துப்பாக்கி விற்பனையில் கோடிகள் சம்பாதித்த ஜோடிகள்..!

By Vivek Sivanandam
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முழுவதும் தானாகவே இயங்கும் துப்பாக்கிகளைத் திரைப்படங்களில் சர்வசாதாரணமாகக் காட்டுவார்கள். ஆனால் உண்மையிலேயே மக்களுக்கு அவ்வளவு எளிதாகக் கிடைக்கும் பொருளல்ல அது.

கடந்த பத்தாண்டுகளில், பொறும்பான்மையான முதலீட்டாளர்கள் அமெரிக்க வரலாற்றில் நீண்ட பொருளாதார விரிவாக்கம் ஒன்றின் மூலம் அதிகப் பலனடைந்துள்ளனர். அவர்களுக்குப் பங்குகள், தங்கம் மற்றும் கிரிப்டோகரன்சிகள் கூட அதிக லாபம் பெறும் வழிகளாக இருந்தன. ஒரு சிலர் இயந்திரத் துப்பாக்கிகள் கூட லாபம் பெறும் வழியாகப் பயன்படுத்தினர்.

இயந்திரத் துப்பாக்கிகள்

இயந்திரத் துப்பாக்கிகள்

ஆம், இயந்திரத் துப்பாக்கிகளே தான். அதுவும் சமீபத்தில் நடைபெற்ற துயரமான பெரும் துப்பாக்கிக்சூடுகளில் பயன்படுத்தப்பட்ட எளிதில் கிடைக்காத செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள், துப்பாக்கி சட்டத்தின் மீது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் துப்பாக்கி கடைகளில் கிடைக்க வாய்ப்பே இல்லாத, அவ்வளவு எளிதில் வாங்க இயலாத இயந்திர துப்பாக்கிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த இயந்திரத் துப்பாக்கி ஒரு நிமிடத்தில், நீங்கள் டிரிக்கரை இழுத்துப்பிடிக்கும் வேகத்தைப் பொறுத்து 600 முதல் 800 ரவுண்டுகள் சூடக்கூடியவை. அதே நேரம் புஸ்மாஸ்டர் ஏ.ஆர் 15 ரகத் துப்பாக்கிகள் நிமிடத்திற்கு 45 ரவுண்டுகள் தான் சூடும். இந்த முழுவதும் தானாக இயங்கும் துப்பாக்கிகள் திரைப்படங்களைக் காட்டுவது போல இல்லாமல், ராணுவ வீரர்களைத் தவிர வேறு யாருக்கும் அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடாது.

கடுமையான துப்பாக்கி சட்டங்கள்

கடுமையான துப்பாக்கி சட்டங்கள்

மிகவும் கடுமையான துப்பாக்கி சட்டங்களில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்திக் குறுக்குவழிகளின் மூலமே அனைத்துத் துப்பாக்கிகளையும் வாங்க இயலும். சிவப்பு டேப்பின் உதவியுடன் இந்த இயந்திரத் துப்பாக்கிகள் சேகரிப்பதற்குச் சிறந்த பொருளாகவும், கடந்த பத்தாண்டுகளில் அதன் மதிப்பு இரு மடங்காகவும் அதிகரித்துள்ளது.

மிகப்பெரிய வர்த்தகர்

மிகப்பெரிய வர்த்தகர்

பிரேங் கோயிப்பெர்ட், அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய இயந்திரத்துப்பாக்கி வியாபாரிகளில் ஒருவர். மிசோரியின் ஊரகப்பகுதியான ஜஸ்பரில் உள்ள 100 ஏக்கர் பண்ணையில் அவரின் மனைவி, மகன் மற்றும் ஜெர்மன் செப்பர்டு நாயுடன், ஒரு தானியங்கி ஆயுதங்களின் சிறு சாம்ராஜ்ஜியத்தையே நடத்தி வருகிறார். ஒரு டொர்னடோ பாதுகாப்புப் பெட்டகத்தில் உள்ளே, பல மில்லியன் டாலர் மதிப்புள்ள தானியங்கி துப்பாக்கிகள் சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கும். உலகின் மிகப் பிரமலமான டாமி துப்பாக்கிகள், எம்2 ப்ரோனிங், யூசிஸ், ஸ்டெர்லிங் சப்-மிஷன் கன் மற்றும் ஏ.கே 47 அசால்ட் துப்பாக்கிகளும் இதில் அடக்கம்.

