வாவ்.. அதிக பேர் பார்த்த ஐபிஎல் போட்டி இதுதான்.. தல தோனியால் படைக்கப்பட்ட புதிய சாதனை!

By Valliappan N
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூர்: நேற்று சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில் நடந்த ஐபிஎல் போட்டியின்போது, இணையத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகளவிலான மக்கள் இப்போட்டியை பார்த்து ரசித்துள்ளனர்.

 

சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில் நடந்த த்ரில்லிங் போட்டியில் சென்னை அணி அதிரடியாக வெற்றி பெற்று இருக்கிறது. கடைசி நேரத்தில் சிக்ஸ் அடித்து டோனி சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.

அம்பதி ராயுடுவும் அதிரடியாக ஆடினார். இவரது அதிரடியால் எளிதாக 206 ரன்கள் எடுத்து சென்னை வெற்றி பெற்றது. லட்சக்கணக்கில் மக்கள் இந்த போட்டியை பார்த்துள்ளனர்.

பெரிய இலக்கு

பெரிய இலக்கு

நேற்றைய தினம் பெங்களூரில் ஆர்சிபி-க்கு எதிராக களம்கண்டது சிஎஸ்கே, இந்த போட்டி துவக்கத்தில் இருந்தே மிகவும் பரபரப்பாக சென்றது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 205 ரன்களை குவித்தது இதில் முக்கியமாக டீ காக் மற்றும் ஏபிடி வில்லியர்ஸ் அடித்த அரை சதம் அவர்களை இமாலய இலக்கிற்கு கூட்டி சென்றது.

மோசம்

மோசம்

இதை தொடர்ந்து களமிறங்கிய சிஎஸ்கே அணியில் டாப் ஆர்டரில் ராயுடுவை தவிர மற்றநபர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டம் இழந்தனர். வாட்சன் 7 ரன்களிலும், ரெய்னா 11 ரன்களிலும் பெவிலியன் திரும்பினார்கள். வாய்ப்பளிக்கப்பட்ட ஜடேஜாவும் 3 ரன்களில் அவுட்டானார். சென்னை அணி மோசமாக திணற தொடங்கியது.

தோணி அதிரடி
 

தோணி அதிரடி

இதை தொடர்ந்து களமிறங்கிய டோனி தொடக்கம் முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தார். கடைசி ரெண்டு ஓவர்களில் 31 ரன்கள் தேவை என்ற சுழிநிலையில் பிராவோ என்ட்ரி ஆனார். டோனி 34 பந்தில் 70 ரன்கள் எடுத்தார். அதில் 1 பவுண்டரி, 7 சிக்ஸ் அடித்தார். இவரது அதிரடியால் எளிதாக 206 ரன்கள் எடுத்து சென்னை வெற்றி பெற்றது.

டிஆர்பி கிங்

டிஆர்பி கிங்

சிஎஸ்கே என்றால் டிஆர்பி கிங் என்று தான் பெயர், இப்படி இருக்கையில் நேற்றை ஆட்டம் மிகவும் சுவாரசியம் அடைய ரசிகர்களின் ஆர்வம் அதிகமாகியது. ஹாட்ஸ்டார்-இல் செயலியில் ஐபிஎல் போட்டிகள் லைவ்ஆக ஒளிபரப்புமாகும், இதில் நேற்று எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக நபர்கள் பார்த்தனர்.

அதிகம்

அதிகம்

கடைசி ஓவரில் மட்டும் 68 லட்சம் நபர்கள் ஒரே சமயத்தில் கண்டுள்ளனர், தற்போது வரை நடந்த எந்த போட்டியையும் இவ்வளவு மக்கள் கண்டதில்லை. எனவே இது சிஎஸ்கே அணியின் சாதனையாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் இப்போதுவரை இதுதான் அதிகபட்ச பார்வையாளர் எண்ணிக்கை ஆகும்.

வியாபாரம்

வியாபாரம்

இந்த வியாபாரம் தான் விளம்பரதாரர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக உள்ளது. போட்டியின் போது வரும் விளம்பரங்கள் மக்கள் மத்தியில் ஆழமாக பதியும் இதை பயன்படுத்தியே பல நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை பெரிய அளவில் வளர்ச்சி அடைய செய்துள்ளனர்.

டிஆர்பி என்பதே வியாபாரம் தான்.

கடைசி நிமிட வெற்றி

ஒரு மேட்ச்னா பரவலை எல்லாம் மேட்சும் லாஸ்ட் ஓவர்னா எப்படி?

தல போல வருமா

வயசுனாலும் உங்க ஸ்டைலும் பவரும் அப்படியே தான் இருக்கு!

வீரர்களின் அணி வாரியான சம்பள பட்டியல்..!

வீரர்களின் அணி வாரியான சம்பள பட்டியல்..!

ஐபிஎல் 2018: விளையாட்டு வீரர்களின் அணி வாரியான சம்பள பட்டியல்..!

உலகிலேயே விலையுர்ந்த கிரிக்கெட் பேட்

உலகிலேயே விலையுர்ந்த கிரிக்கெட் பேட்

உலகிலேயே விலையுர்ந்த கிரிக்கெட் பேட் யாருடையது தெரியுமா..? #Thala

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CSK match gets highest trp in hotstar

CSK match gets highest trp in hotstar
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X