5 மாதத்தில் 1.3 கோடி ரூபாய் மோசடி.. அமேசானை அதிர்ச்சியில் ஆழ்த்திய இளைஞன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்நாடகாவில் கொரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 10-ம் வகுப்பைக் கூட முடிக்காத ஒரு ஊழியர் வேலைக்குச் சேர்ந்த 5 மாதத்தில் 1.3 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.

உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை டெலிவரி செய்ய அளித்த டேப் கணினி மூலமாக இந்த மோசடி நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

துருவா

துருவா

துருவா என்று அழைக்கப்படும் தர்ஷனுக்கு 25, இவரும் அவரது நண்பர்களும் சேர்ந்துகொண்டு விலை உயர்ந்த பொருட்களை டெலிவரி செய்வது பின்னர்ப் பணம் ஏதும் பெறாமல் பொருட்களை டெலிவரி செய்வது என 1.3 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

பரிமுதல்

பரிமுதல்

இதுகுறித்து அமேசான் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 24 லட்சம் மதிப்பிலான பணம், 21 ஸ்மார்ட்போன், ஒரு லேப்டாப், ஐபாடு மற்றும் ஆப்பிள் வாட்ச்  உள்ளிட்ட பொருட்களுடன் அவர்கள் பயன்படுத்தி வந்த 4 வாகனங்களும் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மோசடி நடைபெற்ற காலம்

மோசடி நடைபெற்ற காலம்

இந்த மோசடி 2017 செப்டம்பர் முதல் 2018 பிப்ரவரி மாதம் வரை நடைபெற்று இருந்ததாகவும் சிக்மங்குளூரில் இருந்து 4,604 ஆர்டர்கள் அமேசான் தளத்தில் பெறப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் தர்ஷனால் டெலிவரி செய்யப்பட்டதும் ஏக்தந்தா கொரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், அமேசான் நிறுவனம் அவர்களுடன் பொருட்களை டெலிவரி செய்யவும் பணத்தை பெற்று தரவும் ஒப்பந்தம் போட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

எப்படி மோசடி நடைபெற்றது என்ற விவரங்கள் தெரியவில்லை என்றாலும் தர்ஷன் பண பரிவர்த்தனை அமைப்பில் உள்ள ஒரு ஓட்டையினைப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர் என்று மட்டும் காவல் துறை தரப்பு தெரிவித்துள்ளது.

 

மோசடி எப்படித் தெரியவந்தது?

மோசடி எப்படித் தெரியவந்தது?

அமேசான் நிறுவனத்திற்கு இந்த மோசடியானது காலாண்டு அறிக்கையினை ஆடிட் செய்யும் போது தான் பிப்ரவரி மாதம் தான் தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் அளித்த புகாரின் பேரில் தர்ஷன் உட்பட 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

புகார்

புகார்

அமேசான் நிறுவனத்தில் 1.3 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாக மார்ச் 8-ம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தர்ஷன் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிட்டுள்ளனர். பிஓஎஸ் இயந்திரமும் காவல் நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் கார்டு பேமெண்ட் மூலமாகப் பணம் பெறுவது ஆனால் பணத்தினை அமேசான் நிறுவனத்திற்குச் செல்லாமல் தடுத்து தங்களது வங்கி கணக்குகளுக்குத் திருப்புவது என்று மோசடி செய்துள்ளனர்.

டேப் கணினி

டேப் கணினி

தர்ஷன் தன் டேப் கணினியை பயன்படுத்தி இந்த முறைகேட்டினை செய்துள்ளார் என்றும் எனவே அதனைத் தடயவியல் ஆய்வு செய்ய அனுப்பியுள்ளதாகவும் சில வாடிக்கையாளர்கள் போலியான முகவரிகளில் ஆர்டர்களை அளித்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது என்றும் காவல் துறையினைக் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

கைது செய்யப்பட்டவர்கள்

தர்ஷனுடன் சேர்த்து புனித் 19, சச்சின் ஷெட்டி 18, அனில் ஷெட்டி 24 என அனைவரும் சிக்மங்களூருவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

உங்கள் குழ..." data-gal-src="http:///img/600x100/2018/03/moneylessonsforchildren-1520834327.jpg">
குழந்தைகளுக்கு ஏற்ற 7 முதலீட்டு திட்டங்கள்..!

குழந்தைகளுக்கு ஏற்ற 7 முதலீட்டு திட்டங்கள்..!

<strong> உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற 7 முதலீட்டு திட்டங்கள்..! </strong> உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற 7 முதலீட்டு திட்டங்கள்..!

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

<strong>புதிய சட்டத்தால் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சிக்கல்.. வீடு வாங்கியவர்களின் கையில் ஆதிக்கம்..!</strong>புதிய சட்டத்தால் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சிக்கல்.. வீடு வாங்கியவர்களின் கையில் ஆதிக்கம்..!

மத்திய அரசு

மத்திய அரசு

<strong>மத்திய அரசு இந்த கடனை எப்போது தீர்க்கும்..? விவிஐபிகளுக்கு சிறப்பு சேவை..!</strong>மத்திய அரசு இந்த கடனை எப்போது தீர்க்கும்..? விவிஐபிகளுக்கு சிறப்பு சேவை..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 dropout dupes Amazon of Rs 1.3 crore in Karnataka

10 dropout dupes Amazon of Rs 1.3 crore in Karnataka
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X