நிலகரி சுரங்கங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதற்கு எதிரான போராட்டத்தை தடுத்த கோல் இந்தியா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிலகரி சுரங்கங்களை வணிக ரீதியில் பயன்படுத்துவதைக் கண்டித்து கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் (CIL) தொழிற்சங்கங்கள் ஏப்ரல் 16-ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் நடத்துவதாக அறிவித்திருந்தன.

நிலகரி சுரங்கங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதற்கு எதிரான போராட்டத்தை தடுத்த கோல் இந்தியா!

இந்த அறிவிப்பை அடுத்து தொழிற்சங்கங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களைக் களைந்து ஆக்கபூர்வமாகச் செயல்பட மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் மும்பையில் பிஎம்எஸ் எச்எம்எஸ், ஏஐடியுசி, சிஐடியு ஆகிய தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நிலக்கரித் துறைச் செயலருடன் நடைபெற்றது. இதன் விளைவாக நான்கு முக்கிய தொழிற்சங்கங்கள் தங்களது வேலைநிறுத்ததைக் கைவிடுவதாக அறிவித்தன. அதிலும் பிஎம்எஸ், எச்எம்எஸ் ஆகியற்றின் தலைவர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிடுவதாகக் கையெழுத்திட்டனர்.

ஏஐடியுசி கையெழுத்திட்டு அதிகாரபூர்வமாக ஒப்புதல் அளிக்காவிட்டாலும் அவர்களும் வேலைநிறுத்தத்தைக் கைவிடுவதாக உறுதியளித்துள்ளனர்.

சிஐடியு தொழிற்சங்கம் மட்டுமே வேலைநிறுத்ததைத் தொடரப் போவதாகக் கூறியதுடன், சுரங்கத் தொழிலை வணிக ரீதியில் பயன்படுத்தும் முயற்சியைக் கண்டித்து எதிர்ப்புத் தினத்துக்கு அழைப்பு விடுத்தது.

இந்நிலையில், நிலக்கரி உற்பத்தியில் பாதிப்பு நேராமல் இருக்கவும் சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் நிலக்கரியைக் கையாள்வது சுமுகமாக நடைபெறவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எல்லாச் சுரங்கங்களிலும் நிலக்கரி தோண்டியெடுப்பதற்கான ஏலம் விடுவதற்குப் பலமுனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

COAL INDIA ON FULL THROTTLE TO WARD OFF THE STRIKE ON COMMERCIAL COAL MINING

COAL INDIA ON FULL THROTTLE TO WARD OFF THE STRIKE ON COMMERCIAL COAL MINING
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X