உலக வங்கி அமைப்பை ஆட்டிப்படைப்பதே இவர்கள்தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வங்கிகளே நமது நிதி கட்டமைப்பின் அடித்தளம் என்பதை, பொருளாதார வீழ்ச்சிகளும், 1929ல் வங்கிகளில் நடந்த பேரழிவு, 2008ன் அடமானம் மற்றும் கடன் நெருக்கடி போன்றவை தெளிவாக்குகின்றன. வங்கிகள் சரியாகச் செயல்படாதபோது பொருளாதாரமும் வீழ்ச்சி அடைகிறது. பொருளாதாரத்தின் அனைத்துக் கூறுகளைப் போலவும், வங்கித்துறையும் கடந்த சில நூற்றாண்டுகளாகப் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது.

 

இந்த 100 ஆண்டு வங்கித்துறை வளர்ச்சியில் முடிசூடா மன்னனாக இருந்தவர்கள் யார், என்பதைத் தாண்டி இனி வரும் காலத்தில் அவர்கள் கட்டிய சாம்ராஜியம் அசைக்க முடியாத இடத்திலும் உள்ளது.

அப்படிப்பட்டவர்கள் யார்..?

 மேயர் மற்றும் நாதன் ரோத்ஸ்சைல்டு (Mayer and Nathan Rothschild)

மேயர் மற்றும் நாதன் ரோத்ஸ்சைல்டு (Mayer and Nathan Rothschild)

ஜெர்மனியில் உள்ள ஜூவிஸ் ஃகெட்டோ (Jewish ghetto) என்ற இடத்தைச் சேர்ந்தவர் மேயர் ஆம்சில் ரோத்ஸ்சைல்டு. 1700களில், கிறித்துவக் கந்துவட்டி சட்டத்தின் கீழ் லாபத்திற்காகக் கடன் வழங்குவது தடுக்கப்பட்டது. அதனால் ஜூவிஸ் மக்கள், வணிக வங்கியை ஒரு வர்த்தகமாகத் தேர்வுசெய்ய முடிந்தது.

மேயரும் அது போலச் செய்து, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ராஜாக்களுக்கும், இளவரசர்களுக்கும் குறைந்த வட்டிவிகிதத்தில் கடன் தரும் வலையமைப்பை கட்டமைத்தார். அதன் மூலம் தன் குடும்பத்தை வளப்படுத்தி, தன் மகன்களுக்கு வங்கித்துறையில் பயிற்சி அளித்து வெளிநாடுகளுக்கு அனுப்பினார்.

 

 அடுத்தத் தலைமுறை வர்த்தகம்

அடுத்தத் தலைமுறை வர்த்தகம்

அவரின் பிள்ளைகள் ஐரோப்பியா முழுதும் பரந்து விரிந்து, ரோத்ஸ்சைல்டு வங்கியை எல்லைகள் கடந்து முதல் வங்கியாக மாற்றினர். அவரின் மகன் நாதன் தலைமையேற்று, சர்வதேச பொருளாதாரத்தை வழிநடத்தினார். புறாக்கள் மூலம் சகோதரர்களுடன் தொடர்புகொண்டு, ஐரோப்பியாவின் மத்திய வங்கியாகச் செயல்பட்டார். அரசர்களின் கொள்முதல்களில் தரகு செய்வது, தேசிய சொத்துக்களை மீட்பது, ரயில்பாதை போன்ற உட்கட்டமைப்புத் திட்டத்திற்கு நிதி தருவது எனத் தொழில் புரட்சிற்கு வித்திட்டார்.

ஜூனியஸ் மற்றும் ஜ.பி.மார்கன் (Junius and JP Morgan)
 

ஜூனியஸ் மற்றும் ஜ.பி.மார்கன் (Junius and JP Morgan)

தந்தை, மகன் சேர்ந்து அமெரிக்காவிற்கு உண்மையான பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தினர். இங்கிலாந்தில் உள்ள முதலீட்டுச் சந்தையில் அமெரிக்காவும் சேர்ந்து கொள்ள ஜார்ஜ் ஃபியாபாடி என்பவருக்கு ஜூனியஸ் மார்கன் உதவினார். அமெரிக்காவைக் கட்டமைக்கப் பயன்பட்ட அரசு முதலீட்டுப் பத்திரங்களை வாங்கியவர்களில் பெரும்பாலும் ஆங்கிலேயர்களே. தந்தைக்குப் பிறகு, மகன் ஜபி மார்கன் பொறுப்பேற்று நாட்டின் தொழில்துறை புரட்டிப்போட்டார்.

