மும்பையின் வளர்ச்சி அனைத்தும் பேப்பரில் மட்டுமே.. நிஜத்தில் இல்லை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை.. இந்தியாவின் மிக முக்கிய வர்த்தக நகரம். இந்த நகரத்தை அடுத்தக் கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும் முடிவுடன் தற்போது பிரம்மாண்டமான வகையில் மும்பை வளர்ச்சி திட்டம் 2034 என்ற மிகப்பெரிய திட்டத்தை உருவாக்கப்பட்டுள்ளது.

 மும்பை வளர்ச்சி திட்டம் 2034

மும்பை வளர்ச்சி திட்டம் 2034

இத்திட்டத்தின் கீழ் மும்பையில் 10 லட்சம் மலிவான வீடுகள்ஷ 80 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கும் வகையில் தியேட்டர், அருங்காட்சியகம், பார்க், விளையாட்டு மைதானம், பூங்கா, முதியோர் இல்லம், வீடு இல்லாதோருக்காகத் தங்கும் வசதி ஆகியவற்றுடன் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் உண்மை நிலை என்ன தெரியுமா..?

ஆனால் உண்மை நிலை என்ன தெரியுமா..?

மும்பையின் 1991 வளர்ச்சி திட்டத்தில் இன்னும் 20 சதவீதம் கூட முடிக்கப்படாமல் உள்ளது தான் மும்பை நகர நிர்வாகத்தின் உண்மை நிலை.

 அஜோய் மேத்தா

அஜோய் மேத்தா

பிஎம்சி வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதில் மோசமான நிலையில் உள்ளது 1991 வளர்ச்சி திட்டத்தில் வெறும் 20 சதவீதமே நிறைவேற்றப்பட்டுள்ளது என Brihanmumbai Municipal Corporation கமிஷனர் அஜோய் மேத்தா கூறியுள்ளார்.

பேப்பர் மட்டுமே..

பேப்பர் மட்டுமே..

இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 10 லட்சம் மலிவான வீடுகள் மற்றும் 80 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கும் திட்டமும் நிறைவேற்றப்படாமல் பேப்பரில் மட்டுமே இருக்கப்போகிறது என அஜோய் கூறியுள்ளார்.

வளர்ச்சி திட்டம் 2034

வளர்ச்சி திட்டம் 2034

இத்திட்டத்தில் பிஎம்சி அமைப்பு மலிவான வீடுகளைக் கட்டுவதற்காக உப்புப் படுகை நிலத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் படி வளர்ச்சி இல்லாமல் இருக்கும் 3,355 ஹெக்டர் நிலத்தில் 2,100 ஹெக்டர் நிலத்தைப் பயன்படுத்தவும் 330 ஹெக்டர் உப்புப் படுகை நிலத்தையும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

அச்சம்

அச்சம்

உப்புப் படுகை நிலத்தைப் பயன்படுத்துவதால் வெள்ளம் வரவும் வாய்ப்புகள் உள்ளது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

மும்பையில் மட்டும் 80 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டுமென்றால் அரசு பெரிய அளவிலான வர்த்தகத் தளத்தை உருவாக்க வேண்டும் இல்லையெனில் இதுவும் நிறைவேற்றப்படாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mumbai's growth only on paper not in real

Mumbai's growth only on paper not in real
Story first published: Thursday, April 26, 2018, 13:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X