இந்திய ஐடி நிறுவனங்களைக் குறிவைக்கும் அமெரிக்க அரசு.. அதிர்ச்சி தகவல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பொருளாதாரத்தில் ஐடி துறையின் வர்த்தகம் மிகப்பெரிய அளவிலான பங்கை கொண்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் தங்களது வருவாயில் பெரும் பகுதி வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் அதிலும் முக்கியமாக அமெரிக்கச் சந்தையில் இருந்து மட்டுமே பெறுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்கா வர்த்தகத்தில் இருந்து அதிக வருவாய் பெற கையில் வைத்திருக்கும் முக்கியமான ஆயுதம் ஹெச்1பி விசா.

தொடர் மறுப்பு

தொடர் மறுப்பு

அமெரிக்காவில் டிரம்ப் பதவியேற்றிய பின் ஹெச்1பி விசா மீது அடுத்தடுத்த கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இவை அனைத்தையும் பூர்த்திச் செய்யும் அளவிற்குத் தகுதியுடைய இந்தியர்கள் விண்ணப்பத்தை விசாவிற்காகக் கொடுத்தாலும் அதிகளவில் நிராகரிப்புச் செய்கிறது அமெரிக்கக் குடியுரிமை அமைப்பு.

அதிகளவிலான சரிவு

அதிகளவிலான சரிவு

2015 மற்றும் 2017 இடையிலான காலத்தில் மட்டும் இந்தியாவின் முன்னணி 7 ஐடி நிறுவனங்கள் சமர்ப்பித்த ஹெச்1பி விசா விண்ணப்பங்களில் சுமார் 43 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

43 சதவீதம் சரிவு

43 சதவீதம் சரிவு

அமெரிக்காவின் National Foundation for American Policy அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் 2017ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் முன்னணி 7 ஐடி நிறுவனங்களுக்கு 8,468 விசா மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதை 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால் சுமார் 43 சதவீதம் சரிந்துள்ளது.

2015ஆம் நிதியாண்டில் 7 ஐடி நிறுவனங்கள் சுமார் 14,792 ஹெச்1பி விசாவை பெற்றுள்ளது.

 

 டிசிஎஸ்

டிசிஎஸ்

2015ஆம் நிதியாண்டில் டிசிஎஸ் 4,674 ஹெச்1பி விசா பெற்ற நிலையில், 2017இல் வெறும் 2,312 ஹெச்1பி விசா மட்டுமே பெற்றுள்ளது டிசிஎஸ். இது கிட்டதட்ட 51 சதவீத சரிவு.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

இக்காலகட்டத்தில் ஹெச்1பி விசா பெற்ற எண்ணிக்கையில் இன்போசிஸ் 57 சதவீதம் சரிந்துள்ளது. விப்ரோ பெற்ற விசா எண்ணிக்கை 3,079இல் இருந்து 1,210ஆகவும் குறைந்துள்ளது.

ஆனால் டெக் மஹிந்திரா மட்டும் 2015இல் வெறும் 1,576 விசா மட்டுமே பெற்ற நிலையில் 2017இல் 2,233 விசாகளைப் பெற்றுள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

H1B approvals for Indian IT companies drop by 43%

H1B approvals for Indian IT companies drop by 43%
Story first published: Wednesday, April 25, 2018, 13:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X