இரு பெரும் அறக்கட்டளைகள், அதிக அதிகாரம் மற்றும் முதலீட்டில், வட்டிவிகிதத்தில் போட்டிபோட்டுத் தொழிற்சாலைகளில் நிதி சீரமைப்புகள் செய்வதைக் கண்டார்.

 

பெடரல் ரிசர்வ்

பெடரல் ரிசர்வ்

20ம் நூற்றாண்டில் அமெரிக்கா, அதிகார திரட்டல் மூலம் உற்பத்தித் துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது மற்றும் ஜபி அவர்கள் வால் ஸ்டிரீட்டின் தலைமை பொறுப்பை ஏற்றார். பெடரல் ரிசர்வ் வங்கி உருவாக்கப்படும் வரை, மார்கன் மற்றும் அதன் கூட்டமைப்புமே அமெரிக்காவின் மத்திய வங்கியாகச் செயல்பட்டன.

பால் வார்பர்க் (Paul Warburg)

பால் வார்பர்க் (Paul Warburg)

1907 ல் நடந்த வங்கிகளின் பீதியில் ஜபி மார்கனின் இடையூறு, அமெரிக்காவின் பலமான மத்திய வங்கியின் தேவையை உணர்த்தியது. பால் வார்பர்க் என்ற வங்கியாளர், ஃகூன், லியோப்&கோ சேர்ந்து அமெரிக்காவின் நவீன பலமான மத்திய வங்கியை கட்டமைக்க உதவினர்.

மத்திய வங்கி அமைப்பை நீண்டகாலம் பயன்படுத்தி வந்த ஜெர்மனியில் இருந்து வார்பர்க் அமெரிக்கா வந்தார். பெடரல் ரிசர்வ் வங்கியைக் கட்டமைக்க, இவரின் அறிக்கைகளும், குழுவில் இவரின் ஈடுபாடும் அதிக ஊக்கமளித்தன. இவரின் பரிந்துரையான "கூட்டமைப்புத் தலைவர்களைத் தேர்வுசெய்வதில் அரசியல் நடுநிலை" ஐ அப்போதைய அதிபர் ஏற்கவில்லை.இருந்தாலும், அவர் துணைத்தலைவர் பதவிக்கு மேல் எந்தப் பதவியையும் ஏற்காமல், இறக்கும் வரை இதற்காகவே உழைத்தார்.

 

 அமேடியோ பி. கியானினி (Amadeo P.Giannini)

அமேடியோ பி. கியானினி (Amadeo P.Giannini)

இவருக்கு முன்பு வரை, வால் ஸ்டிரீட் வங்கிகள் மேல்தட்டு மக்களுக்கானதாக இருந்தது. சாதாரண மனிதன் அங்கு நுழைந்து வங்கி கணக்கை துவங்குவது, பங்கிங்காம் அரண்மனையில் நுழைந்து படுக்கையறை உபயோகிப்பதைக் காட்டிலும் கடினம். இவற்றையெல்லாம் மாற்றி, எளிய மக்களுக்காகப் போராடினார் கியானினி. தனது வங்கியை, சொந்த மாநிலமான கலிபோர்னியாவில் துவங்கி பல்வேறு கடன் திட்டங்களை அறிவித்து, விளம்பரம் மூலம் முதலீட்டாளர்களைக் கவர்ந்தார்.

கியானினி ஓய்வுபெறும் போது, வால் ஸ்ட்ரீட்-ஆல் , பேங்க ஆப் அமெரிக்கா-வாக வளரவேண்டிய இது தடம்புரண்டது. கியானினி பதில் வால்ஸ்ட்ரீட் பணியாளர், உயர்மட்ட குழுவால் நியமிக்கப்பட்டார். அவர் வங்கியின் வலையமைப்பை சிதைத்து , அதை வால் ஸ்ட்ரீட் நண்பர்களுக்கு விற்றார். இதனால், கியானினி ஓய்விலிருந்து திரும்பி, வங்கியை மீட்டெடுக்கக் கடுமையாகப் போராடினார்.

 

ஓய்வு பெறவே இல்லை

ஓய்வு பெறவே இல்லை

பின்னர், அவர் 1949ல் இறக்கும் வரை ஓய்வு பெறவே இல்லை. அவரை வால் ஸ்ட்ரீட் பணியாளராக இல்லாமல், வங்கிகளில் ஜனநாயக தன்மையை நிலைநாட்டியவர் எனலாம். கலிபோர்னியாவின் மிகப்பெரிய பொருளாதாரங்களுக்கு நிதி மற்றும் கடனுதவி வழங்கியவர் என்பது அவர் வாழ்வின் நினைவுச்சின்னமாக நீடித்திருக்கும்.

