2018ஆம் ஆண்டின் 10 சிறந்த பிசினஸ் ஐடியா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் தொழிலில் நீங்கள் வெற்றி அடைய வேண்டும் என்றால் உங்கள் தொழில் தனிச்சிறப்பு மற்றும் படைப்பாற்றல் ஆகிய இரண்டையும் சார்ந்து இருக்க வேண்டும். நீங்கள் மக்களின் பிரச்சனைகளை எப்படி முடித்து கொடுக்கின்றீர்கள் என்பதில் தான் உங்களின் வெற்றி உள்ளது. நீங்கள் ஒரு இளம் மற்றும் மாறுபட்ட தொழிலதிபர் மற்றும் புதிய தனிப்பட்ட வணிக யோசனைகள் தேடுபவர் என்றால் நீங்கள் சரியான இடத்தில் இருக்கின்றீர்கள் என்று அரித்தம் இதோ 10 வெற்றிகரமான வியாபார யோசனைகளை பார்ப்போம்.

சர்வே அடிப்படையிலான இலவச உணவு:

சர்வே அடிப்படையிலான இலவச உணவு:

உணவு அடிப்படையிலான முதல் தொழிலை பார்ப்போம். இதற்கு நீங்கள் ஒரு இணையதளத்தை தொடங்கி அதன் மூலம் உணவு ஆர்டர்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற வேண்டும். அதில் ஒரு சர்வே வைத்து அந்த சர்வேயை நிரப்புபவர்களுக்கு இலவச உணவு என்று அறிவிக்க வேண்டும். பல ரெஸ்டாரெண்டுகள் சர்வேக்களை பெற பணம் கொடுக்கவே தயாராக இருக்கும்போது உணவை இலவசமாக கொடுக்க யோசிக்காது. வாடிக்கையாளர்களின் ஒரிஜினல் ஆர்டரோடு, அவர்களது இலவச உணவையும் சேர்த்து டெலிவரி செய்ய வேண்டும். இது இரண்டு பேருக்குமே வெற்றியை தரும் ஒரு ஆலோசனை. ரெஸ்டாரெண்ட்களுக்கு பிசினஸ் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு உணவும் கிடைக்கும். மேலும் இது எளிதில் மற்றவர்களை சென்றடையும் ஒரு விளம்பரமாகவும் இருக்கும். அமெரிக்காவில் இந்த முறையை ஒருசில நிறுவனங்கள் பின்பற்றுகின்றன.

அலுவலகத்திற்கான இடம் மற்றும் உபகரணங்கள் வழங்குதல்:

அலுவலகத்திற்கான இடம் மற்றும் உபகரணங்கள் வழங்குதல்:

இரண்டாவது தனிப்பட்ட வணிக யோசனை அலுவலக இடத்தை அல்லது அலுவலக உபகரணங்கள் பகிர்ந்து மூலம் பணம் சம்பாதிப்பது. இன்றைய உலகில் எல்லோருக்கும் அலுவலக இடம் உண்டு. பல புதிய தொழில்முனைவோர், தனிப்பட்டோர், தொடக்கங்கள் மற்றும் சிறு தொழில்கள் பகிர்வு அடிப்படையில் அலுவலக இடத்தை வாடகை அடிப்படையில் தேடுபவர்களுக்கு ஒரு இடத்தை கொடுத்து அவர்களுக்கு உதவுவது ஒரு நல்ல வணிக யோசனை. விவொர்க் என்ற நிறுவனம் இந்த ஆலோசனையை வெற்றிகரமாக செய்து வருகிறது.

