4 தனியார் வங்கிகளில் தலைமை மாற்றம்.. இவர்களை நம்பிதான் இனி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வங்கித்துறையில் தனியார் வங்கிகளுக்கு மிகப்பெரிய ஆதிக்கம் உள்ளதை நாம் மறுக்க முடியாது, அதில் குறிப்பாக எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை பெரிய அளவிலான பங்கீட்டை கொண்டுள்ளது.

 

அப்படி ஆதிக்கம் நிறைந்த 4 தனியார் வங்கிகளின் தலைமை மாற உள்ளது.

எச்டிஎப்சி வங்கி

எச்டிஎப்சி வங்கி

எச்டிஎப்சி வங்கியின் சிஇஓவாக இருக்கும் ஆதித்யா பூரி அவர்களுக்குச் சிறப்பாகப் பணியாற்றி வரும் நிலையில் அவருக்கு 70 வயது ஆகும் நிலையில் வருகிற 2020ஆம் ஆண்டு ஓய்வு பெறுகிறார்.

வளர்ச்சி

வளர்ச்சி

ஆதித்யா பூரி தலைமையில் எச்டிஎப்சி வங்கியின் சொத்து மதிப்பு 9.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, கடந்த 10 வருடத்தில் 633 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் மொத்த வராக்கடன் அளவு 0.44 சதவீதமாக உள்ளது. இதுமட்டும் அல்லாமல் எச்டிஎப்சி வங்கியின் P-B ratio (புத்தக விலைக்கும் சந்தை விலைக்குமான வித்தியாசம்) 5.21 மடங்காக உள்ளது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

இந்நிலையில் ஆதித்யா பூரி பதவிக்கு இவ்வங்கியில் இருக்கும் 3 முக்கிய அதிகாரிகள் போட்டி போடுகின்றனர்.

பிரேஷ் சுதாகரன் (54) துணை நிர்வாக இயக்குனர்

கைய்செத் பரூச்சா (52) நிர்வாக இயக்குனர்

ஆஷிஷ் பார்த்தசாரதி (50) கருவூல தலைவர்

ஆக்சிஸ் வங்கி
 

ஆக்சிஸ் வங்கி

இவ்வங்கியின் வராக்கடன் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் ஆக்சிஸ் வங்கி ஷிக்கா சர்மாவிற்கு அளிக்கப்பட்ட 3 ஆண்டுப் பணி நீட்டிப்பை ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் தற்போது 6 மாதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இவரின் பணி வருகிற டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.

வளர்ச்சி

வளர்ச்சி

ஷிக்கா சர்மா தலைமையில் ஆக்சிஸ் வங்கியின் சொத்து மதிப்பு 6.43 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, கடந்த 10 வருடத்தில் 250 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வங்கியின் மொத்த வராக்கடன் அளவு 2.56 சதவீதமாக உள்ளது.

மேலும் இவ்வங்கியின் P-B Ratio 2.15 மடங்காக உள்ளது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

ஷிக்கா சர்மாவின் இடத்திற்கு இந்த வங்கியில் போட்டி போடும் முக்கியமான அதிகாரிகள் இவர்கள் தான்.

வி. ஸ்ரீநிவாசன் (53) துணை நிர்வாக இயக்குனர்

ஜெய்ராம் ஸ்ரீதரன் (42) குழு நிறுவன தலைவர் மற்றும் தலைமை நிதியியல் அதிகாரி

ராஜீவ் ஆனந்த் (51) ரீடைல் வங்கியியல் பிரிவின் நிர்வாக இயக்குனர்

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

கே.வி காமத் ஐசிஐசிஐ வங்கியை விட்டு வெளியேறிய பின்பு இந்த வங்கியின் தலைமை பொறுப்பில் சந்தா கோச்சார் அவர்களிடம் வந்தது. சிறப்பான நிர்வாகத்தால் வங்கி தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், வீடியோகான் நிறுவனத்திற்கு ஐசிஐசிஐ வங்கி அளித்த 3250 கோடி ரூபாய் கடன் பிரச்சனையில் சந்தா கோச்சார் சிக்கினார்.

