இந்த பட்டியலில் ஒரு இந்திய நிறுவனம் கூட இல்ல.. கொசு கடி இருந்தா எப்படி வரும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகச்சிறந்த விமானச் சேவை வழங்கும் நிறுவனங்கள் குறித்த பட்டியலை, பயண இணையதளமான "TripAdviser" கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.

இயக்கப்படுகின்ற விமானங்களின் எண்ணிக்கை, பயணிகளுக்கு வழங்கப்படுகின்ற தரமான சேவை, ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விமானச் சேவை நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒருவருட சேவையின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

 கொரியன் ஏர்

கொரியன் ஏர்

"கொரியன் ஏர்" நிறுவனம் பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனத்திற்குச் சொந்தமாக 164 விமானங்கள் உள்ளன. 138 பயணிகள் விமானமும் 26 சரக்கு விமானங்களும் இதில் அடக்கம்.

தென் கொரியாவில் உள்ள 13 நகரங்கள் உட்பட 43 நாடுகளில் உள்ள 123 நகரங்களுக்கு இந்நிறுவனம் தனது சேவையினை வழங்குகிறது. 2016 ஆம் ஆண்டில் மட்டும் 28 மில்லியன் பயணிகள் இந்நிறுவனத்தின் சேவையினைப் பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் இந்நிறுவனம் 10.8 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது.

 

பிரேசில் நாட்டு ஆசுல் (Azul) நிறுவனம்

பிரேசில் நாட்டு ஆசுல் (Azul) நிறுவனம்

ஆசுல் (Azul) என்னும் பெயர் கொண்ட பிரேசில் நாட்டு விமானச் சேவை நிறுவனம் பட்டியலில் ஒன்பதாம் இடம் பிடித்துள்ளது. பட்டியலில் இடம் பிடித்துள்ள தென்அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த ஒரே நிறுவனம் இதுதான்.

2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இந்நிறுவனம் மூன்றாம் இடம் பிடித்திருந்தது. இந்த ஆண்டு 6 இடங்கள் பின்தங்கிவிட்டது. தற்போது இந்நிறுவனத்திற்குச் சொந்தமாக 138 விமானங்கள் உள்ளன. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த 105 நகரங்களுக்கு இந்நிறுவனம் தன்னுடைய சேவையை வழங்குகிறது.

 

கத்தார் ஏர்வேஸ்

கத்தார் ஏர்வேஸ்

கத்தார் ஏர்வேஸ், பட்டியலில் எட்டாம் இடத்தில் உள்ளது. உலகின் ஆறு கண்டங்களையும் சேர்ந்த 150 நகரங்களுக்கு இந்நிறுவனம் தன்னுடைய சேவையினை வழங்குகிறது.

தோஹா நகரில் அமைந்துள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இந்நிறுவனம் செயல்படுகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்நிறுவனத்தில் மொத்தம் 46,000 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். 1997 ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் விமானச் சேவை நிறுவனமாகத் திகழ்கிறது.

 

 Jet2 விமானச் சேவை நிறுவனம்

Jet2 விமானச் சேவை நிறுவனம்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த Jet2 நிறுவனத்திற்குப் பட்டியலில் ஏழாம் இடம். இந்நிறுவனம் இதனுடைய துணை நிறுவனமான Jet2Holidays -உடன் இணைந்து 2017 ஆம் நிதியாண்டில் மட்டும் 2.39 பில்லியன்களை வருமானமாக ஈட்டியுள்ளது.

ஐரோப்பா முழுவதும் 50 நகரங்களுக்குக் குறைந்த கட்டணத்தில் தன்னுடைய சேவையை வழங்கும் இந்நிறுவனத்திற்குச் சொந்தமாக 50 விமானங்கள் உள்ளன.

 

 சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்

சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்

அமெரிக்காவைச் சேர்ந்த சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது. இந்நிறுவனம், சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் உலகின் மிகப்பெரும் விமானச் சேவை நிறுவனமாகத் திகழ்கிறது.

அமெரிக்கா மற்றும் பிற பத்து நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களுக்கு இந்நிறுவனம் தனது சேவையை வழங்குகிறது. ஆண்டுக்கு 120 மில்லியன் பயணிகள் இந்நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்துகின்றனர்.

