்டாய் விற்கும் தமிழன்.. ரூ.1,450 கோடி வர்த்தக சாம்ராஜ்யம்..!</strong>இந்தியா முழுவதும் கடலைமிட்டாய் விற்கும் தமிழன்.. ரூ.1,450 கோடி வர்த்தக சாம்ராஜ்யம்..!

ரூ.300 கோடி சம்பாதிக்கும் நடராஜன்..!

ரூ.300 கோடி சம்பாதிக்கும் நடராஜன்..!

<strong>பஸ் ஸ்டாண்டு பழ கடையில் வாழ்க்கையை துவங்கி வருடத்திற்கு ரூ.300 கோடி சம்பாதிக்கும் நடராஜன்..!</strong>பஸ் ஸ்டாண்டு பழ கடையில் வாழ்க்கையை துவங்கி வருடத்திற்கு ரூ.300 கோடி சம்பாதிக்கும் நடராஜன்..!

200 ஆடம்பர கார்கள்

200 ஆடம்பர கார்கள்

<strong>200 ஆடம்பர கார்கள் வைத்திருக்கும் ரமேஷ் பாபு.. யார் இவர் தெரியுமா.,?</strong>200 ஆடம்பர கார்கள் வைத்திருக்கும் ரமேஷ் பாபு.. யார் இவர் தெரியுமா.,?

சவுந்தரராஜனின் ரூ.5,000 கோடி சொத்து..!

சவுந்தரராஜனின் ரூ.5,000 கோடி சொத்து..!

<strong>11ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த சவுந்தரராஜனின் ரூ.5,000 கோடி சொத்து..!</strong>11ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த சவுந்தரராஜனின் ரூ.5,000 கோடி சொத்து..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How a landless farmer's son built a Rs 3,300cr empire: Arokiaswamy Velumani's story

How a landless farmer's son built a Rs 3,300cr empire: Arokiaswamy Velumani's story
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X