இந்தியா தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன்.. ரூ.227 கோடி சம்பாதித்த அமெரிக்கப் பெண்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவில் ஹிப்பிக் கலாச்சாரம் மிகவும் பிரபலம், இதில் அதிகம் ஈர்க்கப்பட்ட அமெரிக்கப் பெண் ப்ரூக் எடி, 2002ஆம் ஆண்டு இந்தியாவில் துவங்கிய சுவதேயா என்னும் பக்தி இயக்கம் பெரிய அளவில் பிரபலம் அடைந்தது. இதில் ஈர்க்கப்பட்ட ப்ரூக் இந்தியாவிற்குக் கிளம்பினார்.

வட இந்தியா முழுவதும் சுற்றிய ப்ரூக், குறைந்த காலகட்டத்திலேயே இந்தியாவில் தயாரிக்கப்படும் டீ மீது ஈர்ப்பு அதிகமானது. இந்த ஈர்ப்பினால் ஒரு டீ-யின் சுவைக்கும் மற்றொரு டீக்குமான வித்தியாசத்தை எளிதாகக் கண்டுபிடிக்கத் துவங்கினார்.

அமெரிக்கா திரும்பிய ப்ரூக்

அமெரிக்கா திரும்பிய ப்ரூக்

இந்தியா முழுவதும் சுற்றிய ப்ரூக் எடி அமெரிக்காவில் இருக்கும் கொலராடோ மாகாணத்தில் இருக்கும் போல்டர் என்னும் தனது சொந்த ஊருக்கு வந்தார்.

அமெரிக்க வந்த பின்பும் டீ மீதான அவரது காதல் குறையவில்லை.

 

புதிதாக ஒரு டீ

புதிதாக ஒரு டீ

அமெரிக்காவில் காபி ஷாப்கள் தான் அதிகம், டீ கடைகள் மிகவும் குறைவு, அதுவும் ப்ரூக் வசித்து வந்த பகுதியில் ஒரு கடை கூட இல்லை. இதனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் டீ சுவையைப் போலவே ப்ரூக் டீயை தயாரித்தார்.

மேஷன் ஜார்

மேஷன் ஜார்

2007ஆம் ஆண்டுக் காலத்தில் மேஷன் ஜார்களில் தான் தயாரித்த டீயை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்கினார். இதன் பின்பு இதையே சிறு தொழிலாகத் துவங்கினார், நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இதனை ஒரு வர்த்தகமாக மாற்ற வேண்டும் எனத் திட்டமிட்டார் ப்ரூக்.

 பக்தி

பக்தி

இதனை வர்த்தகச் சந்தைக்குக் கொண்டு செல்ல ஒரு சிறப்பான பெயர் வேண்டும் எனத் திட்டமிட்ட ப்ரூக், பக்தி எனப் பெயர் வைக்கலாம் என முடிவு செய்தார். இந்திய சுவை போலவே இந்தியாவின் தெய்வீகத்தையும் உணர்த்தும் வகையில் இந்தப் பெயர் அமையும் எனத் திட்டமிட்டார் ப்ரூக்.

இஞ்சி டீ

இஞ்சி டீ

போல்டர் பகுதியில் இருக்கும் கேப் அதாவது காப்பிக் கடைகளில் தனது தயாரிப்பை விற்பனை செய்யலாம் என முடிவு செய்த ப்ரூக், இந்தியாவில் மிகவும் பிரபலமான இஞ்சி டீ தயாரித்தார்.

இதனைப் பக்தி கம்பெனி பெயரிலேயே விற்பனையும் செய்தார்.

 

கூட்டணி

கூட்டணி

போல்டர் பகுதியில் முழுவதும் விற்பனை செய்ய இப்பகுதியில் பிரபலமான பின்னாகல் புட்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்தார் ப்ரூக். இதனால் குறுகிய காலத்திலேயே அதிகளவிலான வாடிக்கையாளர் மற்றும் வர்த்தகத்தைப் பெற்றார்.

 2011இல் அதிரடி

2011இல் அதிரடி

இந்நிலையில் வர்த்தகத்தைத் துவங்கிய சில வருடங்களில் ப்ரூக் தலைமையிலான பக்தி நிறுவனத்திற்குச் சுமார் 10 மில்லியன் டாலர் அளவிலான முதலீடு கிடைத்தது.

அடுத்தகட்ட வளர்ச்சி

அடுத்தகட்ட வளர்ச்சி

இதன் மூலம் ready-to-drink வகையில் டீகளைத் தயாரிக்க முடிவு செய்தார். இதன் வாயிலாக அமெரிக்காவில் அதிகப் பகுதிகளில் தனது தயாரிப்பை விற்பனை செய்ய முடியும் என நம்பினார்.