பூஜை சேவை:

பூஜை சேவை:

இந்தியாவில், கடவுள் தெய்வீக ஆசீர்வாதம் பெற பூஜை செய்வது வழக்கமான ஒன்று. இருப்பினும், நல்ல பூஜை செய்பவர்களை கண்டுபிடிப்பது ஒரு பெரிய வேலை. இந்த பிரச்சனையை தீர்க்க நீங்கள் ஆன்லைனில் பூஜை புக்கிங் சேவையை ஆரம்பிக்கலாம். பூமி பூஜை, வாஸ்து, திருமணம், கதா போன்ற பல்வேறு பூஜை சேவைக்காக நீங்கள் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை பெற்று கொண்டு செய்யலாம். இது ஒரு வெற்றிகரமான லாபகரமான வணிக யோசனை.

கர்ப்பிணி பெண்களுக்கு உடற்பயிற்சி வகுப்பு:

கர்ப்பிணி பெண்களுக்கு உடற்பயிற்சி வகுப்பு:

நல்ல ஆரோக்கியத்தை பராமரித்தல் மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு மிகவும் முக்கியம். இன்று பல கர்ப்பிணி பெண்கள் உடற்பயிற்சி அல்லது யோகா வகுப்பை தேடும் நபர்களாக உள்ளனர். எனவே, நீங்கள் சொந்தமாக ஒரு கர்ப்பிணி பெண் உடற்பயிற்சி நிலையத்தை தொடங்கி பணம் சம்பாதிக்க ஒரு நல்ல வழியாகும். இருப்பினும், உங்கள் வகுப்பிற்கான பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு கர்ப்பிணிப் பெண்ணால் செய்யக்கூடிய உடற்பயிற்சியின் அனுபவமும் புரிந்துணர்வும் கொண்ட ஒரு பயிற்சியாளரைத் தேர்வு செய்ய வேண்டும்

குழந்தைகளுக்கான சாகச விளையாட்டு மையம்:

குழந்தைகளுக்கான சாகச விளையாட்டு மையம்:

அடுத்த தனிப்பட்ட ஒரு வணிக யோசனை என்னவெனில் குழந்தைகள் விளையாடும் நிலையத்தை தொடங்குவது. . விளையாட்டு மையம் அல்லது விளையாட்டு பகுதி தொடங்குவதற்கு, உங்களுக்கு பொருத்தமான இடம் மற்றும் மூலதனம் தேவை. இந்த வணிகத்திற்கான இடத்தை மிக கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். விளையாட்டு மையம் அருகில் தோட்டம், உணவகம் அல்லது ஷாப்பிங் மால் ஆகியவை இருந்தால் நல்லது.

 

 

தனிச்சிறப்பு மிக்க டீ நிலையம்:

தனிச்சிறப்பு மிக்க டீ நிலையம்:

அடுத்த தனித்துவமான வணிக யோசனை நீங்கள் ஒரு சொந்த டீ விற்பனை நிலையத்தை தொடங்குவது. பெரும்பாலான டீ விற்பனை நிலையத்தில் சாதாரண டீ விற்பனை நடந்து வருவதால் ஒரு நல்ல திருப்தியான டீ கொடுக்கும் வகையில் ஒரு டீ விற்பனை நிலையத்தை தொடங்கினால் நல்ல வருமானம் கிடைக்கும். நல்ல தேநீராக இருந்தாலும் சிறப்பான சேவையை தர வேண்டும். அதில்தான் இந்த தொழிலின் வெற்றி அடங்கியுள்ளது.

ரெடிமேட் பொருட்கள்:

ரெடிமேட் பொருட்கள்:

இன்று மக்கள் சோம்பேறியாகி வருகிறார்கள், அவர்கள் தங்கள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த ரெடிமேட் ஆடைகளை வாங்க தயாராக உள்ளனர். எனவே ஒரு ஆன்லைன் ரெடிமெட் வியாபாரத்தை ஆரம்பிப்பது ஒரு தனிப்பட்ட வணிக யோசனை. இந்த ரெடிமேட் கடையில் பயணம், தனிப்பட்ட பாதுகாப்பு, உடல்நலம், குழந்தை, கார், வீடு, அலுவலகம் ஆகியவற்றிற்கான உபகரணங்களை விற்பனை செய்யலாம். நீங்கள் விற்பனை செய்யும் ஒவ்வொரு பொருட்களும் வாடிக்கையாளர்கள் மிஸ் பண்ண கூடாது என்று நினைத்து வாங்கும் வகையில் இருக்க வேண்டும்.

