பிஎப் வாங்குவோருக்கும் ஜாக்பாட்.. அதிக வட்டி வருமானத்தை பெற சூப்பரான சான்ஸ்..!

By Tamilarasu
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிஎப் சந்தாதார்கள் விரைவில் தங்களது பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்வதை உயர்த்திக்கொள்ளக் கூடிய தேர்வை அளிக்க உள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.

வருங்கால வைப்பு நிதி ஆணையம் மற்றும் மத்திய நிர்வாகக் குழு மத்தியில் நடந்த முக்கியமான கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் இதற்கான சாதக பாதகங்களை அடுத்ததடுத்த கூட்டத்தில் ஆலோசனை செய்ய முடிவு செய்ய உள்ளது.

இதனால் பிஎப் வாங்குவோருக்கு என்ன பயன்..?

புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டால் என்ன ஆகும்?
 

புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டால் என்ன ஆகும்?

பிஎப் சந்தாதார்களுக்கு இந்தப் புதிய முறையானது அறிமுகம் செய்யப்பட்டால் தற்போது 15 சதவீதமாக உள்ள பங்கு சந்தை முதலீட்டை, சந்தாதார்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களால் உயர்த்திக்கொள்ள முடியும்.

ஈக்விட்டி முதலீடு அளவை உயர்த்துவதால் என்ன பயன்?

ஈக்விட்டி முதலீடு அளவை உயர்த்துவதால் என்ன பயன்?

வருங்கால வைப்பு நிதி ஆணையமானது 41,967.51 கோடி ரூபாயை ஈக்விட்டி திட்டங்களில் முதலீடு செய்து 2018 பிப்ரவரி 28ம் தேதி வரை 17.23 சதவீத லாபத்தினைப் பெற்றுள்ளது. அதுமட்டும் இல்லாமல் மார்ச் மாதம் 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றது குறிப்பிடத்தக்கது.

நடப்பு முறை

நடப்பு முறை

தற்போது பிஎப் சந்தாதார்களின் 15 சதவீத பணத்தினை விட அதிகமாக வருங்கால வைப்பு நிதி ஆணையத்திற்கு ஈக்விட்டி திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதி கிடையாது.

சென்ற ஆண்டு மத்திய அரசு பிஎப் சந்தாதார்களின் முதலீடு மீதான லாபத்தினை அவர்களது கணக்கில் நேரடியாகத் திருப்பிச் செலுத்த அனுமதி அளித்தது.

கூடுதல் தொகை - ஈபிஎப்ஓ
 

கூடுதல் தொகை - ஈபிஎப்ஓ

பிஎப் சந்தாதாரர்கள் 15 சதவீதத்திற்கும் அதிகமாக முதலீடு செய்ய விரும்பும் பணத்தை வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் கீழ் தான் ஈக்விட்டி பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று மத்திய நிர்வாக வாரியமானது பரிந்துரைத்துள்ளது.

ஈக்விட்டி சேவையில் புதிய மாற்றம்

ஈக்விட்டி சேவையில் புதிய மாற்றம்

2018-ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஈக்விட்டி முதலீடுகள் மூலமாகக் கிடைக்கும் லாபத்தினை நேரடியாகப் பிஎப் சந்தாதார்களின் கணக்கில் டெபாசிட் செய்யப் புதிய கணக்கு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வுகள்

தேர்வுகள்

பிஎப் கணக்கில் புதிய முறை அறிமுகம் செய்யப்படும் போது எப்போது வேண்டுமானாலும் தங்களது ஈக்விட்டி முதலீட்டு அளவினை ஏற்ற, இறக்க, மாற்றி அமைக்கவும் அனுமதிகள் வழங்கப்படும்.

ஈக்விட்டி முதலீடு

ஈக்விட்டி முதலீடு

வருங்கால வைப்பு நிதி ஆணையமானது ஈக்விட்டி ஃபண்டுகளில் 2015 ஆகஸ்ட் மாதம் 5 சதவீத முதலீட்டுடன் துவங்கியது. பின்னர் அதுவே 2016-2017 நிதி ஆண்டில் 10 சதவீதமாகவும், 2017 - 2018 நிதி ஆண்டில் 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கான விதிகள் அனைத்தும் முறை செய்யப்பட்டு விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

EPF Subscribers Can Soon Be Able To Raise Equity Exposure From 15% To Higher

EPF Subscribers Can Soon Be Able To Raise Equity Exposure From 15% To Higher
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X