இதை தாண்டி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால்.. உங்க பணம் கோவிந்தா கோவிந்தா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம் தேசத்திற்குப் புதியது, இன்னும் சரிவரப் புரியாதது, வரைமுறைப்படுத்தப்படாதது என்பதைத் தவிரப் பிட்காயின் உள்ளிட்ட டிஜிட்டல் கரன்சிகளில் முதலீடு செய்யக்கூடாது என்பதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன.

அவற்றைப் பார்ப்பதற்கு முன் 2018 பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதை நினைவு கூறுவோம்: "க்ரிப்டோகரன்சி அல்லது டிஜிட்டல் கரன்சி எனப்படும் மெய்நிகர் கரன்சியானது சட்டப்பூர்வமானது அல்ல மற்றும் இந்தியாவில் இவை ஊக்குவிக்கப்படாது." இதுவும் பிட்காயின் மீதான உங்களது காதலை தீர்க்காது எனில், இந்த 7 விஷயத்தைப் பாருங்கள். கண்டிப்பாகப் பிட்காயினில் முதலீடு செய்ய உங்களுக்கு விருப்பம் இருக்காது.

 1. வங்கிகள் தங்களது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் க்ரிப்டோ கரன்சியை அனுமதிப்பதில்லை.

1. வங்கிகள் தங்களது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் க்ரிப்டோ கரன்சியை அனுமதிப்பதில்லை.

சிட்டி க்ரூப் (இந்தியா) இதில் உள்ள ஆபத்தை உணர்ந்து க்ரிப்டோ கரன்சியைத் தடை செய்துள்ளது. ஒரு முன்னணி வணிகப் பத்திரிகையின் அறிக்கையின்படி பேங்க் ஆஃப் அமெரிக்கா, கேப்பிடல் ஒன் பேங்க், டிஸ்கவர் பேங்க், மற்றும் இங்கிலாந்தின் லாயிட் பேங்க் உள்ளிட்டவை இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

இந்தியாவில் HDFC வங்கி தங்களது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி க்ரிப்டோ கரன்சிகளை வாங்க தடை விதித்துள்ளது. SBI வங்கியோ மாஸ்டர் மற்றும் விசா கார்டு தளங்களில் இதைத் தடை செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனவே இதே நிலையை ஏனைய பொது, தனியார் வங்கிகள் எடுக்க வாய்ப்புகள் உள்ளது.

 

 2. க்ரிப்டோ கரன்சி பரிமாற்றும் மையங்கள் க்ரிப்டோ கரன்சி பரிமாற்றத்தை நிறுத்தி உள்ளன.

2. க்ரிப்டோ கரன்சி பரிமாற்றும் மையங்கள் க்ரிப்டோ கரன்சி பரிமாற்றத்தை நிறுத்தி உள்ளன.

இந்தியாவில் க்ரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வந்த BTCXIndia மற்றும் ETHEXIndia நிறுவனங்கள் அரசின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் தங்களது செயல்பாடுகளை இந்தியாவில் நிறுத்துவதாகவும், வாடிக்கையாளர்கள் மார்ச் 4 ஆம் தேதிக்கு முன்னதாகத் தங்களது பணத்தை மாற்றிக்கொள்ளுமாறும் வாடிக்கையாளர்களுக்கு மெயில் அனுப்பி உள்ளன.

3. டெத் கிராஸ்
 

3. டெத் கிராஸ்

புளூம்பெர்கின் கணிப்பின்படி பிட்காயினின் வளர்ச்சி சராசரி என்பது கடந்த ஒன்பது மாதங்களில் 50 லிருந்து 200 நாட்களாக அதிகரித்துள்ளது. இது மேலும் தீவிர சரிவை சந்திக்கும் வாய்ப்புள்ளது. நிபுணர்கள் இதை "டெத் கிராஸ்" என்று அழைக்கிறார்கள்.

பால் டே என்னும் வணிகவியல் நிபுணர் (தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் 'எதிர்காலம் மற்றும் வாய்ப்புகள்' துறை தலைவர், Market Securities Dubai) இந்த நிலை மாறுமானால் பிட்காயினின் சரிவு 76% என்ற அளவிலிருந்து குறைய வாய்ப்புள்ளது என்கிறார். பிட்காயினைக் கண்மூடித்தனமாக ஆதரிப்போரோ 2020 வாக்கில் பிட்காயினின் மதிப்பு $90000 அளவு உயரும் என்கிறார்கள்.

 

4. சமுக வலைத்தளத்தின் தடை

4. சமுக வலைத்தளத்தின் தடை

கூகுள், முகநூல் மற்றும் ட்விட்டர் வலைத்தளங்கள் க்ரிப்டோகரன்சி விளம்பரங்களைத் தடை செய்துள்ளன.

சமூக வலைத்தளங்களின் தடை காரணமாகத் தேவை குறைந்து க்ரிப்டோ சரிவை சந்தித்துள்ளது.

 

5. உங்களின் லாபத்தைச் சந்தை சக்திகள் முடிவு செய்கின்றன

5. உங்களின் லாபத்தைச் சந்தை சக்திகள் முடிவு செய்கின்றன

ஒரே வருடத்தில் பிட்காயினின் மதிப்பு $1000 லிருந்து $20000 ஆக உயர்ந்ததைப்போல எல்லாக் கிரிப்டோக்களும் உயரும் என்று சொல்ல முடியாது. தற்போதைய சரிவு நிலவரத்தில் உங்களின் முதலீடு லாபத்தைத் தருவது கேள்விக்குறியே.

6. KYC

6. KYC

கிரிப்டோ பரிமாற்றங்களுக்கு இனி ஆதார் உள்ளிட்ட ஆவணங்களைப் பதிவேற்றம் செய்வது அவசியம்.

7. வரிப் பிரச்சினைகள்

7. வரிப் பிரச்சினைகள்

இத்தகைய டிஜிட்டல் கரன்சிகள் சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கும், தீவிரவாத இயக்கங்களுக்கும், பதுக்கலுக்கும் வழி வகுக்கின்றன என்று பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்ததன் காரணமாக க்ரிப்டோ வாலெட் கம்பெனிகளிடம் இவற்றில் முதலீடு செய்தவர்களின் விவரங்களை இன்கம் டாக்ஸ் துறை சேகரிக்கத் துவங்கி உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7 More Reasons To Not Invest In Bitcoins And Other Cryptos

7 More Reasons To Not Invest In Bitcoins And Other Cryptos
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X