 

Eva Air விமானச் சேவை நிறுவனம்

Eva Air விமானச் சேவை நிறுவனம்

தைவான் நாட்டைச் சேர்ந்த Eva Air விமானச் சேவை நிறுவனம், பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. Skytrax அமைப்பின் மூலம் தரவரிசைப்படுத்தப்பட்ட ஐந்து நட்சத்திரத் தகுதி பெற்ற எட்டு விமானச் சேவை நிறுவனங்களுள் இந்நிறுவனமும் ஒன்று. உலகம் முழுவதும் 60 நகரங்களுக்குத் தன்னுடைய சேவையை இந்நிறுவனம் வழங்குகிறது.

போயிங், மெக்டன்னல் டக்ளஸ், ஏர்பஸ் ரகத்தைச் சேர்ந்த விமானங்கள் உட்பட மொத்தம் 70 விமானங்களை இந்நிறுவனம் சொந்தமாக வைத்திருக்கிறது.

 

ஜப்பான் ஏர்லைன்ஸ்

ஜப்பான் ஏர்லைன்ஸ்

ஜப்பான் ஏர்லைன்ஸ், பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது. 2017-18ஆம் நிதியாண்டின் முதல் ஒன்பது மாதத்தில் இந்நிறுவனம், 13.47 பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டியுள்ளது. ஆண்டுக்கு 41 மில்லியன் பயணிகள் இந்நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்துகின்றனர்.

 எமிரேட்ஸ் விமானச் சேவை நிறுவனம்

எமிரேட்ஸ் விமானச் சேவை நிறுவனம்

டாப் 10 பட்டியலில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இடம்பெற்றுள்ள இரண்டு விமானச் சேவை நிறுவனங்களுள் எமிரேட்ஸ் விமானச் சேவை நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் மூன்றாமிடத்தில் உள்ளது.

உலகின் மிகப்பெரும் பயணிகள் விமானச் சேவை நிறுவனமாகக் கருதப்படும் இந்நிறுவனத்திற்குச் சொந்தமாக 265 விமானங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 80 நாடுகளைச் சேர்ந்த 155 நகரங்களுக்கு விமானச் சேவையை இந்நிறுவனம் வழங்குகிறது.

 

ஏர் நியூசிலாந்து

ஏர் நியூசிலாந்து

பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்திருப்பது நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த விமானச் சேவை நிறுவனமான ஏர் நியூசிலாந்து நிறுவனம். ஆண்டுக்கு 15 மில்லியன் பயணிகள் இந்நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்துகின்றனர். போயிங் 777 ரக விமானம், பம்பார்டியர் க்யூ 300 ரக விமானங்கள் உட்பட 150 விமானங்கள் இந்நிறுவனத்திற்குச் சொந்தமாக உள்ளன. பசிபிக் கடலோர நாடுகளில் இந்நிறுவனத்தின் சேவை பரந்து விரிந்துள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

ஆசியா கண்டத்தில் உள்ள சிறிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்த விமானச் சேவை நிறுவனம்தான் TripAdviser வெளியிட்டுள்ள பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. உலகின் மிகச்சிறந்த விமான நிலையமாகத் திகழும் ஷங்கியிலிருந்து (Changi Airport) கிளம்பும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் உயர்தரமான சேவைகளின் மூலம் பயணிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது மட்டும் அல்லாமல், ஆசியாவிலேயே மிகச் சிறந்த விமான நிறுவனம், குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவை வழங்கும் நிறுவனம், உலகின் மிகச்சிறந்த முதல்வகுப்புப் பயணச் சேவை நிறுவனம் போன்ற ஏழு விருதுகளையும் இந்நிறுவனம் வென்றுள்ளது.

இந்திய நிறுவனம்

இந்திய நிறுவனம்

விமானப் போக்குவரத்தில் பெரிய அளவில் வளர்ச்சி அடைய இந்திய சந்தையில் பெரிய அளவிலான வாய்ப்புகள் உள்ளது. இப்படி இருந்தும் இப்பட்டியலில் ஒரு இந்திய நிறுவனம் கூட இல்லாமல் இருப்பது மிகவும் மோசம்.

இன்றளவும் இந்தியாவில் விமானச் சேவை என்பது ஆடம்பரம் தான், இப்படி இருந்தும் விமானத்தில் வாடிக்கையாளர்கள் சேவை மிகவும் மோசமாக உள்ளது. சமீபத்தில் இண்டிகோ நிறுவனத்தின் பயணி ஒருவர் கொசு தொல்லை அதிகமாக உள்ளது எனக் கூறிய காரணத்தால் அவர் தரையிறக்கி விடப்பட்டார்.

இதுதான் இந்திய விமான நிறுவனங்களின் நிலை.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best airline in the world: Big 'NO' to Indian companies

Best airline in the world: Big 'NO' to Indian companies
Story first published: Friday, April 13, 2018, 13:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X