ரயில்வே இடங்களை குறிவைக்கும் அமேசான், கோகோ கோலா.. அரசு நிலத்தில் புதிய திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமேசான் மற்றும் கோகோ கோலா உள்ளிட்ட நிறுவனங்கள் பல முக்கிய நகரங்களில் இந்தியன் ரயில்வேஸ்க்கு சொந்தமான பயன்படுத்தப்படாமல் உள்ள "கூட்ஸ் ஷெட்ஸ்" மற்றும் காலியிடங்களைக் குத்தகைக்கு எடுத்து தங்களின் தளவாட நெட்வொர்க்குக்கான இயந்திரமயமாக்கப்பட்ட கிடங்குகளாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளன.

 

இந்திய ரயில்வேஸ்-ன் வருவாயினை உயர்த்துவதற்காக நாடு முழுவதிலும் இருந்து 300 கூட்ஸ் ஷெட்டுகள் உள்ள நிலையில் அவற்றில் 50 இடங்களில் பொது - தனியார் கூட்டமைப்புடன் இடங்களைக் குத்தகைக்கு விட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

முதற் கட்டம்

முதற் கட்டம்

இதன் முதற் கட்டமாகத் தன்பாத், வைசாக் மற்றும் தில்லி ஆகிய இடங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ள கூட்ஸ் ஷெட்களைக் கண்டறியப்பட்டுக் குத்தகைக்கௌ விடப்பட உள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு இந்த இடங்கள் பயன்படும் என்றால் ஒப்பந்தங்கள் போடப்படும் என்றும் ரயில்வே நிர்வாகத்தின் தலைவரான அஸ்வனி லோகானி தெரிவித்துள்ளார்.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

தனியார் நிறுவனங்களின் பட்டியலில் முதல் இடத்தினை அமேசான், கோகோ கோலா நிறுவங்கள் உள்ளன என்று ரயில்வே துறை அமைச்சகத்தில் இருந்து தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.

அமேசான் மற்றும் கோகோ கோலா பொன்று பல முக்கிய எப்எம்சிஜி நிறுவனங்கள் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்தத் திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளன என்றும் அதிகாரிகள் நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.

நிறுவங்கள் கருத்து தெரிவிக்க மறுப்பு
 

நிறுவங்கள் கருத்து தெரிவிக்க மறுப்பு

அமேசான் இந்தியா மற்றும் கோகோ கோலா நிறுவனங்களை இது குறித்து மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்ட கேட்டதற்குப் பதில் அளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

 எவ்வளவு நாட்களுக்குக் குத்தகை அளிக்கப்பட உள்ளது?

எவ்வளவு நாட்களுக்குக் குத்தகை அளிக்கப்பட உள்ளது?

ஒவ்வொரு ரயில்வே ஷெட்களையும் புதுப்பிக்க 10 முதல் 20 கோடி ரூபாய் வரை செலவு ஆகும் என்றும் இதனை 30 முதல் 35 வருடங்கள் வரை தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்க விட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ரயில் சரக்கு போக்குவரத்து

ரயில் சரக்கு போக்குவரத்து

ரயில் மூலம் தான் எல்லா மாநிலங்களுக்கும் பல முக்கிய நிறுவனங்கள் தங்களது பொருட்களைக் கொண்டு சென்று வருகிறன. அப்போது ரயில்வே பொருட்களைச் சேமித்து வைக்க இடங்கள் அளிக்காததால் அதற்காக வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று சேமிக்கக் கூடுதல் செலவாகி வருகிறது. தற்போது ரயில்வே எடுத்து வரும் இந்த முயற்சியால் கண்டிப்பாகக் கார்ப்ரேட் நிறுவனங்கள் பெறும் அளவில் பயனடையும் என்றும் தொழில் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

போட்டி

போட்டி

இந்திய ரயில்வே நிர்வாகமானது சாலை போக்குவரத்துக்குப் போட்டியாக வேகமாகச் சரக்கு போக்குவரத்துச் சேவையினை அளிக்கப் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் ஒரு பக்கம் தனியார் நிறுவனங்களை இது போன்ற கவர்ச்சி சலுகைகள் மூலமாகக் கவரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

மக்களுக்குப் பாதிப்பு

மக்களுக்குப் பாதிப்பு

இந்த நடவடிக்கையால் கூட்ஸ் ஷெட்கள் அருகிள் வீடு கட்டி வாழும் இடங்களைக் கையகப்படுத்தும் முயற்சியில் ரயில்வே நிர்வாக ஏற்கனவே ஈடுபட்டு வருகிறது. ஒரு வேலை நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளைச் செய்யவில்லை என்றாலும் சரக்கு ஏற்றிச் செல்ல கண்டைனர் லாரிகள் மற்றும் வாகனங்கள் சென்று வர வாய்ப்புகள் உள்ளது. அதனால் ஏற்படும் காற்று தூசி மற்றும் மாசு போன்றவற்றல் அங்கு வாழும் மக்கள் பாதிப்படைவார்கள் என்று சமுக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon, Coke may lease Indian Railways land & goods sheds to build warehouses

Amazon, Coke may lease Indian Railways land & goods sheds to build warehouses
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X