2017ம் ஆண்டின் வருவாய்

2017ம் ஆண்டின் வருவாய்

47 வயதான கோயிப்பெர்ட் கூறுகையில்,தனது மிட்வெஸ்ட் டேக்டிக்கல் நிறுவனம் 2017ம் ஆண்டில், சராசரியாக ஆயிரம் டாலர் மதிப்புள்ள 500க்கும் அதிகமான துப்பாக்கிகளை விற்றுள்ளதாகக் கூறுகிறார். அதன் மூலம் இரண்டு விமானங்கள் மற்றும் பீரங்கி டாங்கி வாங்கும் அளவிற்குச் சம்பாதித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

இவரின் சிறந்த வாடிக்கையாளரான, தொழில்நுட்ப நிறுவனத்தின் செயலதிகாரி, கடந்த ஆண்டுத் துப்பாக்கிகளுக்காக 1.6மில்லியன் டாலர் செலவளித்துள்ளர். அதே நேரம் எண்ணெய் மற்றும் விவசாய ஜாம்பவான் ஒருவர், 1.2 மில்லியன் டாலர் செலவளித்துள்ளதாகக் கோயிப்பெர்ட் கூறுகிறார். இவரின் கணக்குப்படி, ஒவ்வொருவரும் 2,00,000 டாலருக்கும் அதிகமாக ஆயுதங்களுக்குச் செலவுசெய்யும் 20 வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். தனிநபர் உரிமையைக் கருத்தில் கொண்டு அவர்களைப் பற்றிய தகவல்களைக் கூற மறுத்துவிட்டார். ஆனால் பொதுவெளியில் வெளியிடாமல், அரசாங்கமும் தானியங்கி ஆயுதங்கள் பற்றிய ஆவணங்களைப் பராமரிக்கிறது.

அமெரிக்காவில் யார்யாரிடம் இயந்திர துப்பாக்கிகள் இருக்கிறது?

அமெரிக்காவில் யார்யாரிடம் இயந்திர துப்பாக்கிகள் இருக்கிறது?

அமெரிக்க ஆல்கஹால், புகையிலை, துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்கள் ஆணையத்தைத் தவிர்த்து, அமெரிக்காவில் யார்யாரிடம் இயந்திர துப்பாக்கிகள் இருக்கிறது என்கிற தகவல் கோயிப்பெர்ட்-க்கு மட்டுமே நன்கு தெரியும் என்றே சொல்லலாம். துப்பாக்கிகளுக்கான அதீத தேவை, அதன் மதிப்பை பலமடங்கு அதிகரித்துவிட்டதாகக் கூறுகிறார் ஏ.டி.எப் சிறப்பு ஏஜென்ட் ஜோசுவா ஜாக்சன்.

 மிட்வெஸ்ட் டேக்டிக்கல்

மிட்வெஸ்ட் டேக்டிக்கல்

கோயிப்பெர்ட்ம் மற்றும் அவரின் மனைவியும் மிட்வெஸ்ட் டேக்டிக்கல் நிறுவனத்தை ஆரம்பித்த பின், சிறப்பாக விற்பனையாகும் துப்பாக்கி வகைகளின் விலை பத்தாயிரம் டாலர் வரை அதிகரித்துள்ளது. டீலர்கள், ஏலம் மற்றும் துப்பாக்கி கண்காட்சிகளில், இயந்திர துப்பாக்கி விலை வழிகாட்டி அமைப்பு திரட்டிய தகவல்களின் படி, 2004ல் 9000டாலராக இருந்த டாம்மி துப்பாக்கியின்(தாம்சன் எம்1) விலை 200 மடங்கு அதிகரித்துக் கடந்த ஜூலை மாதம் 27000 டாலராக இருந்தது.

விலை உயர்வு

விலை உயர்வு

ஹெக்லர்&கோச் எம்.பி5 வகைத் துப்பாக்கி 2003ல் 12,000டாலராக இருந்து தற்போது 42,000 டாலராக, சுமார் 250% விலை அதிகரித்துள்ளது. மேக்10 என அழைக்கப்படும் இயந்திர துப்பாக்கி, 2011 முதல் 2017 வரை இருமடங்கு விலை உயர்ந்து 8,000 டாலராக வரை அதிகரித்துள்ளது.

