அவனுங்கள நானே தூக்குல போடுறன்.. கோபத்தின் உச்சத்தில் ஆனந்த் மஹிந்திரா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமங்களில் ஒன்றான மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த மஹிந்திரா டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பது நாம் அனைவருக்கும் தெரியும், பல சமயம் முக்கியமான கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில்.

 

தற்போது நாட்டையே உலுக்கி வரும் ஜம்மு காஷ்மீர் சேர்ந்த 8வயது குழந்தையின் கற்பழிப்பு, கொலை சம்பவம், மற்றும் உத்திர பிரதேசத்தில் 16 வயது சிறுமியை பிஜேபி-யே சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கர் கற்பழிப்பு ஆகியவை மக்களின் வெறுப்பின் உச்சத்தில் கொண்டு சென்றுள்ளது.

இதில் ஆனந்த் மஹிந்திராவும் ஒருவர்..

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

கோபத்தின் உச்சத்தில் இருக்கும் ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் கற்பழிப்பு செய்தவர்களையும், கொலை செய்தவர்களையும் நானே தூக்கிலிடுகிறேன் எனப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

டீவிட்

கொலை தண்டனையை நிறைவேற்றுவது ஆர்வமிக்க வேலை இல்லை என்றாலும், பெண் குழந்தைகளைக் கற்பழிப்பு, கொலை செய்தவர்களையும் எந்தவித தயக்கமுமின்றி நானே தூக்கிலிடுகிறேன்.

அமைதியாக இருக்கக் கடுமையாக முயற்சித்தேன், ஆனால் நாட்டில் நடப்பதைப் பார்த்து என் ரத்தம் கொதிக்கிறது என மற்றொரு இணைப்பை அளித்தார்.

இணைப்பு..

இணைப்பு..

அந்த இணைப்பில், சூரத்தில் 9வயது குழந்தையை 8 நாட்களுக்குக் கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்துள்ளனர், இந்தக் குழந்தையின் உடலில் சுமாக் 80க்கும் அதிகமான காயங்கள் உள்ளது.

இதில் கொடுமை என்னவென்றால் அந்தக் குழந்தை இதுவரை யாரென்று அடையாளம் தெரியவில்லை என்பதே.

 

ஆதரவு..

உங்களுடைய 6.6 மில்லியன் பாலோவர்கள் உங்களது முடிவில் துணை இருப்பார்கள்.

மத்திய அரசு..

நீங்க தூக்கில் போட வேண்டாம், குழப்பத்தையும், மத பிரச்சனைகளையும் தூண்டும்... தகுதியற்ற அரசுக்கு துணை நிற்காமல் இருந்தாலே போதுமானது.

அம்பானியும், அதானியும்..

இதற்கு பதில் அளித்த ஒருவர், மத்திய அரசை மஹிந்திரா ஆதரிப்பவரா அல்லது எதிர்பவரா என்பது நமக்கு தெரியாது, ஆனால் அம்பானியும், அதானியும் செய்வார்கள்.

ஆனால் பொதுவாக நீங்கள் சொன்னது மிக சரியானது.

வரிசையில நில்லுங்க

ஆனந்த் மஹிந்திரா அவர்களை தூக்கிலிட நீங்கள் வரிசையில் நிற்க வேண்டும்.

விடுதலை

ஆனந்த் மஹிந்திரா நல்ல முடிவு..

ஒரு வருத்தமான செய்தியை சொல்கிறேன். அனைத்து குற்றவாளிகளும் விடுதலை ஆவார்கள், வழக்கு நீதிமன்றத்தை சேரும் முன் ஆதாரங்கள் அழிக்கப்படும் என ஒருவர் வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.

அவர்களை தண்டிக்க மொபைல் கோர்ட் வேண்டும்.

கேரளா அதிரடி..

இந்நிலையில் நம்முடைய கேரள சேட்டன், சேத்திகள் தங்களது வீட்டில் செய்யும் அசத்தலான வேலையை பாருங்கள்.

தமிழ் நாட்டை வாங்கிடுவேன்..

தமிழ் நாட்டை வாங்கிடுவேன்..

தமிழ் நாட்டை வாங்கிடுவேன்.. ஆனந்த் மஹிந்திராவின் அதிரடி டிவீட்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

My blood boils over: Anand Mahindra Outburst

My blood boils over: Anand Mahindra Outburst
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X