பொருளாதார வளர்ச்சியில் சீனா உடன் போட்டிபோட முடியாத நிலையில் இந்தியா.. ர.ரா அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னால் கவர்னரான ரகுராம் ராஜன் இந்தியாவைச் சீன பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடுவது சரியல்ல என்றும் பல ஆண்டுகளாக இந்திய பொருளாதார வளர்ச்சியானது 7 சதவீதமாக மங்கலாகத் தான் நாம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

காரணம்

காரணம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மங்கலாக உள்ளதற்கு என்ன காரணம் என்று குறிப்பிட்ட ரகுராம் ராஜன், சீனாவில் சொத்துக்கள் அரசு வசம் உள்ளது, அவர்கள் நினைத்ததைச் செய்ய முடியும், இந்தியாவில் அப்படிக் கிடையாது, இந்தியா நெரிசல் மிகுந்த கூட்டமாக உள்ளது என்று ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.

பணமதிப்பு நீக்கம்

பணமதிப்பு நீக்கம்

பணமதிப்பு நீக்கம் முன்பே ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் நாட்டின் 87.5 சதவீத ரூபாய் நோட்டுகளை மாற்றி அமைக்க முடிவு செய்து இருந்தால் அதனை அச்சடிக்கப்பட்ட பிறகு மாற்றி இருக்க வேண்டும் என்றும் பணமதிப்பு நீக்கத்தினை அறிவித்த பிறகு ரூபாய் நோட்டு அச்சிடப்படத் துவங்கியது முட்டாள்தனமான நடவடிக்கை என்று தெரிவித்தார்.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி அமல்படுத்துவதில் உள்ள சிக்கல் குறித்துப் பேசிய போது அது ஒன்றும் செய்ய முடியாத காரியம் இல்லை என்றார். நாம் செய்வதைவிட மிகச் சிறப்பாகச் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும். ஆனால் நாம் அதற்காக அதிகம் உழைக்க வேண்டும். அதில் நான் இந்த நேரத்திலும் நம்பிக்கை இழக்க மாட்டேன் என்று அவர் கூறினார்.

 80:20 தங்கம் திட்டம்

80:20 தங்கம் திட்டம்

ரகுரான் ராஜன் 2013-ம் ஆண்டுக் கொண்டு வந்த 80:20 தங்கம் திட்டத்தினால் மேஹூல் சோக்ஸி போன்றோருக்குத் தான் அதிகப் பயன் அளித்ததாக அவர் மீது அன்மையில் விமர்சனமும் வைக்கப்பட்டுள்ளது.

ரகுராம் ராஜன் கொள்கை ரீதியில் தனது நிலைப்பாட்டை அதில் பாதுகாப்பாகத்தான் வைத்துள்ளார். ஆனால் அதன் குறிக்கோள் எனக் கூறி சிபிஐ இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகளை மேஹூல் சோக்ஸி விவகாரத்துடன் தொடர்புப்படுத்தி விசாரணை செய்து வருகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Raghuram Rajan says India’s economic growth looks pale only when compared with China

Raghuram Rajan says India’s economic growth looks pale only when compared with China
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X