இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் மக்கள் மத்தியில் அதிகளவில் பரவியுள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், விநியோகிஸ்தர்கள் என அனைவருக்கும் இந்த வர்த்தகத் தளம் பெரிய அளவில் உதவி செய்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஈகாமர்ஸ் நிறுவனங்களால் தீர்க்க முடியாத பிரச்சனை என்பது போலியான பொருட்களின் விற்பனை தான்.
இதிலும் இந்தியாவில் ஒருபடி அதிகம் என்றே சொல்லாம், நாட்டின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் விற்பனை செய்யப்படும் 3இல் ஒரு பங்கு பொருட்கள் போலியானவை.

ஆய்வு
இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் மக்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் அதன் தரம் மற்றும் நம்பகதன்மையைச் சோதித்துப் பார்க்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
இந்நிஸையில் லோக்கல்சர்கிள் என்னும் நிறுவனம் செய்த ஆய்வில் சுமார் 6,923 பேர் கலந்துகொண்டு அளித்த வாக்கு அடிப்படையில் இந்த ஆய்விற்க்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருட அனுபவம்
இதில் கலந்துகொண்ட அனைவரும் கடந்த ஒரு வருடமாக அதிகளவிலான பொருட்களை ஆன்லைன் ஷாப்பிங் வாயிலாகவே வாங்கி வந்துள்ளனர்.
இவர்கள் அளித்துள்ள பதில்கள் நம்மை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

முக்கிய நிறுவனங்கள்
இந்த ஆய்வின் முடிவில் ஸ்னாப்டீல் நிறுவனத்தில் பொருட்களை வாங்கிய 12 சதவீதம் பேர் போலியான பொருட்களைப் பெற்றுள்ளது, இதேபோல் அமேசானில் 11 சதவீதம் பேர், பிளிப்கார்ட்-இல் 6 சதவீதம் பேர் எனப் போலி பொருட்கள் மூலம் ஏமாற்றமடைந்த வாடிக்கையாளர்கள் ஏராளம்.

மற்றொரு சர்வே
இதேபோல் வெலாசிட்டி எம்ஆர் என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வில் 3000 பேர் பங்கேற்றனர், இதில் 3இல் ஒருவர் போலியான பொருட்கள் மூலம் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கார்ப்பரேட் விவகாரம்
ஈகாமர்ஸ் வர்த்தகம் குறித்து ஆய்வுகளைச் செய்து அதற்கான சட்ட வரைவுகளைக் கொண்டு வரும் பணியில் கார்ப்பரேட் விவகார துறை ஈடுபட்டுள்ள இந்த நேரத்தில் தற்போது வெளியாகியுள்ள ஆய்வின் முடிவுகள் ஈகாமர்ஸ் சந்தையில் பெரிய அளவிலான அதிர்வை ஏற்படுத்தியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

முக்கியப் பிரிவுகள்
தற்போது செய்யப்பட்ட ஆய்வில் வாடிக்கையாளர்கள் வாசனைத் திரவியம், ஷூ, விளையாட்டு ஆடைகள், பேஷன் பொருட்கள், பேக் ஆகியவற்றில் அதிகளவிலான போலியான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிய வந்துள்ளது.

எச்சரிக்கை
ஆகவே மக்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர் மற்றும் அவரின் மதிப்பு மற்றும் ஏற்கனவே அப்பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்களின் கருத்து ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னர் ஷாப்பிங் செய்யுங்கள்.