சந்தா கோச்சார், ஷிக்கா சர்மா.. பாவம் நேரம் சரியில்லை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வங்கித்துறையின் அடையாளமாக விளங்கிய பெண் தலைவர்களான ஐசிஐசிஐ வங்கி தலைவர் சந்தா கோச்சா மற்றும் ஆக்சிஸ் வங்கியின் தலைவர் ஷிக்கா சர்மா ஆகியோர் தற்போது அதிகளவிலான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றனர்.

அவை அனைத்திற்கும் ஆரம்பம் எது தெரியுமா..?

ஆரம்பம்

ஆரம்பம்

கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் தலைவர் மெஹூல் சேக்சிக்கு அளிக்கப்பட்ட முறைகேடான கடன்கள், தற்போது வராக்கடனாக மாறிய மட்டும் அல்லாமல் வெளிநாட்டிற்கும் தப்பியுள்ளார். இதுகுறித்துக் கார்பரேட் விவகார அமைச்சகத்தின் மோசடி விசாரணை அலுவலகத்தில் இருக்கும் இருவருக்கும் அனுப்பட்ட கடுமையான சமன் தான் இவர்களின் இன்றைய நிலைக்கு ஆரம்பப் புள்ளி.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

குறிப்பாக இருவரம் ஆரம்பகட்டத்தில் ஐசிஐசிஐ வங்கியின் தான் பணியைத் துவங்கியுள்ளனர். இதில் சந்தா கோச்சார் அதே வங்கிக்குத் தலைவராகவும், ஷிக்கா சர்மா ஆக்சிஸ் வங்கிக்குத் தலைவராகவும் இன்று உயர்ந்துள்ளனர்.

சந்தா கோச்சார்

சந்தா கோச்சார்

சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் தலைவர் வேணுகோபால் இணைந்து உருவாக்கிய நுபவர் நிறுவனத்தின் உரிமை மாற்றம் மற்றும் வீடியோகான் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட 3,250 கோடி ரூபாய் கடனில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது மட்டும் அல்லாமல் சிபிஐ விசாரணைக்கும் சந்தா கோச்சார் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

 நுபவர் ரினிவபல்

நுபவர் ரினிவபல்

2008ஆம் ஆண்டு வீடியோகான் நிறுவனத்தின் நிறுவனர் வேணுகோபால் தூத் புதிதாக ஒரு நிறுவனத்தைத் துவங்க திட்டமிட்டுள்ளார். இப்புதிய நிறுவனத்தில் சந்தா கோச்சார்-இன் கணவர் தீபக் கோச்சார் மற்றும் 2 உறவினர்களும் கூட்டு சேர்ந்தனர். இந்த நிறுவனத்தின் பெயர் நுபவர் ரினிவபல்.

பங்கீடு

பங்கீடு

நுபவர் ரினிவபல் நிறுவனத்தில் 50 சதவீத பங்குகளை வேணுகோபால் தூத்-உம், மீதமுள்ள 50 சதவீத பங்குகளைத் தீபக் கோச்சார் மற்றும் 2 உறவினர்களிடம் பிரிக்கப்பட்டது.

 9 லட்சம் ரூபாய்

9 லட்சம் ரூபாய்

இந்நிலையில் 2010 மார்ச் மாதம் நுபவர் ரினிவபல் நிறுவனத்திற்குச் சுமார் 64 கோடி ரூபாய் அளவிலான கடன் வேணுகோபால் தூத் தலைமை வகிக்கும் சப்ரீம் எனர்ஜி நிறுவனத்திற்கு நிதி பரிமாற்றம் செய்யப்பட்டது. இதன் பின்பு சில மாதங்களில் வெறும் 9 லட்சம் ரூபாய்க்கு நிறுவனத்தின் மொத்த உரிமையும் வேணுகோபால் தூத், தீபக் கோச்சாருக்குக் கொடுத்துள்ளார்.

6 மாத

6 மாத

ஐசிஐசிஐ வங்கியில் இருந்து வீடியோகான் நிறுவனத்திற்கு 3,250 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் பெற்ற 6 மாதத்தில் வேணுகோபால், தீபக் மத்தியிலான உரிமை பரிமாற்றம் நடந்துள்ளது. வீடியோகான் சுமார் 20 வங்கிகளிடம் இருந்து சுமார் 40,000 கோடி ரூபாய் கடன் வாங்கியதில் ஐசிஐசிஐ-யின் 3250 கோடியும் அடக்கம்

ஐசிஐசிஐ வங்கியில் வாங்கிய 3,250 கோடி ரூபாய் கடனில் 86 சதவீதம் இன்னும் வேணுகோபால் தூத் திருப்பிச் செலுத்தவில்லை, வராக் கடனாக மாறியுள்ளது.

 

சந்தேகம்

சந்தேகம்

சந்தா கோச்சார் தலைமையிலான ஐசிஐசிஐ வங்கி ஒப்புதல் அளித்த 3250 கோடி ரூபாய் கடனுக்கும், வெறும் 9 லட்சத்திற்குக் கைமாற்றிய உரிமையும் தான் இந்த வழக்கில் மிகப்பெபிய சந்தேகமாக எழுந்துள்ளது. இதற்காகவே சந்தா கோச்சாரிடம் விசாரணை செய்யச் சிபிஐ முடிவு செய்துள்ளது.