தயாரிப்பாளர்களுக்கான இந்த வகையான பொருட்கள் எந்தவொரு பொருட்களையும் இழக்காததால் மக்களுக்கு உதவும். ரெடிமேட் கிட்களை வழங்கும் பிரீமியம் வசூலிக்க முடியும். மினிமஸ்.பிஸ் வாடிக்கையாளர்களுக்கு இந்த கருத்தை ஏற்கனவே வழங்கி வருகிறது. Minimus.biz ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கு இந்த கருத்தை வழங்கி வருகிறது.

 

பரிசு பொருட்கள் விற்பனை நிலையம்:

பரிசு பொருட்கள் விற்பனை நிலையம்:

ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் பரிசை தேர்ந்தெடுப்பது இன்று ஒரு பிரச்சனையாக உள்ளது. தனிச்சிறப்பு மிக்க பரிசை நீங்கள் ஆக்கபூர்வமாகவும் வசதியாகவும் வைத்திருந்தால், அது உங்களுக்கு மிகவும் நல்ல தனிப்பட்ட வணிக யோசனையாக இருக்கலாம். மக்களுக்கு தேவையான, சரியான பரிசு பொருட்களுடன் கூடிய பரிசு விற்பனை நிலையம் ஒரு நல்ல தொழில் ஆலோசனையாக கருதப்படுகிறது.

படுக்கை ஓய்வு சேவை (Bed rest service)

படுக்கை ஓய்வு சேவை (Bed rest service)

அடுத்த தனித்துவமான வணிக யோசனை எல்லா கர்ப்பிணிப் பெண்களுக்கும் குழந்தைகளும் எதிர்பார்க்கும் ஒன்று. கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் தேவைப்படும் உதவிகளை செய்ய ஒரு நல்ல பயிற்சியுள்ள பெண் அல்லது நர்ஸ் சேவை வழங்குவதே இந்த யோசனை. பிரசவத்திற்கு முன் வழங்குவதற்கான சேவைகளை வழங்குவதன் மூலம் நீங்கள் அவரது உதவியை நீட்டிக்க முடியும். இந்த சேவைகளில் தனிப்பட்ட கவனிப்பாளரை வீட்டுவசதி, மருத்துவமனை தயாரித்தல், குழந்தை பெயர் பதிவு, வளைகாப்பு, டயபர் விநியோக சேவை ஆகியவை அடங்கும். இந்த சேவை மேற்கத்திய நாடுகளில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த தொழிலை ஏற்கனவே அமெரிக்காவின் பெட் ரெஸ்ட்ரீஸ் கான்செர்ஜ் என்ற நிறுவனம் வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்புதல்:

வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்புதல்:

அடுத்த தனிப்பட்ட வணிக யோசனை என்று கூறப்படுவது என்னவெனில் இன்று பலர் தங்கள் வீடுகளில் உள்ள பணியை செய்ய உதவும் வேலையாட்களுக்காக பணத்தை செலவழிக்க தயாராக உள்ளனர். வீட்டில் உள்ள பல்வேறு பணிகளைச் செய்வதற்கு வீட்டு வேலை செய்பவர்கள் தேவை உள்ளது. வீடை பராமரித்தல், தோட்டக்கலை, துணிகளை துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது போன்ற பல்வேறு சேவைகளை ஆட்களை அனுப்பும் சேவை செய்யும் தொழிலை தொடங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 Unique Business Ideas for 2018

10 Unique Business Ideas for 2018 - Tamil Goodreturns | 2018ஆம் ஆண்டின் 10 சிறந்த பிசினஸ் ஐடியா - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Sunday, April 29, 2018, 17:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X