இரண்டாம் உலகப்போர்

இரண்டாம் உலகப்போர்

தற்போது மக்களிடம் இருக்கும் பெரும்பாலான இயந்திர துப்பாக்கிகள், இரண்டாம் உலகப்போர் முடிந்து வீடு திரும்பும் போது கொண்டுவரப்பட்டவை. கோயிப்பெர்ட் கூறுகையில், ஒரு வசதியான விதவை ஒருவர் தனது கணவரின் துப்பாக்கி சேகரிப்புகளை வெறுத்து, அவற்றை ஏ.டி.எப் மூலம் துணிந்தார். இது போன்ற ஆயுதங்களில் கவனம் செலுத்த வேண்டும் இல்லையென்றால் அவர்கள் துப்பாக்கிகளைச் சிதைத்து விடுவர். எனவே எந்தெந்த விற்பனையாளர்களுக்கு இந்தத் தொந்தரவு வேண்டாம் என்பதைக் கணக்கிட்டுகொண்டு இருப்பார் கோயிப்பெர்ட். இயந்திர துப்பாக்கிகளின் சிறப்பம்சங்களும் அவற்றின் மதிப்பை உயர்த்துகின்றன.

'ஆல் இன் ஆல்' கோயிப்பெர்ட்

'ஆல் இன் ஆல்' கோயிப்பெர்ட்

கோயிப்பெர்ட், வாங்குபவரிலிருந்து விற்பவராக மாறும் போது அவரின் பணி என்பது துப்பாக்கி டீலர், நிதி மேலாளர் மற்றும் தொல்பொருள் வல்லுநர் என்பதற்கு இடையில் இருந்தது. நாங்கள் பல வாடிக்கையாளர்களுடன் வேலை செய்திருக்கிறோம். அவர்கள் எவ்வித பொருட்களைச் சேகரிக்க அல்லது முதலீடுசெய்ய விரும்புகிறார்கள் என எங்களிடம் கூறுவார்கள். அதற்கேற்ப நல்ல தரம்வாய்ந்த அவர்களின் எதிர்ப்புகளுக்கு ஏற்றவாறு பொருட்களைத் தேடுவோம் என்கிறார் கோயிப்பெர்ட். மேலும் அனைத்துவித துப்பாக்கிகளையும் இருப்பு வைத்திருப்போம், அதனோடு அவற்றின் விலை வரலாற்றையும் சேர்த்தே வைப்போம். அதன் மூலம் எவ்வளவு லாபம் பெறுவோம் என்பதை அவற்றை வாங்குபவர் தெரிந்துகொள்ளலாம்.

துப்பாக்கித் தொழில்த்துறை எப்போது எல்லாம் வளர்ச்சி பெற்றுள்ளது

துப்பாக்கித் தொழில்த்துறை எப்போது எல்லாம் வளர்ச்சி பெற்றுள்ளது

கடந்த காலங்களில், பங்குச்சந்தை வீழ்ச்சியடையும் போதெல்லாம் துப்பாக்கித் தொழில்துறை வளர்ச்சியடைந்துள்ளது. அப்போது எல்லாம் மக்கள் பங்குசந்தை மற்றும் ரியல்எஸ்டேட்டில் போட்ட பணத்தைத் திருப்பி எடுத்துவிட்டு ஏதாவது வித்தியாசமாக அதே நேரம் பாதுகாப்பாக முதலீடு செய்யவேண்டும் என்கிறவர்களைப் பார்த்திருக்கிறேன் என்றார்.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

இயந்திர துப்பாக்கிகளில் 1 மில்லியன் டாலரை முதலீடு செய்யாவிட்டாலும், அதில் ஒரு பகுதியை கண்டிப்பாக முதலீடு செய்வார்கள். ஆனால், எண்ணெய் துறை வீழ்ச்சியைச் சந்தித்தபோது மட்டும் மிட்வெஸ்ட் டேக்டிக்கல்ஸ் நிறுவனமும் சற்று வீழ்ச்சியைச் சந்தித்தது. ஏனெனில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அத்துறையில் தான் இருக்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How one man got rich buying and selling machine guns in America

How one man got rich buying and selling machine guns in America
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X