ரூ.2,500 கோடி வரி மோசடி.. காக்னிசென்ட் ஊழியர்களின் சம்பள உயர்வு என்ன ஆகும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: காக்னிசெண்ட் நிறுவனம் செவ்வாய்க்கிழமை டிவிடென்ட் விநியோக வரியில் மோசடி செய்துள்ளதாக்க சென்னை மற்றும் மும்பை அலுவலகங்களின் வங்கி கணக்குகளை வருமான வரித் துறை முடக்கி உள்ளது. வரிச் சர்ச்சை காரணமாக ஊழியர்களின் சம்பளம் மற்றும் பதவி உயர்வுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளனர்.

இதனை உறுதி செய்த காக்னிசென்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இதற்கு மேலும் எந்த நடவடிக்கையும் காக்னிசென்ட் நிறுவனம் மீது எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் வருமான வரி துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.

நிதி

நிதி

இந்நிலையில் காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான கரேன் மெக்லாஃப்லின் வருவாய் நல்ல நிலையில் தான் உள்ளதாகவும், 5 பில்லியன் டாலர் அளவிற்குப் பணமாகவும், குறைந்த கால முதலீடாக இருப்பதாகவும், இந்த வரித் தொகை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சம்பளம் மற்றும் பதவி உயர்வு

சம்பளம் மற்றும் பதவி உயர்வு

காக்னிசென்ட் நிறுவனம் சட்டப்படி பின்பற்ற வேண்டிய எல்லா நடவடிக்கைகளிலும் நெறிமுறைகள் கடைப்பிடித்து மிக உயர்ந்த தரத்துடன் வர்த்தகம் செய்து வருவதாகம் தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் ஊழியர்களுக்கு இந்த வரி சர்ச்சையால் சம்பளம் மற்றும் பதவி உயர்வுக்கு எந்தப் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளனர்.

மோசடி

மோசடி

2016-2017 நிதி ஆண்டில் காக்னிசென்ட் நிறுவனம் 2,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரியினைச் செலுத்தவில்லை என்றும் செய்திகள் வெளியானதை அடுத்து வருமான வரித் துறை இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது என்று செய்திகள் வெளியானது.

ஆனால் காக்னிசென்ட் நிறுவனம் இந்தப் பரிவர்த்தனைக்குச் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் கட்டியுள்ளதாகத் தெரிவித்து இருந்தது.

 

வழக்கு

வழக்கு

வருமான வரித் துறை காக்னிசென்ட் நிறுவனத்தின் சில வங்கி கணக்கினை முடக்கிய உடன், காக்னிசென்ட் தரப்பில் இருந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அதில் காக்னிசென்ட் நிறுவனம் மீது மீண்டு நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் வருமான வரி துறைக்கு உத்தரவிட்டு இருந்தது.

வணிகச் செயல்பாடுகளுக்கு எந்தத் தாக்கமும் இல்லை

வணிகச் செயல்பாடுகளுக்கு எந்தத் தாக்கமும் இல்லை

வருமான வரி துறையினர் எடுத்துள்ள நடவடிக்கையினால் காக்னிசென்ட் நிறுவனத்தின் வணிகச் செயல்பாடுகள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வரும் சேவைகளுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது என்றும் தெரிவித்து இருந்தனர்.

தகவல் அளிக்க மறுப்பு

தகவல் அளிக்க மறுப்பு

வருமான வரி துறையினரை இது குறித்துத் தொடர்புகொண்டு முழு விவரங்களைப் பெற முடியாத நிலையில் காக்னிசென்ட் நிறுவனமும் பல முக்கியக் கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டது.

ஊழியர்கள்

ஊழியர்கள்

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் காக்னிசென்ட் நிறுவனத்தில் அதிகபட்சமாக 2,60,000 இந்திய ஊழியர்கள் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் படிக்கும் போதுசம்பாதிக்கலாம்

மாணவர்கள் படிக்கும் போதுசம்பாதிக்கலாம்

மாணவர்கள் படிக்கும் போது ஸ்மார்ட்டாக இப்படியும் சம்பாதிக்கலாம்..!மாணவர்கள் படிக்கும் போது ஸ்மார்ட்டாக இப்படியும் சம்பாதிக்கலாம்..!

பான் - ஆதார் இணைப்பு

பான் - ஆதார் இணைப்பு

பான் - ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு..!பான் - ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு..!

 

 

ஏர் இந்தியா அதிரடி..!

ஏர் இந்தியா அதிரடி..!

ஏர் இந்தியா அதிரடி.. ஜன்னல் ஓரம் & அஸ்லி இருக்கை முன்பதிவு செய்ய ஏப்ரல் 1 முதல் கூடுதல் கட்டணம்..!ஏர் இந்தியா அதிரடி.. ஜன்னல் ஓரம் & அஸ்லி இருக்கை முன்பதிவு செய்ய ஏப்ரல் 1 முதல் கூடுதல் கட்டணம்..!

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs 2,500 crore Tax dispute won't impact pay hikes and promotions: Cognizant CFO to employees

Rs 2,500 crore Tax dispute won't impact pay hikes and promotions: Cognizant CFO to employees
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X