விரைவில் வீட்டு வேலை தொழிலாளர்கள் சம்பளத்தினை வங்கி கணக்கில் தாள் அளிக்க வேண்டும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் வீட்டில் வேலைக் காரர்கள், வாகன ஓட்டுனர் அல்லது குழந்தை பரிமாறிப்பவர்கள் போன்றவர்கள் இருக்கிறார்களா? விரைவில் அவர்கள் சம்பளம் வங்கி கணக்கில் அளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அவர்களுக்கான ஆவணங்களைச் சரியாக நிர்வகிக்க வேண்டும் என்றும் தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

 

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

வீட்டு வேலை செய்யும் பெண்கள் மீது அல்லது பிற ஊழியர்களைத் துஷ்பிரயோகம், செய்தல், துன்புறுத்தல், வன்முறை உள்ளாதல் மற்றும் அவர்களுக்குச் சமூக உரிமை மற்றும் குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றில் மறுப்பு போன்றவற்றைத் தவிர்த்து அவர்களுக்கான உரிமைகளை மீட்டு எடுக்க விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வீட்டு வேலை செய்யும் ஊழியர்கள்

வீட்டு வேலை செய்யும் ஊழியர்கள்

இந்தியாவில் தோராயமாக 50 லட்சத்திற்கும் அதிகமான வீட்டு வேலை செய்யும் ஊழியர்கள் உள்ளதாகவும், அவர்களை இனி நிர்வகிக்க வீட்டு முதலாளிக்கும் கூடுதல் ஆவணங்கள் தேவைப்படும் என்றும் குறைந்தபட்ச ஊதிய போன்றவை முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவைப் பின் தொடரும் மத்திய அரசு
 

மகாராஷ்டிராவைப் பின் தொடரும் மத்திய அரசு

வீட்டு வேலை செய்யும் ஊழியர்களை இதற்கான ஒரு அமைப்பில் பதிவு செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்படும், இது போன்ற ஒரு அமைப்பினை ஏற்கனவே மகாராஷ்டிரா அரசு நிறுவியுள்ளது. அதே போன்ற ஒரு அமைப்பை மத்திய அரசு விரைவில் முடிவு செய்ய உள்ளது.

அரசு விவாதிப்புள் உள்ள முக்கியமானவை

அரசு விவாதிப்புள் உள்ள முக்கியமானவை

குறைந்தபட்ச சம்பளம் 9,000 மற்றும் ஆண்டுக்கு 15 நாட்கள் கட்டாய விடுமுறை, மருத்துவக் காப்பீடு, ஓய்வூதிய நன்மைகள் எனப் பலவற்றை உள்ளடக்கும் விதமாகத் திட்டத்தினை நிர்வகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

எப்போது நடைமுறைக்கு வரும்?

எப்போது நடைமுறைக்கு வரும்?

தொழிலாளர் அமைச்சகம் இந்தத் திட்டத்தினை அடுத்த 3 வருடத்தில் அறிமுகம் செய்ய உள்ளது. ஆனால் இதில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது. எனவே வீட்டு வேலைக்கு ஆட்களை வைத்து இருப்பவர்களுக்கு விரைவில் நிறையச் சட்ட வேலைகள் காத்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Paperwork may become mandatory for house helps; salary can't be paid informally

Paperwork may become mandatory for house helps; salary can't be paid informally
Story first published: Saturday, April 28, 2018, 20:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X