தற்போது பக்தி நிறுவனத்தில் சுமார் 26 பேர் பணியாற்றி வருகின்றனர். இஞ்சி டீ தயாரிப்பதற்காகவே பெரு நாட்டில் இருந்து வருடத்திற்குச் சுமார் 3 லட்சம் பவுண்ட் இஞ்சி இறக்குமதி செய்கிறது இந்நிறுவனம்.

 

 கம்பீரமான வளர்ச்சி

கம்பீரமான வளர்ச்சி

பக்தி ச்சாய் நிறுவனம் இதுவரை 35 மில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது, இந்நிறுவனத்தின் தாக்கம் வாயிலாக அமெரிக்காவில் டீ வர்த்தகச் சந்தையில் வளர்ச்சி மிகப்பெரியதாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகச் சந்தையில் டீ வர்த்தகச் சந்தையின் மொத்த மதிப்பு 3.7 டிரில்லியன் டாலர்.

வருவாய்

வருவாய்

2018ஆம் ஆண்டில் பக்தி ச்சாய் நிறுவனத்தின் வருவாய் 7 மில்லியன் டாலர் வரையில் உயரும் எனத் தான் நம்புவதாகவும் ப்ரூக் தெரிவித்துள்ளார்.

விரிவாக்கம்

விரிவாக்கம்

பக்தி ச்சாய் நிறுவனத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வரும் ப்ரூக் எடி, வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதில் சில பிரச்சனைகள் இருந்தாலும் அதைச் சமாளித்து விடலாம். ஆனால் பானங்கள் (beverage) பிரிவில் வாடிக்கையாளர்களைப் பிடிப்பது மிகவும் கடினம். காரணம் போட்டி மிகவும் அதிகம் என ப்ரூக் தெரிவித்துள்ளார்.

நன்கொடை

நன்கொடை

இதைத் தொடர்ந்து இந்நிறுவனம் தற்போது பல நன்கொடைகளைச் செய்து வருகிறது. 2015 முதல் இந்நிறுவனம் சுமார் 5,00,000 டாலர் நன்கொடையாகக் கொடுத்துள்ளது.

தொடர் இந்திய பயணம்

தொடர் இந்திய பயணம்

இன்றும் ப்ரூக் எடி தொடர்ந்து இந்தியா வந்து செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

யூவ்லி டீ ஹவ்ஸ்

யூவ்லி டீ ஹவ்ஸ்

மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாநிலத்தில் பிரபலமாக இருக்கும் யூவ்லி டீ ஹவ்ஸ் நிறுவனத்தின் தலைவர் நவ்நாத் யூவ்லி டீ விற்பனையின் மூலம் மாதம் 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இவரது கடை இந்தியா முழுவதும் பிரபலமானது.

 இண்டர்நேஷனல் பிராண்டு

இண்டர்நேஷனல் பிராண்டு

இந்த வெற்றி குறித்து நவ்நாத் யூவ்லி கூறுகையில் எங்களது பிராண்டு இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கு விரைவில் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பக்கோடா

பக்கோடா

இந்தியாவில் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், மூத்த அரசியல் தலைவர் ஒருவர் பக்கோடா விற்பனை செய்வது கூட ஒரு தொழில் தான் எனக் கூறியுள்ளார். இது நாடு முழுவதும் பல எதிர்ப்புகளைச் சந்தித்தது.

தற்போத டீ விற்பனை கூட ஒரு தொழில் தான் எனச் சொல்லாமல் இருந்தால் சரி.

 

அமெர..." data-gal-src="http:///img/600x100/2018/03/chaayos1-1522393972.jpg">
சாயோஸ்

சாயோஸ்

<strong>அமெரிக்க வேலையை உதறி 'டீ' கடையைத் திறந்த ஐஐடி மாணவர்கள்!!</strong>அமெரிக்க வேலையை உதறி 'டீ' கடையைத் திறந்த ஐஐடி மாணவர்கள்!!

மோடி செய்த அதே வேலை தான்..

மோடி செய்த அதே வேலை தான்..

<strong>மோடி செய்த அதே வேலை தான்.. ஆனா மாதம் ரூ.12 லட்சம் வருமானம்..!</strong>மோடி செய்த அதே வேலை தான்.. ஆனா மாதம் ரூ.12 லட்சம் வருமானம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

American Women built Rs 227 Crore Empire By Selling bhakti 'Chai'

American Women built Rs 227 Crore Empire By Selling bhakti 'Chai'
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X