கேவி காமத்

கேவி காமத்

ஆரம்பம் முதல் ஐசிஐசிஐ வங்கியின் பணியாற்றிய சந்தா கோச்சார், 13 வருடமாகத் தொடர்ந்து கேவி காமத் நிர்வாகத்தில் இருந்த ஐசிஐசிஐ வங்கியை விட்டு அவர் வெளியேறிய பின்பு இவ்வங்கிக்குத் தலைவராக ஓரே தேர்வாக விளங்கினார் சந்தா கோச்சார்.

2009 நிதிநெருக்கடி

2009 நிதிநெருக்கடி

சந்தா கோச்சார் சாதாரண வங்கி அதிகாரி இல்லை, 2009இல் லெமன் பிரதர்ஸ் திவால், சர்வதேச சந்தையில் நிதிநெருக்கடி எனப் பல்வேறு சிக்கலில் இருந்து ஐசிஐசிஐ வங்கியை தாங்கிப்பிடித்துச் சரிவில் இருந்து காப்பாற்றியவர்.

2014இல் இவருக்குக் கனடாவின் காரல்டன் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்துக் குறிப்பிடத்தக்கது.

 

பத்ம பூஷன்

பத்ம பூஷன்

இதுமட்டும் அல்லாமல் 2011இல் நாட்டின் மிகப்பெரிய விருதான பத்ம பூஷன் விருதைப் பெற்றார், 7 முறை பேர்ப்ஸ்-இன் உலகின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலிலும், 5 முறை பார்சூன் உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலிலும், டைம் பத்திரிக்கையில் 2015ஆம் ஆண்டும் உலகின் 100 ஆதிக்கம் நிறைந்த பெண்கள் பட்டியலிலும் இடம்பெற்றார் சந்தா கோச்சார்.

கறை

கறை

இந்நிலையில் வீடியோகான் குழுமத்திற்கான கடன், நுபவர் நிறுவனத்தின் உரிமை பரிமாற்றத்தில் சந்தா கோச்சார்-இன் தலையீடு நிருபணம் செய்யப்பட்டால் இதுநாள் வரையில் அவர் சம்பாதித்த மொத்த நற்பெயர், விருதுகள் அனைத்திலும் கறைப்படியும்.

ஷிக்கா சர்மா

ஷிக்கா சர்மா

தனியார் வங்கித்துறை பிரிவில் முன்னணி வங்கியாகத் திகழும் ஆக்சிஸ் வங்கி தலைவர் ஷிக்கா சர்மா 2017 ஜூலை மாதம் 4வது முறையாக 3 ஆண்டுக் காலத் தலைவர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டார். இவரது புதிய 3ஆண்டுப் பணிக்காலம் ஜூன் 2018 முதல் துவங்க உள்ள நிலையில்..

மறுப்பு

மறுப்பு

ஆக்சிஸ் வங்கியின் திறன் மற்றும் சொத்து மதிப்புகள் தொடர்ந்து குறைந்து வரும் காரணத்தால் ரிசர்வ் வங்கி ஷிக்கா சர்மாவின் புதிய 3 ஆண்டுக் காலப் பணியை ஒப்புதல் குறித்து ஆலோசனை செய்ய ஆக்சிஸ் வங்கி நிர்வாகக்திடம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆக்சிஸ் வங்கி தற்போது ஒரு ஆண்டு மட்டும் தலைவராக ஷிக்கா சர்மாவை நியமிக்க முடிவு செய்துள்ளது.

 

ஐசிஐசிஐ-யில் ஷிக்கா சர்மா

ஐசிஐசிஐ-யில் ஷிக்கா சர்மா

2009ஆம் ஆண்டு ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படும் முன் அவர் ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் பிரிவின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.

ஆக்சிஸ் வங்கியில் பிஜே நாயக் வெளியேறிய காரணத்திற்காக நிர்வாகத்திற்கு வெளியில் இருந்து ஒருவரை நியமிக்கும் முடிவில் ஆக்சிஸ் இறங்கிய போதுதான் ஷிக்கா சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

 

வளர்ச்சி

வளர்ச்சி

ஷிக்கா சர்மா பணிக்கு வந்த பின்பு ஆக்சிஸ் வங்கி பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்தது. அதில் குறிப்பாக ஈநாம் குரூப் முதலீட்டு மற்றும் தரக்கு வர்த்தகத்தைக் கைபற்றிய பின் பங்கு ஆலோசனை மற்றும் இணைப்பு, கையகப்படுத்தல் பிரிவில் ஆக்சிஸ் முதன்மையாக விளங்கியது.

லாபம்

லாபம்

2009ஆம் ஆண்டுக்குப் பின் ஆக்சிஸ் வங்கி சுமார் 256 சதவீத லாபத்தைப் பதிவு செய்துள்ளது, ஐசிஐசிஐ 136 சதவீதம் மட்டுமே.

வராக்கடன்

வராக்கடன்

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆக்சிஸ் வங்கி சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக வராக்கடனின் கடந்த 3 வருடத்தில் சுமார் 336 சதவீத உயர்வு ஏற்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டில் வெறும் 1,173 கோடி ரூபாய் மட்டுமே வராக்கடனாக இருந்த நிலையில், 2017 டிசம்பரில் 25,001 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

 

 நேரம் சரியில்லை..!

நேரம் சரியில்லை..!

இப்படித் தனியார் வங்கித்துறையில் இருக்கும் இரு முக்கியப் பெண் தலைவர்களுக்கும் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chanda Kochhar & Shikha Sharma: Bad time for Two bank bosses

Chanda Kochhar & Shikha Sharma: Bad time for Two bank bosses
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X