இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1 தேதி அமலுக்கு வந்த பிறகு 376 திருத்தங்களை ஜிஎஸ்டி கவுன்சில் செய்துள்ளது.

 

ஜிஎஸ்டி கவுன்சிலின் 27 வது கூட்டம் இன்று பெற உள்ள நிலையில் அதில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்களும் பங்கேற்கிறார். எனவே இந்தக் கூட்டத்தில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

ஜிஎஸ்டி தாக்கல் எளிமை

ஜிஎஸ்டி தாக்கல் எளிமை

ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததில் இருந்து நீண்ட காலமாக இருக்கும் பிரச்சனை ஜிஎஸ்டி தக்கல் செய்வதில் உள்ள சிக்கல் ஆகும். இன்றைக் கூட்டத்தில் அதனை எளிமையாக்குவது குறித்த அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கின்றனர். இதில் புதிய வகையாக ஜிஎஸ்டி தாக்கல் செய்யக் கூடிய மூன்று வழிகள் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.

அதில் ஒன்று வரி செலுத்தாத வரை தற்காலிக கடன் அளிக்கப்படக் கூடாது. இரண்டாவது மாதிரியாக, தற்காலிக கடன் வழங்கப்படும், ஆனால் வருமானத்திற்கு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் வரி தாக்கல் செய்யப்பட வேண்டும், வரிகளைச் செலுத்த வேண்டும் அல்லது கடன் தொகை திருப்பிவிடப்படும். மூன்றாவது பொருட்கள் சப்ளை செய்பவர் ரசீதுகளை வாங்கியவர் பதிவேற்றியதை உறுதி செய்த உடன் ஒரு முறை கடனை நீட்டிக்கலாம்.

 

ஜிஎஸ்டிஎன் அரசு உரிமை
 

ஜிஎஸ்டிஎன் அரசு உரிமை

ஜிஎஸ்டிஎன் அல்லது ஜிஎஸ்டி நெட்வொர்க் என்பது ஜிஎஸ்டி கணக்கீடு மற்றும் சேகரிப்பிற்கான தகவல் தொழில்நுட்பத்தை (IT) மேடையை இயக்கும் நிறுவனமாகும். பல முறை இந்த நெட்வொர்க் சேதம் அடையும் நிலையில் எல்லாம் விமர்சனத்திற்குள்ளானது. இதனால் வணிக நிறுவனங்களால் சரியான நேரத்தில் ஜிஎஸ்டி-ஐ தாக்கல் செய்ய முடியாமலும் போனது. ஜிஎஸ்டிஎன்-ஐ தனியார் நிறுவனங்கள் வசம் அளித்துள்ளதே இதற்கான காரணம் என்றும் பலர் கூறுகின்றனர். இன்ஃபோசிஸ் நிறுவனம் ஜிஎஸ்டிஎன்-ஐ இயக்கு வந்தாலும் எச்டிஎப்சி, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, என்எஸ்ஈ, எல்ஐசி ஹவுசிங் ஃபினாஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வசம் 51 சதவீத பங்குகள் உள்ளனர். மீதம் மத்திய அரசு வசம் உள்ளது. ஜிஎஸ்டிஎன்-ன் 100 சதவீத பங்குகளையும் இந்திய அரசு எடுத்துக்கொள்வதற்கான விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் அருண் ஜேட்லி தெரிவித்து இருந்தார்.

தனியார் வசம் உள்ளதால் தான் ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருக்கமாக உள்ளது, தனியார் நிறுவனங்கள் இதற்கான கட்டமைப்பு எப்படி உள்ளது, வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டதாக உள்ளதா என்றும் ஆராய வேண்டும் என்றும் அதற்குச் சுதந்திரமாகச் செயல்படும் உரிமையும் அளிக்கப்பட வேண்டும். ஏப்ரல் 1 முதல் ஜிஎஸ்டி இ-வே பில் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் பல முக்கிய மாநிலங்களில் எப்போது முதல் அமலுக்கு வரும். தரவு பாதுகாப்பு போன்ற காரணங்களால் ஜிஎஸ்டிஎன் முழுமையாக அரசு மையம் ஆக்கும் முடிவு எடுக்கப்படம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு டிஸ்கவுண்ட்

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு டிஸ்கவுண்ட்

பொருட்களை விற்பனை செய்யும் போது 100 ரூபாய்க்கு 2 சதவீதம் சலுகை அளித்து வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் 1 விலையும், பணமாகச் செலுத்தினால் ஒரு விலையும் செலுத்த வேண்டும் என்ற முறையினை அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் இது குறித்த விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அமலுக்கு வர வாய்ப்புகள் உள்ளது.

புதிய செஸ்

புதிய செஸ்

விவசாயிகளின் நலனுக்காக இறக்குமதி சர்க்கரை மீதான சுங்கத் தீர்வை 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக அதிகரித்தல். 2018ம் ஆண்டுப் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சர்க்கரை உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளை மீட்பதன் உச்ச வரம்பை மாற்றுவது போன்ற அறிவிப்புகள் வெளிவரலாம்.

ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசமை மீண்டும் கொண்டு வருதல்

ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசமை மீண்டும் கொண்டு வருதல்

சென்ற கூட்டத்தில் ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம் முறைக்கு மத்திய அரசு ஜூன் 30 வரை ஒத்திவைக்க முடிவு செய்தது. தற்போது அதனைச் சில மாநிலங்கள் திரும்பவும் அறிமுகம் செய்ய வேண்டும் என்று கேட்டு வருகின்றன. 20 லட்சம் ரூபாய்க்கும் குறைவாகச் செய்யப்படும் வணிகங்களை நடத்துபவர்கள் ஜிஎஸ்டிக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்ற நிலையில் அதில் சில மாற்றங்களைச் செய்ய வாய்ப்புகள் உள்ளது. ரிசர்ஸ் சார்ஜ் மெக்கானிசத்தின் கீழ் பொருட்கள் அல்லது சேவைகளைப் பெறுபவரிடம் இருந்து ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு, அரசாங்கத்துடன் வரிக்கு வரவு வைப்பதாகும். தற்போது இந்தச் சேவை தற்போது பதிவு செய்யாமல் வர்த்தகம் செய்து வருபவர்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இவர்களுக்கு ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம் கீழ் வரி விதிக்க வாய்ப்புகள் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 possible moves expected from today's big GST meeting

5 possible moves expected from today's big GST meeting
Story first published: Friday, May 4, 2018, 17:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X