வர்த்தக போர் என்றால் என்ன? உலக வர்த்தக போர் அச்சுறுத்தல்கள் ஒரு பார்வை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது முறையே 25% மற்றும் 10% வரி விதிக்கும் திட்டத்தை அறிவித்ததன் மூலம் உலக வர்த்தக யுத்தத்தின் மீதான பயத்தையும் பதற்றத்தையும் தொடங்கி வைத்துள்ளார். இந்த வரிவிதிப்பு என்பது உள்நாட்டுத் தொழில்துறையைப் பாதுகாக்கும் நடைமுறை என்றாலும் கூட முதலீட்டாளர்களுக்கு மட்டுமில்லாமல் அமெரிக்கத் தொழில்துறை மற்றும் வாடிக்கையாளர்களுக்குக் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

வர்த்தக யுத்தம்

வர்த்தக யுத்தம்

இறக்குமதிக்குத் தடைவிதிப்பதன் மூலம் மற்ற நாடுகளின் வர்த்தகத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளைச் சில நாடுகள் வர்த்தக யுத்தம் என்ற பெயரில் செய்து வருகின்றன. அறிவுசார் சொத்துகளைத் திருடியதற்காகச் சீனா மற்றும் பிற பொருளாதாரங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் டிரம்பின் செயல்பாடுகள், வர்த்தகப் போரின் மீதான பயத்தை மேலும் கூட்டியுள்ளன.

 டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகள்

டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகள்

சென்ற வியாழக்கிழமை, சீனா பொருட்களின் மீது 60பில்லியன் டாலர் வரிவிதிக்கும் ஆணையில் கையெழுத்திட்டார் டிரம்ப். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அப்பொருட்களின் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அமெரிக்க நிர்வாகத் துறை அப்பட்டியலை வெளியிட்டு 30 நாட்களுக்குப் பின்பு வரிவிதிப்பு அமல்படுத்தப்படும்.

அதற்குப் பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது 3மில்லியன் டாலர் அளவில் வரிவிதித்துள ளது. சீன தூதர் கூறுகையில், எங்களிடம் வாலாட்ட நினைத்தால் நாங்களும் தக்க பதிலடி கொடுப்போம். ஒரு கை பார்த்துவிடுவோம் என்கிறார்.

தற்போது, உலோகத்திற்கான வரியின் மீதான விலக்கு ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவிற்கு விரிவாக்கப்பட்டுள்ளது. எனவே சீனாவும் இதுபோன்று உலோகங்களின் மீதான சலுகையை எதிர்பார்க்கிறது.

 

பங்குசந்தையில் அதிக விற்பனை

பங்குசந்தையில் அதிக விற்பனை

வர்த்தகப் போரின் பயத்தில் உலகளவில் பங்குசந்தைகள் பெரும்விற்பனையுடன் முடித்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை, ஆசிய பங்குசந்தைகள் பெரும் விற்பனையுடன் டோவ்ஜோன்ஸ் தொழில் சராசரி 3% வீழ ச்சியடைந்தது. மற்ற சந்தைகளைப் போல ஐப்பானின் நிக்கி மோசமான அடி வாங்கியுள்ளது. இந்த வர்த்தகப் போரின் பாதிப்புகளில் இந்திய பங்குசந்தையும் தப்பவில்லை. நிப்டி வீழ்ச்சியடைந்து 10000 என்ற அளவைத் தொட்டு , 23மார்ச் 2018 முடிவில் 9998 என இருந்தது. சென்செக்ஸ் 400 புள்ளிகள் அளவிற்குச் சரிந்தது.

 இந்திய வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தின் மீதான தாக்கம்

இந்திய வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தின் மீதான தாக்கம்

இந்திய பெரிய அளவில் அந்த இரு உலோகங்களையும் ஏற்றுமதி செய்யாவிட்டாலும், வர்த்த போர் மூண்டால் இந்தியாவின் வர்த்தகத்திலும் பாதிப்பு ஏற்படுத்தும். 2018-19 ஆண்டுக்கான ஏற றுமதியில் இரண்டு இலக்க வளர்ச்சி என்னும் இந்தியாவின் இலக்கை அடைவது கடினமே.

ரகுராம் ராஜனின் பார்வையில் வர்த்தகப் போர்

ரகுராம் ராஜனின் பார்வையில் வர்த்தகப் போர்

இன்னும் நிலைமை அந்த அளவிற்கு மோசமடையவில்லை என்பதால் , வர்த்தகப் போர் என்ற வார்த்தையைப் பயன்படுத்த விரும்பவில்லை என்கிறார் ரகுராம் ராஜன். மேலும் அதற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லையென்றாலும், நடப்பு பொருளாதார மீட்புப்பணிகளைத் தாக்கினால் உலக அளவில் இலாபகரமாக இருக்கும். அமெரிக்கா நல்ல வலுவான நிலையில் இருக்கும் போதே இவற்றைச் செய்தால் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என எண்ணுகிறார் டிரம்ப். ஆனால்இதை நாம் பின்பற்ற கூடாது என்று உலக மின்னணு மாநாட்டில் கூறினார் ரகுராம் ராஜன்.

மேலும் அவர் கூறுகையில்,சில நாடுகள் இப்படி வர்த்தக வரிவிதிப்பை அதிகப்படுத்துவது , நடப்பு பொருளாதார மீட்பு நடவடிக்கைகளைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What Is A Trade War? All About Current Global Trade War Threats

What Is A Trade War? All About Current Global Trade War Threats
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X