 சார்லஸ் மெரில் (Charles Merrill)

சார்லஸ் மெரில் (Charles Merrill)

கியானினி அவர்களின் வழித்தோன்றலாக இருந்து, முதலீட்டு வங்கி என்ற அமைப்பை அடிமட்டத்திலிருந்து கட்டமைத்தார். அவர் ஓய்வுபெற்ற நிலையில், பி.ஏ. பியர்ஷ் &கோ (E.A. Pierce and Co) நிறுவனத்தை வழிநடத்தக் கோரினர். அதை ஒப்புக்கொண்டு, தனது பெயரை நிறுவனத்தில் சேர்த்து, நிறுவனத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து வழிநடத்தினார். இந்தப் புதிய வாய்ப்பைப் பயன்படுத்தி 'மக்களின் மூலதனம்' என்ற தனது திட்டத்தைத் தொடங்கினார்.

சேப்-வே

சேப்-வே

அவரின் முதல் நிறுவனம், சேப்-வே (Safeway) அதுபோன்ற தொடர் நிதி நிறுவனங்களில் அதிகக் கவனம் செலுத்தியதால், அதனைப் பின்பற்றி (குறைந்த முதலீடு, அதிக விற்பனை) சில்லறை வங்கிகளை உருவாக்க விரும்பினார். ஆனால், அவருக்கு இரு தடைகள் இருந்தன. குறைந்த கல்வியறிவு மற்றும் 1929 வங்கி பேரழிவினால் ஏற்பட்ட நம்பிக்கையின்மை.

மெர்ரில் இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் எதிர்கொண்டார். அவரும், நூற்றுக்கணக்கான ஊழியர்களும் முதலீடு பற்றிய துண்டுப் பிரசுரங்களை எழுதியும், கருத்தரங்குகள் நடத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினர். மேலும், அங்குப் பெண்களைத் திரட்டக் குழந்தை பாதுகாப்பு முகாம்களை நடத்தினார். இதன் மூலம் முதலீடுகளைப் பற்றி விழிப்பு ஏற்படுத்தி, பொது மக்களுக்கான சந்தையை ஏற்படுத்தினார்.

 

"10 கட்டளைகள்"

மெரில் தனது நிறுவன செயல்பாடுகளை அனைவரும் தெரிந்துகொள்ள, 1949 ஆண்டு அறிக்கையுடன் "10 கட்டளைகள்" என்பதை வெளியிட்டார். இதன் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்று முதலீட்டாளர்கள் வெளியேறுவதைத் தடுத்தார். அதின் முதல் கட்டளையே ' வாடிக்கையாளர் விருப்பமே முதன்மையானது'.

அனைத்துக் கட்டளைகளும் தற்போது வெளிப்படையானவை. 7 மற்றும் 8வது கட்டளை முறையே, வட்டிவிகிதத்தை வெளிப்படுத்துதல் மற்றும் முன்கூடியே நிறுவனத்தில் பாதுகாப்பு விற்பனையைப் பற்றி எச்சரிப்பது.

இதன் மூலம் சிறிய முதலீட்டாளர்களின் கணக்குகளை எப்படிக் கையாள்வது என்பதில் புரட்சி செய்தனர். இவர் இறப்பதற்கு முன் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுச்சியையும் , தனது கொள்கையின் மூலம் நிறுவனம் அடைந்த பலன்களையும் கண்டார். ஆனால் ' வால்ஸ்ட்ரீட்-ஐ வீதிக்குக் கொண்டு வருவோம்' என்பதை நிறைவேற்ற முடியவில்லை.

 

பரிணாம வளர்ச்சி

பரிணாம வளர்ச்சி

வங்கிகளின் பரிணாம வளர்ச்சி என்பது இன்னும் முடிவடையவில்லை. நமது பயணம் , வங்கியின் அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில் துவங்கி, அனைவருக்கும் ஜனநாயக வங்கிசேவையில் முடிந்துள்ளது. 70 ஆண்டுகளுக்கு முன்பு, சாதாரண மக்களுடன் வங்கிகள் தொழில் செய்யாது என்ற எண்ணம் நிலவி வந்தது. கடந்த 100 ஆண்டுகளில், பல பழமைவாத கொள்கைகளும், வலுவான கட்டுப்பாடுகளும் முழுமையாக நேரத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுள்ளன.

 5 பேர்

5 பேர்

இன்றைய வங்கித்துறை பரிணாம வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது மட்டும் அல்லாமல் இன்றளவும் இந்த நிறுவனங்கள் ஒவ்வொரு முறையும் பல புதுமைகளைக் கொண்டு வருகிறது.

மேலும் இந்த நிறுவனங்கள் தான் இன்றைய வங்கித்துறையை ஆட்சி செய்கிறது என்றால் மறுக்க முடியாதது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The 5 most influential bankers of all time

The 5 most influential bankers of all time
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X