இதற்கான சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாகக் குழுவில் ஒரு தரப்புச் சந்தா கோச்சார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. மேலும் அவர் மீதான குற்றம் விசாரணையில் நிருபணம் செய்யப்பட்டால் கண்டிப்பாக அவர் வெளியேறுவார். இந்நிலையில் அவரது பணியும் உறுதியாக இல்லை.

வளர்ச்சி

வளர்ச்சி

சந்தா கோச்சார் தலைமையில் ஐசிஐசிஐ வங்கியின் மொத்த சொத்து மதிப்பு 8.13 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, கடந்த 10 வருடத்தில் இவ்வங்கி லாபம் 96 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வங்கி மொத்த வராக்கடன் அளவு 4.20 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் P-B விகிதம் 1.81 சதவீதமாக உள்ளது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

சந்தா கோச்சார் மீதான குற்றம் உறுதியாகி அவர் வெளியேறினால் இவர் பதவிக்குப் போட்டி போடும் 3 முக்கிய அதிகாரிகள்

என்.எஸ். கண்ணன் (53) நிர்வாக இயக்குனர்

விஷாகா முலே (48) நிர்வாக இயக்குனர்

சந்தீப் பக்ஷி (57) சிஇஓ ஐசிஐசிஐ புரெடன்ஷியல் லைப் இன்சூரன்ஸ்

இன்டஸ்இந்த் வங்கி

இன்டஸ்இந்த் வங்கி

ஆதித்யா பூரி போலவே இன்டஸ்இந்த் வங்கி சிஇஓ ரோமேஷ் சோபிடி வருகிற 2020ஆம் ஆண்டில் 70 வயதைத் தொடுவதால் பணியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளார்.

வளர்ச்சி

வளர்ச்சி

ரோமேஷ் சோபிடி தலைமையில் இன்டஸ்இந்த் வங்கியின் மொத்த சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது, கடந்த 10 வருடத்தில் இவ்வங்கி 2,145 சதவீதம் லாபத்தை அளித்துள்ளது.

மேலும் இவ்வங்கியின் மொத்த வராக்கடன் 0.46 சதவீதமாக உள்ளது, இவ்வங்கியின் P-B விகிதம் 4.94 மடங்காக உள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

ரோமேஷ் சோபிடி போட்டுப்போடும் 3 அதிகாரிகள்

சுமத் கத்பாலியா (53) நுகர்வோர் வங்கியியல் தலைவர்

பால் ஆபிரகாம் (57) தலைமை செயல் அதிகாரி

சுஹைல் சந்தர் (59) கார்பரேட் மற்றும் வர்த்தகப் பிரிவு தலைவர்

வெளியாட்கள்

வெளியாட்கள்

இந்த 4 வங்கிகளின் தலைவர்கள் வெளியேறும் நிலையில், அப்பதவிக்குப் போட்டி போடும் அதே வங்கி அதிகாரிகளைப் பார்த்தோம்.

இந்தப் பதிவிக்கு வங்கிக்கு வெளியிலும் சில அதிகாரிகள் தகுதியாக உள்ளார். இவர்களில் சில உங்கள் கவனத்திற்கு

சியாம் ஸ்ரீநிவாசன் - பெடரல் வங்கியின் சிஇஓ

முரளி நட்ராஜன் - டிசிபி வங்கியின் சிஇஓ

பாலாஜி சுவாமிநாதன் - வெஸ்ட்பேக் வங்கி நிர்வாகத் தலைவர்

பிராமிட் ஜவேரி - சிட்டிவங்கி சிஇஓ

ராஜீவ் சபர்வால் - டாடா கேபிடல் சிஇஓ

சன்யோய் சட்டர்ஜி - கோல்டு மேன் சாச்சஸ் இந்தியா தலைவர்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

These people Were India's Next Banking Superstar

These people Were India's Next Banking Superstar
Story first published: Wednesday, April 18, 2018, 16:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X