இந்தியாவின் மிகப் பெரிய ஐடி சேவை வழங்கும் நிறுவனமான டாடா கன்சல்டன்சி எனப்படும் டிசிஎஸ் டாடா குழுமத்தின் துணை நிறுவனமாகும். இந்த நிறுவனம் திங்கட்கிழமை 100 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தினைப் பெற்றுள்ளது.
100 பில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் டிசிஎஸ் நிறுவனம் எலைட் கிளப்பில் சேந்துள்ளது. உலகம் முழுவதிலும் 63 நிறுவனங்கள் மட்டுமே பில்லியன் டாலர் முதலீட்டினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிசிஎஸ் சந்தை மூலதனமது தற்போட்து 128 நாடுகளின் ஜிடிபி-க்கு இணையாக உள்ளது. பாகிஸ்தான் பங்கு சந்தையில் உள்ள மொத்த நிறுவனங்களின் சந்தை மூலதனமும் ஒன்று சேர்ந்தால் கூட டிசிஎஸ் நிறுவனத்தினைத் தொட முடியாத உயரத்தில் உள்ளது.
128 நாடுகளின் ஜிடிபி
2017-ம் ஆண்டு உலகம் முழுவதும் 128 நாடுகள் 100 பில்லியன் டாலர் ஜிடிபி-க்கும் குறைவாக உள்ளன. இந்தப் பட்டியலில் இலங்கை, ஈக்வடார், ஸ்லோவாகியா, கென்யா, லக்சம்பர்க், கோஸ்டா ரிக்கா, பல்கேரியா, பெலாரஸ் மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன. 64 முதல் 65 நாடுகளின் ஜிடிபி 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது.
பாகிஸ்தான்
அமெரிக்க டாலருக்கு இணையான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 116.04 ஆகும், பாகிஸ்தான் பங்கு சந்தையில் பட்டிலிடப்பட்டுள்ள மொத்த நிறுவனங்களின் மதிப்பு 80 பில்லியன் டாலர்கள் ஆகும்.
எலைட் கிளப்
100 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் சந்தை மதிப்புடைய நிறுவன பட்டியலில் டிசிஎஸ் 64-வது நிறுவனமான இடம்பெற்றுள்ள நிலையில், ஆப்பிள் 840 பில்லியன் டாலர் மதிப்புடன் முதல் இடத்திலும், மைக்ரோசாப்ட் 731 பில்லியன் டாலர் மதிப்புடனும், அமேசான் 740.79 பில்லியன் டாலர் மதிப்புடனும், நெபிளிக்ஸ் 142 பில்லியன் டாலர் மதிப்புடன், கூகுள் 746.03 பில்லியன் டாலர் மதிப்புடனும், ஐபிஎம் 133 பில்லியன் டாலர் மதிப்புடனும் உள்ளன.
இந்திய பட்ஜெட்
2018-2019 நிதி ஆண்டிற்கான இந்திய பட்ஜெட்டிற்கு 24.42 லட்சம் கோடி ரூபாய்த் தேவைப்படும் நிலையில் அதில் 27 சதவீதமான 6.7 கோடி ரூபாய் டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமாக உள்ளது.
இந்திய - ஜப்பான் பாதுகாப்புத் துறை பட்ஜெட்
இந்தியா மற்றும் ஜப்பானின் பாதுகாப்புத் துறை பட்ஜெட்டினை கூட்டு சேர்த்தால் அதற்கு இணையாக டிசிஎஸ்-ன் சந்தை மூலதனம் உள்ளது.
இந்திய ஃபோரெக்ஸ் சந்தை
இந்திய போரெக்ஸ் சந்தை 426 பில்லியன் டாலர் மதிப்புடையதாக உள்ள நிலையில் தோராயமாக 4-ல் ஒரு பங்கு டிசிஎஸ் நிறுவனத்திடம் உள்ளது.
டாடா குழுமம்
டாடா குழுமத்தின் கீழ் இந்திய பங்கு சந்தையில் 30 நிறுவனங்கள் உள்ள நிலையில் அவற்றின் மதிப்பு 10.79 லட்சம் கோடி ரூபாய் ஆகும். அதில் 6.7 லட்சம் கோடி, அதாவது 62 சதவீதம் டிசிஎஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது.
டிசிஎஸ் - ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்உ டிசிஎஸ் இணையான பங்கு மூலதனத்தினைப் பெற 13 சதவீதம் வளர்ச்சி தேவைப்படும். தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதனம் 5.94 லட்சம் கோடியாக உள்ளது. அதாவது டிசிஎஸ்-ஐ விட 70,000 கோடி ரூபாய் குறைவு.
அக்சன்சர்
அக்சன்சர் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 102 பில்லியன் டாலராக உள்ள நிலையில் டிசிஎஸ் 101 பில்லியன் டாலராக உள்ளது.