நீரவ் மோடி இந்தியாவுக்குத் திரும்பி வர கால தாமதமாவதற்கு இது தான் காரணமாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்துள்ள நீரவ் மோடியை தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்குச் சிபிஐ நோட்டிஸ் அனுப்பியதற்குப் பதில் அளித்த அவரது வக்கீல் பாதுகாப்பு காரணங்களுக்காகத் தான் அவர் இந்தியா திரும்ப வருவது காலதாமதமாகிறது என்று தெரிவித்துள்ளார்.

சென்ற வியாழக்கிழமை சிபிஐ நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மேஹூல் சோக்ஸி இருவருக்கும் விரைவில் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

சிபிஐ அளித்த சம்மனுக்குத் தனது கட்சிக்காரர் நீரவ் மோடி பதில் அளித்துள்ளதாகவும் அதில் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியா திரும்ப வர தாமதமாகுவதாகவும் அது மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் உள்ள வணிகங்களில் அவர் பிஸியாக உள்ளதாகவும் அவரது வக்கீல் விஜய் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மொசடி இல்லை

மொசடி இல்லை

பத்திரிக்கையாளர்களிடம் இது குறித்துத் தெரிவித்த அவரது வக்கீல் விஜய் அகர்வால் ‘இதனைத் தான் மோசடி என்று ஒப்புக்கொள்ள மாட்டேன்' என்றும் வரி தெரிவித்துள்ளார்.

அமலாக்கத் துறை

அமலாக்கத் துறை

நீரவ் மோடியின் சொத்துக்களைச் சோதனை செய்து வரும் அமலாக்கத் துறை 21 இடங்களில் இருந்து 523.72 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைப் பரிமுதல் செய்துள்ளது.

வெளியுறவுத் துறை

வெளியுறவுத் துறை

வெளியுறவுத் துறையில் இருந்து நமக்குக் கிடைத்துள்ள தகவலின் படி நீரவ் மோடி மற்றும் மேஹூல் சோக்ஸி இருவரும் சிபிஐ கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுத்தால் அவர்களது பாஸ்பார்ட்டினை தடை செய்துள்ளது.

தலை மறைவு

தலை மறைவு

2011-ம் ஆண்டு முதல் இது போன்று தொடர் மோசடியில் நிரவ் மொடி மற்றும் மேஹூல் சோக்ஸி இருவரும் ஈடுபட்டுள்ளதாகவும் 12,400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துள்ளதாகவும், எங்கு இருக்கிறார்கள் என்றும் தெரிவில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Due to security concerns Nirav Modi will take time to return to India: Lawyer

Due to security concerns Nirav Modi will take time to return to India: Lawyer
Story first published: Sunday, March 11, 2018, 13:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X