2018-19 நிதியாண்டுக்கான தமிழ்நாட்டு மாநில பட்ஜெட் அறிக்கையை 3.55 லட்சம் கோடி ரூபாய் கடன் என்னும் மிகப்பெரிய பாதிப்புடன் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்தார் துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்.

ஜிஎஸ்டி
மத்திய அரசு நாட்டின் மறைமுக வரி அமைப்பை முழுமையாக மாற்றி ஜிஎஸ்டியை அமலாக்கம் செய்த காரணத்தால் தமிழகப் பொருளாதாரத்தில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ஓபிஎஸ் கூறினார்.
மாநில பொருளாதாரத்தில் நிலவும் நேர்மறை காரணிகளால் வரி வருவாய் இனி வரும் காலத்தில் அதிகரிக்கும் எனக் கணிப்பதாகவும் கூறினார்.

நிதிப் பற்றாக்குறை உயர்வு
கடந்த நிதியாண்டில் ரூ.14,977 கோடியாக இருந்த நிதிப் பற்றாக்குறை அளவு 2018-19ஆம் நிதியாண்டில் ரூ. 23,176 ஆக உயர்ந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி
இந்திய பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கீட்டை கொண்டுள்ள தமிழ்நாடு 2018-19ஆம் நிதியாண்டில் 9 சதவீதம் வரையிலான பொருளாதார வளர்ச்சியை அடையும் எனப் பட்ஜெட்டில் அறிக்கை தாக்கலில் நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

மத்திய அரசு
2018-19ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 8 சதவீதம் வரையில் உயரும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
ஆனால் உலக வங்கியோ 7.3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் எனத் தெரிவித்துள்ளது. இது தமிழ்நாட்டு வளர்ச்சி கணிப்புகளை விடவும் குறைவான அளவாகும்.

நிதி நிலைமை.. !
தமிழ்நாட்டின் இன்றைய நிதி நிலைமை.. ! #பட்ஜெட்2018

செலவு 2.04 லட்சம் கோடியாக இருக்கும்
2018-2019 நிதி ஆண்டிற்கான செலவு 2.04 லட்சம் கோடியாக இருக்கும்: தமிழ் நாடு பட்ஜெட்