தமிழ்நாடு போன்ற முற்போக்கு மாநிலங்களின் நிதி தேவை கவனமாகப் பரிசீலனை செய்யப்படும்: என்.கே.சிங்

By Staff
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழு இன்று 15-வது நிதி ஆணையக் குழுவை சந்தித்தது மனு ஒன்றைச் சமர்ப்பித்து, ஆணையத்தின் நிபந்தனைகள் குறித்த தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

 

வளர்ச்சி குறைந்த மாநிலங்களுக்கு நிதியளிப்பதின் தேவையையும், சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களின் வளர்ந்துவரும் விருப்பங்களையும் சமன் செய்ய வேண்டும் எனப் பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

 
தமிழ்நாடு போன்ற முற்போக்கு மாநிலங்களின் நிதி தேவை கவனமாகப் பரிசீலனை செய்யப்படும்: என்.கே.சிங்

மக்களவைத் துணைத் தலைவர் திரு. எம். தம்பிதுரை உள்ளிட்ட அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய 40 உறுப்பினர்கள் கொண்ட இந்தக் குழுவினர் மாநில மக்களின் மேம்பாட்டுக்காக மேற்கொண்ட முயற்சிகள், திரட்டிய ஆதாரங்கள் ஆகியவற்றைச் சுமார் 35 நிமிடங்கள் நடந்த இந்தக் கூட்டத்தின்போது எடுத்துரைத்தனர். வளர்ச்சி குறைந்த மாநிலங்களுக்கு நிதியளிப்பதின் தேவையையும், சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களின் வளர்ந்துவரும் விருப்பங்களையும் சமன் செய்ய வேண்டும் என்றும், சிறப்பாகச் செயல்படும் மாநில மக்களின் விருப்பங்களை நிறைவு செய்ய வேண்டும் என்றும் குழுவினர் ஆணையத்தைக் கேட்டுக்கொண்டனர்.

இந்தியாவின் வளத்துக்குப் பெரும் பங்களித்துள்ள தமிழ்நாடு போன்ற முற்போக்கு மாநிலம் குறித்து ஆணையம் மிகக் கவனமாகப் பரிசீலனை செய்யும்: என்.கே.சிங்.

குழுவினரை வரவேற்ற ஆணையத்தின் தலைவர் திரு.என்.கே.சிங் அவர்களுக்குப் பாராட்டும் தெரிவித்தார். ஒவ்வொரு மாநிலத்தின் நிதித் தேவையும் தனித்தனியாக அவற்றின் சிறப்பு அம்சங்களுக்கு ஏற்ப மதிப்பீடு செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார். இந்தியாவின் வளத்துக்குப் பெரும் பங்களித்துள்ள தமிழ்நாடு போன்ற முற்போக்கு மாநிலம் குறித்து ஆணையம் மிகக் கவனமாகப் பரிசீலனை செய்யும் என்றும் அவர் கூறினார். நிதி ஆணையம் தமிழ்நாட்டில் பயணம் மேற்கொள்ளும் தேதி செப்டம்பர் மாத இறுதியில் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Source: PIB

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FISCAL needs of the progressive states like Tamilnadu will be carefully reviewed: NK Singh

FISCAL needs of the progressive states like Tamilnadu will be carefully reviewed: NK Singh
Story first published: Thursday, April 19, 2018, 19:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X