ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு, இனி யாராலும் மோசடி செய்ய முடியாது!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீரவ் மோடி மற்றும் மேஹூல் சோக்ஸி இருவரும் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கிட்டத்தட்ட 13,000 கோடி வரையில் மோசடி செய்துள்ள நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியானது அவர்கள் பயன்படுத்திய LoUs முறையினைப் பயன்படுத்த வங்கிகளுக்குத் தடை விதித்துச் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பில் LoUs மற்றும் LoCs என்ற இரண்டு சேவையினையும் பயன்படுத்தி வங்கிகள் இனி கடன் வழங்கக் கூடாது என்றும் இந்த நடைமுறையானது உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

LoUs மற்றும் LoCs என்றால் என்ன?

LoUs மற்றும் LoCs என்றால் என்ன?

வணிகர்கள் இறக்குமதி செய்யும் போது ஆர்பிஐ உதவியுடன் வெளிநாட்டில் உள்ள வங்கி கிளைகளுக்கு உத்தரவாதம் அளித்துக் கடன் மற்றும் உத்தரவாதம் அளிக்கும் முறையே LoUs மற்றும் LoCs ஆகும்.

பஞ்சாப் நேஷ்னல் வங்கி

பஞ்சாப் நேஷ்னல் வங்கி

பஞ்சாப் நேஷ்னல் வங்கி LoUs முறையினைப் பயன்படுத்தி நீரவ் மோடிக்கு 12,967.86 கோடி ரூபாய் கடன் அளித்து இறக்குமதி செய்ய உதவியுள்ளது.

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை இரண்டும் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடைபெற்ற மோசடி குறித்து விசாரித்து வரும் நிலையில் பல மோசடி வழக்குகள் குறித்த விவரங்கள் தினமும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. ஆர்பிஐ அனைத்து வங்கிகளிலும் மோசடி குறித்து ஆடிட்டிங் செய்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளதால் பிற வங்கிகளிலும் மோசடி நடைபெற்றுள்ளதோ என்று அச்சம் நிலவி வருகிறது.

ஆர்பிஐ

ஆர்பிஐ

அதே நேரம் ஆர்பிஐ LoUs மற்றும் LoCs எனப்படும் இந்தக் கடன் மற்றும் வங்கி உத்தரவாத முறைகளானது வணிகர்களுக்குக் கடுமையான விதிகளுடன் விரைவில் கொண்டு வர வாய்ப்புகள் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nirav Modi scam effect: RBI stops use of Letters of Undertaking for trade credit for imports

Nirav Modi scam effect: RBI stops use of Letters of Undertaking for trade credit for imports
Story first published: Tuesday, March 13, 2018, 19:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X