நீங்கள் பணிப்புரியும் நிறுவனம் டிடிஎஸ்-ஐ அரசுக்கு செலுத்துகிறதா? இல்லையா? கண்டறிவது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இது மோசடிக்கான காலம் போல. பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மோசடி, ரோட்டாமேக் நிறுவனத்தில் மோசடி எனத் தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டு இருக்கும் நேரத்தில் 447 நிறுவனங்கள் 3,200 கோஇ ரூபாய் டிடிஎஸ் என்ற பெயரில் ஊழியர்களின் சம்பளத்தினைப் பிடித்து வைத்து அதனை அரசுக்குச் செலுத்தாமல் தங்களது வணிக முதலீட்டிற்காகப் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.

எனவே இது போன்று உங்களது சம்பளத்தில் டிடிஸ் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது என்றால் படிவம் 16 மற்றும் படிவம் 26AS-ஐ பயன்படுத்திக் கண்டறிவது எப்படி என்று விளக்கமாகப் பார்க்கலாம்.

நிறுவனங்கள் எப்போது டிடிஎஸ்-ஐ தாக்கல் செய்ய வேண்டும்?

நிறுவனங்கள் எப்போது டிடிஎஸ்-ஐ தாக்கல் செய்ய வேண்டும்?

வருமான வரித் துறையில் ஒரு நிறுவனமானது காலாண்டு வாரியாக டிடிஎஸ்-ஐ தாக்கல் செய்ய வேண்டும். ஒரு காலாண்டு முடிவுற்றால் அடுத்த மாதத்தின் இறுதிக்குள் டிடிஎஸ்-ஐ நிறுவனமானது தாக்கல் செய்ய வேண்டும். ஜூன் மாதத்துடன் முடிவடையும் காலாண்டிற்கு ஜூலை 31-ம் தேதிக்குள் டிடிஎஸ் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவரங்கள் படிவம் 26AS மூலமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும். எனவே படிவம் 26AS-ஐ ஊழியர்கள் சரிபார்ப்பது மூலமாக எளிதாக டிடிஎஸ் தாக்கல் செய்யப்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

பொதுவாக டிடிஎஸ் விவரங்கள் 2 நாட்களில் புதுப்பிக்கப்படும். ஆனால் 10 நாட்கள் வரை காத்திருப்பது நல்லது.

 

பொருத்தமற்றவற்றைச் சரிபார்த்தல்

பொருத்தமற்றவற்றைச் சரிபார்த்தல்

வருமான வரித் துறையினால் உருவாக்கப்பட்ட படிவம் 26AS-ஐ டிரேசஸ் இணையதளம் மூலமாக வருமான வரித் துறை இணையதள ஐடி கடவுச்சொல் பயன்படுத்திப் பதிவிறக்கம் செய்ய முடியும். இந்தப் படிவத்தில் உங்கள் பெயரில் கடந்த ஒரு ஆண்டுகளாகப் பிடித்தம் செய்யப்பட்ட வரி விவரங்கள் இருக்கும். தனிநபராலும் படிவம் 26AS-ஐ பதிவிறக்கம் செய்ய முடியும். இந்தப் படிவத்தில் இருக்கும் விவரங்களையும் படிவம் 16 அல்லது 16A-ல் உள்ள விவரங்களுடன் ஒப்பிட்டு எளிதாகச் சரிபார்க்க முடியும்.

 ஊழியர்கள் கவனத்திற்கு

ஊழியர்கள் கவனத்திற்கு

ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்குப் பான் விவரங்களை அளிக்க வேண்டும். பான் எண் அளிக்கவில்லை என்றால் கூடுதலாக வரிப் பிடித்தம் செய்யப்படும். தவறான பான் எண்ணை அளித்துவிட்டால் படிவம் 26AS-ல் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டு இருக்கும் விவரங்களைப் பெற முடியாது.

ஊழியர்கள் அதிர்ச்சி..!

ஊழியர்கள் அதிர்ச்சி..!

<strong>ஊழியர்களின் வரி பணத்தை ஏமாற்றும் நிறுவனங்கள்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!</strong>ஊழியர்களின் வரி பணத்தை ஏமாற்றும் நிறுவனங்கள்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to check if employer is depositing your TDS with the government

How to check if employer is depositing your TDS with the government
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X